புதன், 23 ஜூலை, 2014

இந்தியாவில் காலூன்றும் நைஜீரியாவின் போகோ ஹாரம் தீவிரவாதிகள்!-ஐபி அதிர்ச்சி ரிப்போர்ட்!


உலகிலேயே மிகவும் கொடூரமான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான நைஜீரியாவின் போகோ ஹாரம் (Boko Haram)  தீவிரவாத அமைப்பானது தனது செயல்பாட்டினை இந்தியாவில் விஸதரித்துள்ளதாக இந்தியாவின் இண்டலிஜென்ஸ் பீரோ (ஐபி) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  இந்தியாவின் கடலோர மாநிலமான கோவாவில் நைஜீரியா நாட்டவர்கள் அதிக அளவில் வசித்து வருவதும், அவர்கள் போதை பொருட்கள் விற்பதையே பிரதான தொழிலாக கொண்டிருப்பதும் வெளிப்படையான ஒன்று. ஆனால் அவர்கள் போகோ ஹாரம் தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருவதாக தற்போது தெரியவந்துள்ளது.  போகோ ஹாரம் அமைப்பானது அல்-கைதா  தீவிரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உடையது ஆகும்.
போகோ ஹாரம் அமைப்பானது தனது தீவிரவாத செயல்களுக்கான நிதியை  பெரும்பாலும் போதை பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் திரட்டிக்கொள்கிறது.  போகோ ஹாரம் தீவிரவாத அமைப்பு மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளி தாதா தாவுத் இப்ராஹீம் உதவியுடன் இந்தியாவில் காலுன்றி வருவதாக ஐபி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட 1,500 நைஜீரிய நாட்டவர்கள் போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. சென்ற வருடம் கோவா அரசாங்கம் இவர்கள் மீது எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக போதை பொருள் விற்பனை செய்வதில் மிகப்பெரும் சரிவு ஏற்பட்டது. எனவே போதை பொருள் விற்பவர்களுக்கு ஒரு புகலிடம் தேவைப்பட்டது. இந்த வாய்ப்பினை போகோ ஹாரம் இயக்கம் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டது. போதை பொருள் விற்கும் நைஜீரிய கும்பல்களோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு இந்தியாவில் தனது செயல்பாட்டினை போகோ ஹாரம் அமைப்பு தொடங்கியுள்ளது.
தெற்காசிய நாடுகளில் போதை பொருள் தொழிலில் பெரும்பாலும் அல்-கைதா போன்ற அமைப்புகள்தான். அதிலும் குறிப்பாக போதை பொருள் உற்பத்தி மற்றும் விற்பனையில் பெரும் பாங்கு வகிப்பது தாவுத் இப்ராஹீம் கோஷ்டிதான். போகோ ஹாரம் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நைஜீரிய போதை பொருள் வியாபாரிகள் போதை மருந்துகளை கொள்முதல் செய்வது கூட தாவுத் இப்ராஹிமிடம் இருந்துதான் என ஐபியின் அறிக்கை மேலும் தெரிவிக்கிறது.
கோவாவின் போதை பொருள் தொழில் முன்பு ரஷிய மாபியா கும்பல்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. முன்பு நைஜீரிய வியாபாரிகள் குழுக்களாக செயல்படாமல் தனிப்பட்ட நபர்களாக போதை பொருள் தொழிலில் ஈடுபட்டதால் ரஷிய மாபியா கும்பல்கள் இவர்களை அடக்கி வைத்திருந்தனர். ஆனால் தற்போது நைஜீரியர்கள்  போகோ ஹாரம் அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருவதால், ரஷிய மாபியா கும்பல்கள் இப்போது மிகப்பெரும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளனர். தாவுத் இப்ராஹிமின் இளைய சகோதரர் அனீஸ் இப்ராஹீம் நைஜீரிய போதை கும்பல்களுக்கும், போகோ ஹாரம் அமைப்புக்கும் இடையே தொடர்பாளராக செயல்பட்டு வருகிறார் என ஐபி நம்புகிறது..  
கடந்த வருடம் சுமார் 40 நைஜீரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒரே ஒருவர்தான் விசா வைத்திருந்தார். ஆனால் கிட்டத்தட்ட  2,500  நைஜீரியர்கள் சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறி உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானவர்கள் தாவுத் இப்ராஹீம் கோஷ்டியினால் சட்ட விரோத செயல்பாடுகளுக்காக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டவர்கள் எனவும் ஐபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபியின் அறிக்கை ஒ.கே!. இந்த அறிக்கையின் மீதான இந்திய அரசின் நடவடிக்கை என்ன?

உலகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தீவிரவாத அமைப்புகளும் தனக்கு தேவையான நிதியையும், ஆட்களையும் திரட்டும் களமாக இந்தியாவை கருதுகின்றன. ஏனெனில் அது இங்கு மிகவும் சுலபமாக இருக்கிறது. இங்கு மனித உரிமையை பாதுகாக்கிறோம் என்ற பேரில் தீவிரவாதிகளுக்கு மறைமுக பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மேலும் தீவிரவாதத்தை அதன் வலிமையிலேயே எதிர்க்கும் வகையில் வலுவான சட்ட திட்டங்கள் எதுவுமில்லை. தீவிரவாதிகளுக்கு எதிராக கொண்டு வரப்படும் எந்த ஒரு சட்டமும் இங்கு மதச்சாயம் பூசப்படுகிறது. இங்கு வாக்குகளுக்காக தீவிரவாதம் சமரசம் செய்துகொள்ளப்படுகிறது. இந்தியா உண்மையிலேயே தீவிரவாதத்தை அக்கறையுடன் எதிர்க்கிறதா என்ற சந்தேகத்தை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில்தான் இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளன. எனவேதான் இந்தியா அனைத்து தீவிரவாத அமைப்புகளுக்கும் புகலிடமாக உள்ளது. எனவே இந்தியா தனது நாட்டில் நடக்கும் தீவிரவாத செயல்களுக்கு பாகிஸ்தானை மட்டும் ஒரேயடியாக குறை சொல்லி தப்பித்து விடமுடியாது. தனது பக்கத்தில் உள்ள குறைகளை முதலில் களைய வேண்டிய பொறுப்பும்  இந்தியாவிற்கு கண்டிப்பாக உண்டு. 
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 கருத்துகள்:

 1. Boko Haram is an organisation to propagate the Peace Movement (+Anbu Markkam). It may not indulge in such activities. Only the USA, Western countries and Modi-led India can spread such false news. Muslims in India are allah-fearing and would not give refuge to such anti-human anti-Allah activities. So help us Allah!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்து உண்மை எனில் எனக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் நைஜீரியாவில் இருந்து வரும் தகவல்கள் நீங்கள் கூறுவது போல் இல்லையே!. மேலும் இக்கட்டுரையில் தீவிரவாதிகள் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்விடத்திலும் எந்த மதத்தின் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

   நீக்கு
 2. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
  1. Facebook: https://www.facebook.com/namkural
  2. Google+: https://plus.google.com/113494682651685644251
  3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல...
  நம் குரல்

  பதிலளிநீக்கு