சனி, 5 ஜனவரி, 2013

டெல்லி கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசு வெளியிடவேண்டும்!



கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அப்பெண்ணின் சம்மதமில்லாமல் வெளியிடுவதை இந்திய சட்டம் தடை செய்கிறது, மேலும் அப்பெண் இறந்துவிட்டால் அவரின் குடும்பத்தினரின் சம்மதமில்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட  இந்திய சட்டம் தடை செய்கிறது, டெல்லி கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தனது மகளின் பெயரை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும் என்று அப்பெண்ணின் தந்தை பிரிட்டனில் இருந்து வெளியாகும் Sunday People செய்திதாளுக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்துள்ளார். தனது மகளின் பெயரை உலகம் தெரிந்துகொள்ளவேண்டும் என்று அவர் மேற்கண்ட பேட்டியில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தனது புகைப்படம், தனது குடும்பத்தாரின் புகைப்படம், தனது வீட்டின் புகைப்படம், தனது மகளின் பெயர் என அனைத்தையும் வெளியிட அனுமதித்த அவர், தனது மகளின் புகைப்படத்தை மட்டும் தற்போது வெளியிடவேண்டாம் என்று அப்பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையார் தெரிவித்துள்ள கருத்து மிகவும் வரவேற்கப்படவேண்டியது ஆகும். அவரின் மனோதைரியம் அவருடைய மகளின் மனோதைரியத்தை போலவே மிகவும் உயர்ந்தது. டெல்லி கற்பழிப்பு சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் மீது எந்த தவறும் இல்லை. தன்னை குற்றவாளிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள முயலும்போது பட்ட காயங்களால் அவர் இறந்துள்ளார். சம்பவத்தின் போதும், அதன் பின்னரும்  அப்பெண் காட்டிய மன தைரியம் இந்திய பெண்கள் அனைவருக்கும் பெருமை தரக்கூடியது. எனவே அவர் இந்திய பெண்களின் அடையாளமாக உள்ளார். எனவே அப்பெண்ணின் பெயர் மறைக்கப்படவேண்டிய விஷயமில்லை. பெருமையுடன் உலகிற்கு அறிவிக்கப்படவேண்டிய தகவல்தான் அது. ஆகையால் அப்பெண்ணின் பெயரை வெளியிடவேண்டும் என்ற தந்தையின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள கூடியதுதான்.

மேலும் அப்பெண்ணின் பெயரை வெளியிடுவது என்பது இதுபோன்ற சம்பவத்தால் பாதிக்கப்பட்டு நடைபிணமாக வாழும் பல பெண்களின் மன தைரியத்தை அதிகரிக்கும். அவர்களுக்கு வாழ்க்கை இன்னும் முடிந்துவிடவில்லை என்ற நம்பிக்கையை டெல்லி சம்பவத்தில் இறந்த பெண்ணின் பெயர் என்றும் உணர்த்திக்கொண்டிருக்கும். அப்பெண்ணின் பெயர் உலகத்திற்கு அறிவிக்கப்படாவிட்டால் கால ஓட்டத்தில் இந்த சம்பவமே மறக்கப்படக்கூடும். அதுவே பலரின் விருப்பமாக கூட இருக்கலாம். எனவே டெல்லி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை அரசு வெளிப்படையாக அறிவிக்கவேண்டும். அதுமில்லாமல் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டத்திற்கு டெல்லி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வைப்பது கூட சரியான முடிவுதான். அதுவே பாலியல் கொடுமைகளுக்கு எதிரான மக்களின் விழிப்புணர்வை என்றும் எழுச்சியுடன் இருக்கச்செய்யும்.

ஒருவரின் உயிரை அழிப்பதைவிட, உணர்வுகளை அழிப்பது என்பது மிகப்பெரும் குற்றமாக கருதப்படவேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால் உயிரை அழிப்பது என்பது அந்த நிமிடத்தோடு முடிந்து போவது, உணர்வுகளை அழிப்பது என்பது பாதிக்கப்பட்டவர் வாழும் வரை அனுபவிக்கக்கூடியது. எனவே பாலியல் கொடுமைகளுக்கு மரண தண்டனை என்பது நியாயமானதுதான். குறைந்த பட்சம் பாலியல் கொடுமைகளில் சம்பந்தப்பட்ட பெண் இறக்கும் நிலையிலாவது குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படவேண்டும்.  

More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 கருத்துகள்:

  1. //சம்பவத்தின் போதும் அதன் பின்னரும் அப்பெண் காட்டிய மன தைரியம் இந்திய பெண்கள் அனைவருக்கும் பெருமை தரக்கூடியது. எனவே அவர் இந்திய பெண்களின் அடையாளமாக உள்ளார்.//

    மிக சரியாக சொன்னீர்கள்.
    பெண் வெளியே போனதே தப்பு என்கின்ற இழிவான மாதவாதிகள் இன்னும் இந்தியாவில் இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை உதாரணம் காட்டி தங்களது பழமைவாதத்திற்கு நியாயம் கற்பிக்க நினைக்கும் இவர்களது சதித்திட்டம் நிச்சயம் வெற்றி பெறாது.

      நீக்கு
  2. 9.30 மணியில் கூட பாதுகாப்பு இல்லையென்றால் எப்படி 12 மணியில் வெளியில் செல்வது. மனித மனங்கள் நல்ல முறையில் மாற்றம் பெற வேண்டும்..

    பதிலளிநீக்கு
  3. http://rebacca-vethathiri.blogspot.in/

    இது என்னுடைய வலைப்பூ. நேரம் கிடைத்தால் படியுங்கள். நன்றி...

    பதிலளிநீக்கு