வியாழன், 24 ஜூலை, 2014

நான் பார்த்த ப்ளூ பிலிமும், அதன் பின்னால் உள்ள ஒரு உண்மைச் சம்பவமும்!

சனிக்கிழமை  சாயங்காலம்  பொழுது போகாமல் வெட்டியாய் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அலுவலகத்தில் உடன் பணி புரியும் நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு.  என்ன சார்? ப்ரீயா  இருக்கீங்களா?. எதற்காக கேட்கிறார் என்று புரியாமல் பொத்தாம் பொதுவாக என்ன சார் விஷயம் என்று கேட்டேன். வேற ஒன்னும் இல்ல என்று ஆரம்பித்தார் நண்பர். உலகம் அழியப்போகிறது என்ற விஷயத்தை சொல்ல வந்தால் கூட வேற ஒன்னும் இல்ல என்று விஷயத்தை ஆரம்பிப்பதுதான் நண்பரின் வழக்கம். ப்ரீயா இருந்தா வீட்டுக்கு வாங்க. ரொம்ப போரடிக்குது. பேசிக்கிட்டு இருக்கலாம் என்றார். அலுவலகத்தில் பணிபுரியும் இன்னும் மூன்று நண்பர்களின் பெயரைச் சொல்லி அவங்களும் வந்திருக்காங்க என்றார். சரி சும்மா உட்கார்ந்துகிட்டு இருக்கிறதுக்கு ஏதாவது அரட்டை அடிச்சுட்டு வரலாம்னு நானும் கிளம்பி போனேன்.

நண்பரின் வீட்டுக்கு போனால் அங்கு ஏற்கனவே அரட்டை ஆரம்பித்திருந்தது. நானும் அந்த ஜோதியில் கலந்து கொண்டேன். அரட்டை அரசியல், அலுவலகம் என்று பல விஷயங்களுக்குச் சென்றுவிட்டு இறுதியில் சினிமா பக்கம் திரும்பியது. சினிமாவின் தற்போதைய டிரென்ட் பற்றி எனக்கு அவ்வளவாக ஞானம் இல்லாததால் நான் அவர்களுடைய பேச்சை ஒரு பார்வையாளராக மட்டும் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்போது டிவியில்  நடிகை ரிச்சா பலோட் நடித்த ஒரு சீன் ஓடிக்கொண்டிருந்தது. உடனே ஒரு நண்பர் சிரித்துக்கொண்டே நான் ரிச்சா பலோட்டோட ப்ளுபிலிம் பார்த்திருக்கேன்  என்றார். கம்ப்யூடர் ஆப்ரேட்டரான   மற்றொரு நண்பர் அதெல்லாம் போலி வீடியோக்கள். அதெல்லாம் நடிகை முகச்சாயலில் உள்ள வேற பெண்களை வைத்து எடுக்கப்பட்டது. நீங்க ஏமாந்திடீங்க என்று அந்த நண்பரை சீண்டினார்.  நண்பருக்கு தான் ஏமாந்து விட்டதாக சொன்னதைக் கேட்டு சற்று வருத்தம். அதெல்லாம் கிடையாது. அது ஒரிஜினலா நடிகையோட வீடியோதான் . அந்த வீடியோ இப்போ கூட என்கிட்டே இருக்கு என்றார். சடாரென எல்லோருடைய பார்வையும் அவர் பக்கம் திரும்பியது. இருந்ததிலேயே சற்று வயதான் நண்பர் ஏம்பா இப்ப கைல வச்சிருக்கியா என்றார். வீடியோ உண்மையா? போலியா? என்ற விவாதத்திலிருந்து கவனம் விலகி, ஏதாவது வீடியோ கிடைத்தால் இப்போதே பார்த்துவிடலாம் என்ற ஆசை அனைவரின் கண்களிலும் தெரிந்தது. இந்த பென் டிரைவ்ல இருக்கு என்று நண்பர் ஒரு பென் டிரைவ்வை காட்டினார்.

வீட்டிற்கு சொந்தக்கார நண்பர் வீட்டின் கதவை அடைத்துவிட்டு வந்தார். கம்ப்யூடர் ஆப்ரேட்டர் நண்பர் பென் டிரைவ்வை சொருகி படத்தை ஓடவிட்டார். படம் ஓடத்தொடங்கியது. அது ஒரு ஆடம்பரமான ஹோட்டல் அல்லது ரிசார்ட் ரூம் போல் இருந்தது. ஒரு பெண் கட்டிலில் அமர்ந்திருந்தாள். நல்ல அழகான பெண். பெரிய உருண்டையான கண்கள். கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் நடிகை ரிச்சா பலோட் போல் இருந்தாள். ஒரு அழகான வாலிபன் கேமிராவை ( வீடியோ காசெட்டில் பதிவு செய்யும் பழைய காலத்து கேமிரா) வைத்து அவளையும் தன்னையும் படம் பிடித்துக்கொண்டிருந்தான். கவனமாக தன்னுடைய முகம் வீடியோவில் வராதவாறு அந்த  இளைஞன் படம் பிடித்துக்கொண்டு இருந்தான். கேமிரா அந்தப் பெண்ணை மட்டுமே லாங் ஷாட்டிலும், க்ளோஸ் அப்பிலும் காட்டிகொண்டிருந்தது. கேமிராவை இயக்கிக்கொண்டே அந்த வாலிபன் பெண்ணுடன் சல்லாபித்துக்கொண்டிருந்தான்.  கிட்டத்தட்ட அந்த வீடியோ 45 நிமிடம் ஓடியது.

வீடியோ முடிந்ததும் மறுபடியும் விவாதம் தொடங்கியது. பாதி பேர் அது நடிகை ரிச்சா பலோட் தான் என்றும், மீதி பேர் அது வேற பெண என்றும் இரு அணியாக வாதிட்டுக்கொண்டிருந்தனர். நான் மெதுவாக அந்தப்பெண் ரிச்சா பலோட் கிடையாது என்றேன். அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க என்றார் அந்த பென் டிரைவ் நண்பர். இந்த வீடியோ பற்றி ஏற்கனவே வாரமலர் அந்துமணியின் பாகேப தொடர்ல சில வருஷங்களுக்கு முன்னாலேயே செய்தி வந்திருக்கு. நான் படிச்சிருக்கேன் என்றேன். இப்போது பலான படம் பார்க்கும் மூடிலிருந்து விலகி, அந்த பலான படத்தின் பின்னால் உள்ள செய்தியை அறிந்துகொள்ளும் ஆவலில் இருந்தார்கள் நண்பர்கள்.

நான் தொடர்ந்தேன். அந்த பொண்ணோட சொந்த ஊரு பெங்களூர். அவ ஒரு மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட்.  அந்த வீடியோவில வர்ற பையன் அவளோட காதலன். அவனும் மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்தான். இரண்டு பேரும் லவ் பண்ணினது வீட்டுக்கு தெரியாது.  கல்யாணத்துக்கு முன்னாலேயே இரண்டு பேரும் செக்ஸ் வச்சிக்கிட்டாங்க. இரண்டு பேரும் தாங்கள் செக்ஸ் வச்சுக்கிட்டத வீடியோவில பதிவு செஞ்சி அதை விருப்பப்படும்போது பார்த்து ரசிக்க முடிவு பண்ணி இந்த வீடியோவ எடுத்திருக்காங்க. அந்த பெண்ணோட காதலன் தான் எடுத்த வீடியோவ அவனோட நண்பரிடம் கொடுத்து ரகசியமா பிரின்ட் போட்டு தரும்படி கேட்டிருக்கார். நண்பரோ தனக்கு ஒரு காப்பி எடுத்துக்கிட்டு நண்பருக்கு ஒரு காப்பி கொடுத்திருக்கார். நண்பரிடம் இருந்த காப்பி அவர் மூலமா இண்டர்நெட்ல வெளி வந்திருச்சி. அந்த வீடியோவை நெட்டில் பார்த்த அந்த பெண்ணின் குடும்ப நண்பர் இது பற்றி அந்த பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவமானம் தாங்க முடியாத அந்த பெண்ணின் பெற்றோர்கள் உடனே தற்கொலை செஞ்சிக்கிட்டங்க. பெற்றோர்கள் தற்கொலை செஞ்சதினால வேதனை தாங்க முடியாம அந்த இளம் பெண்ணும் தற்கொலை பண்ணிக்கிட்டா. நாம பார்த்த இந்த வீடியோதான் ஒரு குடும்பத்தோட அழிவுக்கே காரணமா இருந்துச்சி என்று முடித்தேன்.


இப்போது எனது நண்பர்களின் முகங்களில் சற்று குற்ற உணர்ச்சி காணப்பட்டது. ஒவ்வொரு ஸ்கேண்டல்  வீடியோ  பின்னாலேயும்  ஒரு  சோகக்கதை இருக்கும் போலிருக்கே  என்றார் அந்த வயதான  நண்பர். இன்னைக்கு நெட்ல இருக்கிற   ஸ்கேண்டல் வீடியோக்களினால் அழிந்த குடும்பங்கள் ஏராளம். வெளியில் தெரிஞ்சது கொஞ்சம்தான் என்றார் கம்ப்யூடர் ஆப்ரேட்டர் நண்பர். பெண்கள்  இந்த காலத்தில் எந்தெந்த விஷயங்களில் எப்படியெல்லாம் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம்  ஒரு நல்ல உதாரணம் என்றேன். தாங்கள் செக்ஸ் வச்சிக்கிறதை  வீடியோவா பார்த்து ரசிக்க பல பேர் ஆசைப்பட்டு இந்த மாதிரி வீடியோ எடுக்கிறாங்க. ஆனா அவங்க  அந்த வீடியோவை செல்போன்ல இருந்து அழிச்சிட்டா கூட அத ரிகவரி  பன்றதுக்கு இப்பல்லாம் நிறைய சாப்ட்வேர் இருக்கு. நெட்ல இருக்கிற பல வீடியோக்கள் இந்த மாதிரி லீக்கானதுதான் என்றார் கம்ப்யூடர் ஆப்ரேட்டர் நண்பர்.  காஞ்சிபுரம் குருக்கள் பலான வீடியோ கூட அப்படி வெளியானதுதான். அவர் தனது செல்போனை சர்விஸ் பண்ண கொடுக்கும்போது, அவரால் அழிக்கப்பட்ட பலான வீடியோக்களை ரெக்கவரி எடுத்து நெட்டில் வெளியிட்டார்கள் சில விஷமிகள். அவரும் மாட்டிக்கொண்டார் என்றேன் நான். அந்த பென் டிரைவ் நண்பர் எதுவும் பேசாமல் சிந்தனையில் இருந்தார். பிறகு சட்டென்று நினைவு வந்தவராக வேலை இருக்கு. நான் கிளம்புறேன் என்றார். ஒ.கே.! மறுபடியும் நாளை சிந்திப்போம் என்று கூறி அனைவரும் இடத்தை காலி பண்ணினோம்.

குறிப்பு: இக்கட்டுரைக்கும் இங்குள்ள படத்தில் உள்ள பெண்ணிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. மாடலுக்காக இங்கு பயன்படுத்தப்பட்டது.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்:

  1. Richa Pallod ன் இந்த வீடியோ மிக பழைய பரபரப்பு அப்போது அவரை தமிழில் மிக சிலருக்கு மட்டுமே தெரியும் என்பதும் நீங்கள் பார்தது போல பலரும் பார்த்து விட்டு பின்னால் வருத்தப் பட்டு இருக்கிறார்கள் என் நண்பனும் கூட .அனால் அதை கூட பொறுத்து கொண்டேன் .அவன் நான் சில ஆண்டுகள் பாண்டிச்சேரியில் தங்கியிருந்த போது அங்கு வந்த போது கேபரே டான்ஸ் பார்க்க வேண்டும் என்றான் .ஷோ ஆரம்பித்த போது முன் வரிசையில் மிக ஆர்வமாக உட்கார்ந்து பார்த்து கொண்டு இருந்தவன் பாதியில் பின் வரிசைக்கு போனான் .எனக்கு பயம் காரணம் பின் வரிசையில் வி.ஐ.பி க்கள் இருப்பார்கள் .ஷோ முடிந்தவுடன் அவர்கள் அங்குள்ள மாமாக்களிடம் ஆடும் பெண்களை கை காட்டி புக் செய்து கொள்வார்கள் .அப்படி ஏது கை காட்டி விடுவானோ என்றூ பின்னால் திரும்பி பார்க்கிறேன் ,அங்கு அவன் அழுது கொண்டு இருந்தான் .ஷோ முடிந்தவுடன் அதர்க்கு காரணம் கேட்டதர்க்கு ,பாவம் அந்த பெண்களின் அண்ணன்களோ வேறு யாராவது வீட்டீல் பார்த்தால் எவ்வளவு வருத்த்ப்படுவார்கள் ? அதை நினைத்தேன் அழுது விட்டேன் என்றானே பார்க்கலாம் !..

    பதிலளிநீக்கு