1971- இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியாவின் நோக்கம் பங்களாதேஷை உருவாக்குவது மட்டுமல்ல. அதற்கும் மேலாக பல திகைப்பூட்டும் நோக்கங்களை உள்ளடக்கியதாக இருந்தது. பாகிஸதானின் முக்கிய பகுதிகளையும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையும் கைப்பற்றி பாகிஸ்தானை நிர்மூலமாக்குவதுதான் அப்போரின் மறைமுகமான நோக்கமாக இந்தியா கொண்டிருந்தது. இதன் மூலம் எக்காலத்திலும் இந்தியாவை எதிர்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானை பலவீனப்படுத்த வேண்டும் என இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்திராவின் அந்த திட்டம் அவரது அமைச்சரவையில் இருந்த ஒரு CIA உளவாளியால் தவிடுபொடியாக்கப்பட்டது. இந்திராவின் ஆசை பங்களாதேஷை உருவாக்குவதோடு தடுத்து நிறுத்தப்பட்டது. CIA –யின் ஏஜண்டாக பணியாற்றிய அந்த கேபினெட் அமைச்சர் யார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. இதுவே இந்தியாவின் மிகப் பெரும் உளவு மோசடியாக பலரால் கருதப்படுகிறது.
நூலாசிரியர் அனுஜ் தார் தான் எழுதியுள்ள “CIA’s Eye on South Asia” என்ற நூலில் மேற்கண்ட தகவலகளை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள் தொடர்பாக CIA பல ஆண்டுகளுக்குப் பின் வெளியிட்ட ரகசிய ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த நூலை அனுஜ் தார் எழுதியுள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட CIA – யின் ரகசிய ஆவணங்கள் 1971 – ல் நடந்த போர் சம்பவங்களை தெளிவாக விளக்கவில்லை. ஆயினும் அவை இந்திய CIA ஏஜென்ட், மேற்கு பாகிஸ்தான் (தற்போதைய பாகிஸ்தான்) மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தும் இந்தியாவின் திட்டத்தை முன்கூட்டியே அமெரிக்க ஏஜென்சிக்கு தெரிவித்ததையும், அதனை தொடர்ந்து நடைபெற்ற அதிரடி அரசியல் திருப்பங்களையும் தெளிவாக விளக்குகிறது. அனுஜ் தார் அந்த CIA ஏஜென்ட் இந்திராவின் அமைச்சரவையில் இருந்த ஒரு காபினெட் அமைச்சர் என உறுதியாக கூறுகிறார்.
டெல்லியில் நடந்த ரகசிய அமைச்சரவை கூட்டத்தில் பேசும்போது இந்திரா காந்தி, தான் பங்களாதேஷை உருவாக்க மட்டும் போரை தொடக்கவில்லை என்றும், பாகிஸதானின் முக்கிய பகுதிகளையும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையும் கைப்பற்றி பாகிஸ்தானை முழு அளவில் தோற்கடிக்கப்போவதாகவும், இதன் மூலம் எக்காலத்திலும் இந்தியாவை எதிர்க்க முடியாத அளவிற்கு பாகிஸ்தானை பலவீனப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார். இச்செய்தி அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்திய CIA ஏஜெண்டால் CIA ஏஜென்சிக்கு தெரிவிக்கப்பட்டது. CIA தனது அறிக்கையினை அமெரிக்க அதிபர் நிக்சனிடம் சமர்ப்பித்தது.
CIA –யின் அறிக்கையினை படித்ததும் கோபமடைந்த நிக்சன் பதட்டத்துடன் இந்த பெண் (இந்திரா காந்தி) நம்மை ஏமாற்றி விட்டார் என்று கூறினார். கிழக்கு பாகிஸ்தான் (தற்போது பங்களாதேஷ்) மீது போர் தொடுக்கப்போவதில்லை என்று தன்னிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு (உண்மையில் இந்திரா அவ்வாறு வாக்குறுதி கொடுத்தாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை) தற்போது மேற்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையும் தாக்க இந்திரா முனைவதை கண்டித்த நிக்சன், இச்செயலுக்கு இந்திரா கண்டிப்பாக விலை கொடுக்க வேண்டிவரும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்சிங்கரிடம் தெரிவித்தார்.
இந்திய CIA ஏஜென்டின் ரகசிய தகவலின் அடிப்படையில் நிக்சன் மேற்கு பாகிஸ்தானை (தற்போதைய பாகிஸ்தான்) இந்திய தாக்குதலில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கையில் நேரடியாக இறங்கினார். ஒரு பெரிய ஜனநாயக நாடு தான் விரும்பும் அநீதி அனைத்தையும் செய்ய முடியும் என்ற கொள்கையை நீங்கள் ஏற்று கொள்வீர்கள் எனில், அது சர்வதேச நீதியையும், ஐக்கிய நாடுகள் சபையையும் அழித்துவிடும் என்று நிக்சன் கூறினார். மேற்கு பாகிஸ்தானை தாக்கும் திட்டத்தை இந்தியா கைவிடுவதற்கு ரஷியா இந்தியா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு ரஷியா செய்ய முடியாமல் போனால் அது அமெரிக்க – ரஷிய போராக மாற வாய்ப்புண்டு என்று நிக்சன் ரஷியாவை தனிப்பட்ட முறையில் மிரட்டினார். கிஸ்சிங்கர் ஐநாவுக்கான சீன பிரதிநிதியை ரகசியமாக சந்தித்தார்.அப்போது அவர் இந்திய CIA ஏஜென்டின் ரகசிய தகவலை சீன பிரதிநிதியிடம் தெரிவித்தார். மேலும் ரஷியாவின் ஆதரவுடன் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடங்கியுள்ள போர், பின்னாளில் சீனாவுடன் இந்தியாவும், ரஷியாவும் செய்யவிருக்கும் போருக்கான ஒத்திகையாக இருக்கலாம் என அவர் சீனாவை எச்சரித்தார்.
இதனை தொடர்ந்து ரஷியாவின் முதல் துணை வெளியுறவு துறை அமைச்சர் வாசிலி குஸ்நெட்சோவ் டெல்லி வருகை தந்தார். அவர் இந்தியா தனது தாக்குதலை கிழக்கு பாகிஸ்தானோடு (பங்களாதேஷ்) நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மேற்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை தாக்கக் கூடாது என்றும் இந்தியாவை வற்புறுத்தினார். ஏனெனில் இந்தியாவின் அத்தகைய நடவடிக்கை துணைக்கண்டத்தில் அமெரிக்க – ரஷிய போருக்கு வழி வகுத்துவிடும் என கவலை தெரிவித்தார். இந்தியா மேற்கு பாகிஸ்தானை தாக்காது என்ற உறுதிமொழியை இந்தியாவிடம் பெற்று கொண்ட குஸ்நெட்சோவ், அத்தகவலை 1971, டிசம்பர் 16 அன்று அமெரிக்காவிடம் தெரிவித்தார். அதை கேட்டதும் நிக்சன் நாம் சாதித்து விட்டோம்; ரஷியா நமது வேலையை செய்து முடித்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இந்தியாவின் உண்மையான இலக்காக இருந்த மேற்கு பாகிஸ்தானை நிக்சன் காப்பாற்றி விட்டதாக கிஸ்சிங்கர் பாராட்டினார். CIA ஆவணங்களை ஆதாரமாக கொண்டு மேற்கண்ட தகவல்களை தன் புத்தகத்தில் அனுஜ் தார் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தியாவை மிரட்ட அமெரிக்கா தனது மிகப்பெரிய அணுசக்தி போர் கப்பலை வங்காள விரிகுடாவில் நிறுத்தியது. ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவின் பலத்தை பறை சாற்றும் வகையில் அந்த போர் கப்பல் நிறுத்தி வைக்கப்படிருந்தது. இந்திய CIA ஏஜென்ட் அளித்த ரகசிய அறிக்கையின் விளைவாகவே அமெரிக்க அரசு மேற்கண்ட நடவடிக்கையை எடுத்தது.
1971 – ல் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை முதன் முதலாக இந்திராவின் அமைச்சரவையில் CIA ஏஜென்ட் இருந்ததை வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து டிசம்பர் -1971-ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் ஆசிய பிராந்திய செயல் திட்டம், இந்திய பிரதமர் இந்திராவின் நெருங்கிய அமைச்சரவை சகா ஒருவரின் வழிகாட்டுதலின்படி வடிவமைக்கப்பட்டது என தெரிவித்தது.
பிற்காலத்தில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், இரு துணை பிரதமர்கள் ஜெகஜீவன் ராம், Y B சவான் ஆகியோர் 1971 போரின் பொது இந்திய CIA ஏஜெண்ட்களாக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அமெரிக்க அரசு தன ரகசிய ஆவணங்களை வெளியிடும் வரை இந்திய CIA ஏஜெண்ட் ஒருவர் இந்திராவின் அமைச்சரவையில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாமல்தான் இருந்தது. CIA தனது நம்பிக்கைகுரிய ஏஜென்ட் ஒருவரை இந்திய அரசின் கேபினட்டில் கொண்டிருந்தது என்ற வாதத்திற்கு அமெரிக்க அரசின் ஆவணங்கள் இன்று அசைக்க முடியாத ஆதாரங்களாக விளங்குகின்றன.
CIA வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் இந்திய CIA ஏஜென்டின் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெயரை வெளியிட்டால் அது இந்திய அமெரிக்க அரசின் உறவை பாதிக்கும் என்பதாலும், ஏஜென்சிக்கு புதிய ஏஜெண்டுகளை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படுத்தும் என்பதாலும் இந்திய CIA ஏஜென்டின் பெயரை அமெரிக்க அரசு வெளியிடவில்லை என அனுஜ் தார் கூறுகிறார். ஆயினும் அந்த ஏஜென்ட் யார் என்பதை இந்திய அரசு உறுதியாக அறிந்திருக்கும் என அவர் மேலும் கூறுகிறார்.
ஒவ்வொரு நாடும் பிற நாட்டு அரசாங்கங்களின் ரகசியங்களை உளவு பார்க்க ஏஜெண்ட்களை நியமிப்பது வழக்கமானதுதான். இந்தியாவும் இப்பணிகளுக்காக R & AW ஏஜென்சியை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்தியாவின் கேபினட் அமைச்சர் ஒருவரே CIA ஏஜெண்டாக இருந்தது மிகப்பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அது ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்திலும் CIA எந்த அளவு ஊடுருவியுள்ளது என்பதை நமக்கு காட்டுகிறது. மேலும் 1971 –ஆம் ஆண்டு போரில் இந்தியா தனது நோக்கத்தில் முழு வெற்றி பெறமுடியாமல் போனதற்கு இந்திய CIA ஏஜெண்ட்தான் காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அன்று இந்தியாவின் போர் ரகசியம் வெளி வராமல் இருந்திருந்தால் இன்று இந்தியாவின் பூகோள அமைப்பும், பாகிஸ்தானின் பூகோள அமைப்பும் நிச்சயம் வேறாயிருக்கும்.
Tweet | |||||
Most (not all) of this is imagination?
பதிலளிநீக்குஇக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் CIA பலஆண்டுகளுக்கு பின் வெளியிட்ட ரகசிய ஆவணங்களை ஆதாரமாக கொண்டவை. ஒன்றை தவிர! அந்த உளவாளி இந்திராவின் நெருங்கிய சகா என CIA கூறியது. இந்தியாவின் பிரபல புலனாய்வு எழுத்தாளர் அனுஜ் தார் அந்த நெருங்கிய சகா இந்திராவின் கேபினட் அமைச்சர் என உறுதியாக கூறுகிறார். 1972 -ல் இந்திரா காந்தி ஒரு பேட்டியில் இந்தியாவில் CIA -வின் செயல்பாடு மிக தீவிரமாக உள்ளது என குற்றம் சாட்டியது இங்கு குறிப்பிடத்தக்கது.
நீக்குஇந்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள ஒரு ரகசிய ஆவணத்தில், 5 அக்டோபர், 1972 அன்று நடந்த ஒரு கூட்டத்தில் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஸ்வரன் சிங், CIA இந்தியாவில் முறையற்ற வழிகளில் தன் செயல்பாடுகளை கொண்டுள்ளது என்றும், காங்கிரஸ் கமிட்டியின் ரகசிய கூட்ட முடிவுகள் இரண்டு மணி நேரத்தில் அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிந்துவிட்டது என்றும் US Secretary of State வில்லியம் ரோஜர்சிடம் தன அதிருப்தியை தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி நடந்திருக்க ஏகப்பட்ட சாத்தியங்கள் உண்டு. ரா உதவி இயக்குனர் ஒருவரேஆமெரிக்க ஏஜண்டாக இருந்து கண்டுப்பிடிக்கப்பட்டு ,அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தது சில ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது.
பதிலளிநீக்குஇப்போ கொஞ்சம் முன்னேறி பிரதமரையே அமெரிக்கா புடிச்சு இருக்குன்னு சொன்னா நம்பவா போறாங்க :-))
||இப்போ கொஞ்சம் முன்னேறி பிரதமரையே அமெரிக்கா புடிச்சு இருக்குன்னு சொன்னா நம்பவா போறாங்க :-))||
நீக்குவவ்வால், ஆந்தையார் சொல்கிறார்..அப்படிங்கற மாதிரி இதை வவ்வால் சொல்கிறார் ! அப்படின்னு படிக்கணுமா?
நீங்க சொல்லாட்டாலும் ஊர் முழுக்க சொல்லுதே..
உங்களையும் என்னையும் புடிக்காமல் இருந்தால் சரிதான்!
நீக்குஅறிவன்
நீக்குஹி ...ஹி அப்படித்தான் கழுகார், ஆந்தையார் போல , இன்னும் 20- 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் CIA வின் கோப்புகள் டி லிஸ்டெட் ஆகும் போது இப்படியும் செய்தி வரலாம்.
இந்தியப்பிரதமரின் மகள் அமெரிக்க குடியுரிமைப்பெற்றவர் :-))
---------
விஜயகுமார் உங்களை பிடிச்சாலும் பிடிப்பாங்க, நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை :-))
வணக்கம் சகோ,
பதிலளிநீக்குநல்ல பதிவு. இது நிச்சயம் சாத்தியமான ஒன்றுதான். பாகிஸ்தான் 1971போரில் தோற்றது,இந்தியா வென்றது என்றால் ஏன் இந்திய படை ஆசாத் காஷ்மீரைக் கூட மீட்கவில்லை???.
இந்தியாவிற்கு அப்போரில் எந்த இலாபமும் இல்லை. வங்க தேசம் உருவாக்கினாலும் அதுவும் இந்தியாவுக்கு எதிராக் திரும்பி,வங்க தேசிகளின் ஊடுருவல் அதிகரித்ததுதான் மிச்சம்!!
.இன்றுவரை த்லைவலி!!!
நன்றி!!!
வணக்கம் சகோ,
நீக்குதங்களின் கருத்துக்கு நன்றி!
இந்த பதிவை நான் முன்பு படிக்கவில்லை.ஆனால் பதிவின் சாரத்தில் பனிப்போருக்கு அப்பால் என்று இந்த பதிவின் கருத்தோடு சிலவற்றை வெளிப்படுத்தியிருக்கிறேன்.
பதிலளிநீக்குLOC ( Line of Control ) கடந்து பாகிஸ்தானுக்குள் நுழைய ஜெனரல் கரியப்பா அனுமதி கேட்டதாகவும் இந்திரா காந்தி மறுத்து விட்டதாகவும் செய்திகள் கசிந்தன.இந்திரா காந்தி மறுத்ததற்கு வெளி அழுத்தங்கள் காரணமாக இருந்திருக்கலாம் என்பதை இந்த பதிவு உறுதிப்படுத்துகிறது.
ஜெனரல் கரியாப்பாவின் திட்டத்தை அனுமதிக்காததற்கு இந்திரா காந்தி மீது குற்றம் சாட்டப்பட்ட காலங்கள் உண்டு. ஆனால் இப்போது உண்மை வெளிப்பட்டிருக்கிறது.
நீக்குஇந்திரா மரணத்தின் பின்னணி முன்பே அறிந்ததுதான்.இப்பொழுது உங்கள் மூலமாக வெளியில் கசிந்துள்ளது.....ஆமாம் உங்களை சி.ஐ.ஏ. தேடுதுன்னு கேள்விப்பட்டேன்
பதிலளிநீக்குகொஞ்சம் பயமாகத்தான் இருக்கு விஜயன் சார்!
நீக்குஇந்தியா காரனுங்க அப்படி துணிந்து எதையும் செய்ய மாட்டானுங்க சமாதனம்........சமாதனம்........சமாதனம்........ என்று தான் போவானுங்க. அதுசரி அந்த உளவாளி எந்த விதத்தில் இதைத் தடுத்தான்?
பதிலளிநீக்குஇந்திராவின் திட்டம் சிஐஏ உளவாளியால் முன்னரே அமெரிக்காவிற்கு தெரிந்ததுவிட்டது.இதனால் அமெரிக்க ஜனாதிபதி இந்திராவை மிரட்டி, பாகிஸ்தானை கைப்பற்றும் திட்டத்தை இந்திரா கைவிடும்படி செய்தார்.
நீக்கு