நன்றி:envazhi.com |
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி தங்கபாலுவின்
பேட்டியினை ஒளிபரப்பினார்கள். கேள்விகளுக்கு வழக்கம்போல் சம்பந்தம் இல்லாமல் பதில்
சொல்லி காமெடி செய்துகொண்டிருந்தார் தங்கபாலு. பேட்டியின்போது ராபர்ட் வதேராவின் நில மோசடி ஊழல் பற்றி உங்கள் கருத்து என்ன? என்று
தங்கபாலுவை நோக்கி பேட்டியாளர் ஒரு கேள்வியினை கேட்டார். அக்கேள்விக்கு தங்கபாலு
கூறிய பதில்தான் காமெடியின் உச்சகட்டமாக இருந்தது. அவர் கூறிய பதில் இதுதான்.
“தான் சட்டத்திற்கு புறம்பாக எந்த செயலையும் செய்யவில்லை என்று வதேராவே கூறிவிட்டார். தான் எந்த இடத்தையும் சட்ட விரோதமாக வாங்கவில்லை
என்று அவரே தெரிவித்து விட்டதால் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஊழல்
நடைபெறவில்லை” என்று தங்கபாலு
சிரிக்காமல் கூறினாலும் நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
வதேராவே ஊழல் நடக்கவில்லை என்று சொல்லிவிட்டாராம். எனவே ஊழல் நடக்கவில்லை
என்று தங்கபாலு வதேராவிற்கு சான்றிதழ் கொடுக்கிறார். ஊழல் வழக்கில் வதேரா ஒரு
குற்றவாளி. ஒரு குற்றவாளி தான் தவறு செய்யவில்லை என்று கூறிவிட்டால் அதனை
மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டுமாம். இது தங்கபாலுவின் தீர்ப்பு! எனவே கொலை
வழக்கில் குற்றவாளி தான் கொலை செய்யவில்லை என்று கூறிவிட்டால் நீதிபதி அவனை விடுதலை
செய்யவேண்டியதுதான். இதுதான் தங்கபாலுவின் நீதி!
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானம் பவர் ஸ்டாரை பார்த்து “ நானாவது காமெடியன்னு தெரிஞ்சி காமெடி பண்றேன். ஆனா நீ
ஒரு காமெடியன்னு தெரியாமலேயே காமெடி பண்றியே “ என்று ஒரு டயலாக் சொல்வார். உண்மையிலேயே தங்கபாலுவின்
பதிலைக் கேட்டபோது எனக்கு இந்த டயலாக்
தான் ஞாபகம் வந்தது.
இவர்கள் எல்லாம் மக்களை முட்டாள்களாக நினைக்கிறார்களா? அல்லது உண்மையில் இவர்கள்தான் முட்டாள்களா?
Tweet | |||||
பணம் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மானங்கெட்ட பயலுங்க இவனுங்க..
பதிலளிநீக்கு