வியாழன், 10 ஜனவரி, 2013

டெல்லி கற்பழிப்பு வழக்கின் குற்றப்பத்திரிக்கை - சில அதிர்ச்சி தகவல்கள்!டெல்லி கற்பழிப்பு வழக்கு தொடர்பான  குற்றபத்திரிக்கையின் ஒரு சில பகுதிகளை NDTV டிவி வெளியிட்டுள்ளது. குறிப்பாக கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவரான 17 வயது நபரின் குற்ற செயல்களை குற்றப்பத்திரிக்கை தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆறு குற்றவாளிகளில் குறிப்பாக இவரை மட்டும் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு. ஏனெனில் இந்த நபருக்கு 17 வயதே ஆவதால் இவர் சிறார் குற்றவாளியாக (juvenile) கருதப்படுகிறார். அதாவது இந்திய சட்டத்தின்படி அவர் சிறுவனாக கருதப்படுகிறார். அறிவியல் சோதனைகள் மூலம் இவருடைய வயது பதினேழு என் நிரூபிக்கப்பட்டால், அவர் தனியாக juvenile கோர்ட்டினால் விசாரிக்கப்படுவார். அவருக்கு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் மட்டுமே சிறைத்தண்டனை கிடைக்கும். அந்த மூன்று ஆண்டுகளும் சீர்திருத்தப் பள்ளியில் அவருக்கு நீதிபோதனைகள் மட்டும் வழங்கப்படும்.

போலிசாரின் குற்றப்பத்திரிக்கையில் இந்த சிறுவன் செய்த குற்றங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த அன்று பேருந்தில் இந்த சிறுவன் 23 வயது நிரம்பிய பெண்ணை இரண்டு முறை கற்பழித்திருக்கிறான், அதில் ஒருமுறை அந்த பெண் மயக்க நிலையில் இருக்கும்போது கற்பழித்திருக்கிறான். மேலும் அந்த பெண்ணின் குடலை தன் வெறும் கையாலே பிடுங்கி எடுத்திருக்கிறான் அந்த  சிறுவன். கற்பழித்த பின்னர் அந்த பெண்ணை ஓடும் பேருந்திலிருந்து தள்ளிவிடும்படி ஆலோசனை கூறியதும் இந்த சிறுவன்தான் என காவல்துறை நம்புகிறது. இதனை வாசிக்கும்போது  இவ்வளவு மிருகத்தனமாக ஒரு சிறுவனால் செயல்படமுடியுமா? என்ற அதிர்ச்சி நம் ஒவ்வொருவர் மனதிலும் எழுகிறது. கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு குரூரமாக செயல்பட்ட இவனை சிறுவன் என்று சட்டம் அழைப்பதை நம் மனது ஏற்றுக்கொள்ளவும் மறுக்கிறது.  

மேற்கண்ட செயல்களை செய்த ஒருவனை நாம் எவ்வாறு சிறுவனாக கருத முடியும். அதிலும் ஒரு பெண்ணை கற்பழித்தவனை வயதுக்கு வராத சிறுவனாக கருதுவது என்பது முரண்பாடானது, பதினேழு வயதுக்கு குறைவான ஒரு குற்றவாளியை சிவில் வழக்குகளில் வேண்டுமானால் நாம் சிறுவனாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் திட்டமிட்டு, காட்டுமிராண்டித்தனமாக கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்ட  பதினேழு வயதுக்கு குறைந்த ஒருவனை நாம் சிறுவனாக கருதமுடியாது. அவன் மற்ற ஐந்து குற்றவாளிகளைப் போலவே சமமாகக் கருதப்பட்டு, தண்டனை வழங்கப்படவேண்டும்.

மேலும் இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் இதற்கு முன்னரும் இதுபோன்ற சம்பவங்களில் வழக்கமாக ஈடுபட்டிருக்கலாம் என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் சம்பவம் நடந்த அன்று, குறிப்பிட்ட பெண்ணும், நண்பரும் பேருந்தில் ஏறுவதற்கு முன்னர், முந்திய பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த ஒருவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். இப்போதைய வழக்கில் சில ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலையானால் கூட இவர்கள் மீண்டும் இதே போன்ற செயல்களில் ஈடுபட நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீண்டும், மீண்டும்  அதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவதை நாம் பார்க்க முடிகிறது. உதாரணமாக சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துங்கநல்லூர் என்னும் ஊரில் புனிதா என்ற சிறுமி கற்பழிக்க முயற்சிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். சில நாட்களுக்குள் குற்றவாளி போலிசாரால் கைது செய்யப்பட்டான். விசாரணையில் அவன் ஏற்கனவே தன்  உறவுக்கார சிறுமி ஒருவரை பாலியல் பலாத்தகாரம் செய்ய முயற்சி செய்து பொலிசாரால் கைது செய்யப்பட்ட விவரம் வெளியானது. அந்த வழக்கில் பெயிலில் வெளியே வந்திருந்த பொழுது மீண்டும் அதே பாலியல் குற்றத்தை செய்திருக்கிறான். எனவே பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது இரக்கம் காட்டுவோரும், மனித உரிமை பேசுவோரும்         அவர்கள்  அடுத்து  செய்யப் போகும்  குற்றங்களுக்கு துணை போவதாகவே நாம் கருத வேண்டும்.

இறுதியாக ஒரு விஷயம், மேற்கண்ட டெல்லி கற்பழிப்பு வழக்கில் மிகப்பெரும் குற்றங்களை மைனர் சிறுவன் செய்ததாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. தானே இக்குற்றத்தின் பெரும்பகுதியை செய்ததாக அவன் ஒப்புதல் வாக்குமூலம்கூட கொடுத்திருக்கலாம். அது அனைத்து குற்றவாளிகளும் சிறிய தண்டனையுடன் தப்பிப்பதற்கான ஒரு சிலரின் திட்டமிட்ட சதியாக கூட இருக்கலாம். மைனர் குற்றவாளி எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும் அவனுக்கு மூன்று வருடத்திற்கு மேல் தண்டனை கிடையாது. எனவே அனைத்து குற்றங்களையும் மைனர் குற்றவாளி மீது சுமத்தும்போது அவனுக்கும் குறைந்த தண்டனை, மற்றவர்களுக்கும் குறைந்த தண்டனை என்பது அவர்களின் சூட்சுமமாக இருக்கலாம். சட்டமும், காவல்துறையும், மக்களும் உஷாராக இருக்கவேண்டும்!
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

10 கருத்துகள்:

 1. //கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு குரூரமாக செயல்பட்ட இவனை சிறுவன் என்று சட்டம் அழைப்பதை நம் மனது ஏற்றுக்கொள்ளவும் மறுக்கிறது. //

  இது அறிவுக்கு தெரிந்த விஷயம்... ஆனால் கண்மூடி, பேப்பர் சட்டத்தை பின்பற்றுவதால் பல குற்றவாளிகளை சுதந்திரமாக நாட்டில் அலைய விட்டு அடுத்து நடக்கும் குற்றங்களுக்கு சட்டமே வழிவகுத்து கொடுத்துவிடுகிறது :(

  //அனைத்து குற்றங்களையும் மைனர் குற்றவாளி மீது சுமத்தும்போது அவனுக்கும் குறைந்த தண்டனை, மற்றவர்களுக்கும் குறைந்த தண்டனை என்பது அவர்களின் சூட்சுமமாக இருக்கலாம்.//
  யோசிக்க வேண்டிய விஷயம்

  பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 2. தங்களின் கருத்துரைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. உண்மை முழுக்க முழுக்க உண்மை.. அவன் தண்டிக்கப் படவேண்டும்..

  பதிலளிநீக்கு
 4. Bring Shariat Law. Behead criminals in public places.

  பதிலளிநீக்கு
 5. உங்கள் கருத்து சரியானதே, மற்றவர்களை தப்பிக்க வைக்க எல்லா குற்றங்களையும் சிறுவனே செய்ததாக ஒத்துக்கொள்ளக்கூடிய சாத்தியக் கூறுகள் நிறையவே இருக்கின்றன.

  பதிலளிநீக்கு
 6. கும்மாச்சி சார்! தங்களின் கருத்துரைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. (கற்பனை)

  இந்த மாதிரி தப்பு பன்னுரவனோட "குடும்பம் மொத்தத்துக்கும் தண்டனை குடுக்கணும்"

  அப்பத்தான் நம்ம சொந்தக்காரன் தப்பு பண்ணுனா நாமளும் சேர்ந்து தண்டனை அனுபவிக்கனும் என்கிற பயம் எல்லோருக்கும் வரும்

  இனி எவனும் தப்பு பண்ண பயப்படுவான்!

  நாம நல்ல இருக்கணும்னு ராணுவத்துல எத்தனை பேர் உயிர் போகுது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குற்றவாளிக்கு தண்டனை கொடுப்பதே இங்கு பெரும் கஷ்டமாக உள்ளதே. 99 சதவீத கொலை வழக்குகள் acquittal லில் தானே முடிகிறது. இதில் நீதி துறை வேறு குற்றவாளிகளுக்கு ஜாமீன்களை வாரி அல்லவா வழங்குகிறது!

   நீக்கு