சனி, 30 மார்ச், 2013

நரேந்திர மோடி Vs சிதம்பரம் : பைனல்!?மக்களவை தேர்தல் நெருங்குகின்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சியும், காங்கிரஸ் கட்சியும்  தங்களது பிரதம வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் இறுதி கட்ட முயற்சிகளில் உள்ளன.

பிஜேபி தனது பிரதம வேட்பாளராக நரேந்திர மோடியை  அறிவிப்பது எனபது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. அவ்வாறு மோடியை அறிவிக்கும் நிலையில் நிதிஷ் குமாரின் ஆதரவை இழப்பதற்கும் பிஜேபி தயாராகிவிட்டது. மோடியின் பெயரை பிஜேபி அறிவிப்பதற்கு முன்னரே கூட கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் விலக வாய்ப்புள்ளதாக சிலர் கருதுகிறார்கள். . ஆனால் மோடியின் பெயரை பிஜேபி வெளியிட்ட பின் அதனை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து விலகினால் முஸ்லிம்களின் ஆதரவை பெறலாம் என நிதிஷ் குமார் திட்டமிட நிறைய வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடக்கவே நிறைய வாய்ப்புள்ளதாகவும்  நான் நினைக்கிறேன். எனவே பிஜேபியின் தேர்தலுக்கு முந்தைய பிரதமர் வேட்பாளர் மோடி என்பது கிட்டத்தட்ட நூறு சதவிகிதம் உறுதியாகிவிட்டது. அதற்காக சில கூட்டணி கட்சிகளை இழக்கவும் அது தயாராகிவிட்டது. தேர்தலுக்குப்பின் பிஜேபியும், அதன் கூட்டணி கட்சிகளும் பெறும் இடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் பிரதமர் வேட்பாளரின் பெயர் மாறுவதற்கும் நிறைய வாய்ப்புள்ளதாக நினைக்கிறேன். தேர்தலுக்குப்பின் மேலும் சில கட்சிகளின் ஆதரவை பெற வேறு ஒரு மிதவாத முகம் கொண்ட பிஜேபி தலைவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட நிறைய வாய்ப்புள்ளது.

காங்கிரசை பொறுத்தவரையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படலாம் என்று பலர் கருதுகிறார்கள். இக்கருத்தினை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.  காங்கிரஸ் கூட்டணிக்கு உறுதியான வெற்றி வாய்ப்பு இருந்தால் மட்டுமே ராகுல் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படலாம். ஆனால் வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற வாய்ப்புக்கள் மங்கிய நிலையில் உள்ளன.  அப்படிப்பட்ட நிலையில் மூழ்கும் கப்பலுக்கு கேப்டனாக பொறுப்பேற்க ராகுல் விரும்பமாட்டார். மோடியிடம் தோற்று தனது இமேஜை அரசியலின் ஆரம்ப கட்டத்திலேயே கெடுத்துக்கொள்ள ராகுல் விரும்ப மாட்டார். தோல்வியின் விளிம்பில் உள்ள காங்கிரசை வெற்றிப்பாதைக்கு அழைத்து செல்லும் சக்தி ராகுலுக்கு கிடையாது என்பதை கடந்த கால தேர்தல்கள் உறுதிப்படுத்திவிட்டன. ஆயினும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மையை அளித்தால் அந்த நிலையில் ராகுல் பிரதமராக அறிவிக்கப்பட வாய்ப்புண்டு.

எனவே வழக்கம் போல் தேர்தலுக்கு முன் மன்மோகன் சிங் போன்ற யாரேனும் ஒரு கைப்பாவை பிரதமர்  வேட்பாளராக அறிவிக்கப்படலாம். தனக்கு மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வகிக்க ஆசை உண்டு என்பதை மன்மோகன் சிங் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ஆனால் காங்கிரஸ் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க சிறிதும் வாய்ப்பு இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஏற்கனவே அடிமட்டத்திற்கு போய்விட்ட காங்கிரசின் இமேஜை காக்க வேறு யாரேனும் ஒருவர் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்படலாம். அது சோனியா காந்தி வீட்டு சமையல்காரனாகவோ அல்லது தோட்டக்காரனாகவோ கூட இருக்கலாம். அதாவது புதிய மொந்தையில் பழைய கள் என்பது காங்கிரசின் ஏமாற்றும் திட்டமாக இருக்கலாம். அல்லது டைம் பத்திரிகை கூறியுள்ளது போல் அந்த வேட்பாளர் ப. சிதம்பரமாக கூட இருக்கலாம். ஈழப் பிரச்சினையில் தமிழ் நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டை தேர்தலின் பொது எதிர்கொள்ள அது உதவலாம் என காங்கிரஸ் நினைக்கலாம். தமிழ்நாட்டில் சில கூட்டணி கட்சிகள் கிடைக்க இத்திட்டம் உதவும் என்றும் காங்கிரஸ் திட்டமிடலாம்.

எனவே வரும் மக்களவை தேர்தலில் பிரதம வேட்பாளருக்கான போட்டி நரேந்திர மோடி Vs ப. சிதம்பரம் என்று இருக்கவே நிறைய வாய்ப்புண்டு. ஆனால் தேர்தலுக்குப் பின் பிரதமர் போட்டிக்கான பெயர்கள் மாற நிறைய வாய்ப்புகளும் உள்ளது. அப்படியானால் தேர்தலுக்கு முன் இக்கட்சிகள் மக்களுக்கு அளித்த பிரதம வேட்பாளர் குறித்த உறுதிமொழிகள்  என்னவாகும்?. தேர்தல் அறிக்கைகள் போன்றே அதுவும் காற்றோடு பறக்கவிடப்படும்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

12 கருத்துகள்:

 1. ஈழப் பிரச்சினையில் தமிழ் நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டது என்ற குற்றச்சாட்டை...
  அது என்ன துரோகம் என்பதனை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் பிரபாகாரனுக்கு ஆள்வதிற்க்கு ஒரு நாடு ஏற்படுத்தி கொடுப்பதாக கூறிவிட்டு பின்பு ஏமாற்றிவிட்டார்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்க என்ன வேற்று கிரகத்தில் இருந்து வந்திருக்கீங்களா?

   நீக்கு
  2. ஈழப்பிரச்சினை என்றாலே விடுதலைபுலிகள் பிரச்சினை எனபது போல் பேசுகிறீர்கள். அங்குள்ள அப்பாவி தமிழ் மக்களை பற்றி ஏன் பேச மறுக்கிறீர்கள் எனபதுதான் புரியவில்லை. தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் சுய லாபங்களுக்காக ஈழப்பிரச்சினையை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் தமிழ் நாட்டு மக்கள் ஈழ மக்களின் மீது எப்போதுமே உண்மையான அக்கறை கொண்டவர்கள். விடுதலை புலிகள் இப்போது முற்றிலுமாக அழிந்துவிட்டனர். இப்போதாவது அப்பாவி தமிழ் மக்களின் பரிதாபகர நிலையை பற்றி அக்கறையோடு பேசலாமே. போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர்களின் நிலை பரிதாபமாக உள்ளதே?. தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம், ஒரு சிங்களவர் கூட வசிக்காத பகுதிகளில் புத்த கோவில்கள், இனக்கலப்பு திருமணம் போன்ற போருக்கு பிந்தைய இன அழிப்பு முயற்சிகளை இந்திய அரசு ஊக்குவிப்பது கூட தமிழருக்கு செய்யும் துரோகம்தான். ஈழ மக்கள் சம உரிமையுடனும், கௌரவத்துடனும் இலங்கையில் வாழ வேண்டும் என்பதுதான் தமிழ் நாட்டு மக்களின் ஆசை. ஆனால் அவற்றை சிங்கள அரசு வழங்க மறுக்கும் பட்சத்தில் தனி நாடு கோரிக்கை பற்றி முடிவு எடுக்க வேண்டியது அம்மக்களின் தனிப்பட்ட உரிமை. அம்முடிவில் தலையிட எனக்கும், உங்களுக்கும், யாருக்கும் உரிமையில்லை.

   நீக்கு
 2. @ஜெயம்
  தங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது தமிழ்நாட்டில் இருந்து வரும் செய்திகளை பார்த்தால் ஏதோ சென்ற மாதம் தான் இலங்கையில் யுத்தம் நடந்தது போல தோன்றுகிறது. துரோகம் என்பது யாரால் இலங்கை தமிழர்களுக்கு நடந்தது என்பதை நண்பர் ஓசையின் மிதவாதமும் தீவிரவாதமும் என்ற பதிவின் இலங்கையை பற்றி தகவல்களில் இருந்து சிறிது அறிந்து கொள்ள முடியும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான்....நான் வேகநரிக்கு கொடுத்த லிங்குகளில் இருக்கும் செய்திகளைப்பார்த்தால் தமிழ்நாட்டு செய்திகள் மிக மிக பழையவை என்பது புலனாகும்! ஏற்றுக்கொள்லத்தான் வேண்டும்!!

   லண்டனில் கம்பேர்கர் சாப்பிட்ட விடத்தில் வந்து கதை விட்டு பின்னர் ‘மனச்சாட்சிக்குத் தெரியும்” என சுப்பராய் கதை விட்ட அதே baleno தானே நீங்கள்! நெருப்புப்பெட்டிகதை விடுவது ஒன்றும் புதிதல்லவே!

   நீக்கு
  2. நீங்கள் சொன்ன மாதிரி சமாதானம் நிலவுவதாக உங்களுக்கு வசதியாக இருக்க ஸ்ரீலங்கா அரசு முஸ்லிம்களின் மேல் தாக்குதல் நடந்த விடயத்தை எழுதிய வெப்சைற்ரை ஸ்ரீலங்காவில் தடை செய்திருக்கிறது. செய்தி கீழே.....
   http://www.colombotelegraph.com/index.php/selected-tweets-colombo-telegraph-unblocked/
   இதைப் பார்க்காதவர்கள் தமிழ்நாட்டுச் செய்திகளை அதாவது போர் முடிந்து ஒருமாதமே ஆகிறது என உங்கலைப் போன்றவர்கலை நம்பவைக்கப் பார்க்கிறார்கள்! மிகவும் அவதானமாய் இருங்கள். இப்படித்தான் வேகநரி நெருப்புப்பெட்டி கதையை நம்பி மோசம் போனார். நீங்கள் ‘கம்பேகர்’ கதையில் அடித்த தலைகுத்துக்கரணம் போல் அடிக்க வேண்டி வரும். மிக அவதானமாக இருக்கவும்!

   நீக்கு
 3. ஒருவரின் படத்தை கையில் பிடித்துக்கொண்டு இந்தியாவை திட்டி தீர்த்து இந்தியாவுக்கு சவால்விட்டு நடத்தபடும் போராட்டங்கள் யாருக்காக நடத்தபடுகிறது என்ற சந்தேகம் வருவது நியாயமானது. அதனால உண்மையிலே இலங்கை தமிழங்க மேல அக்கறையுள்ளவங்களையும் சிலர் தப்பா நினக்க வேண்டிவருவது உண்மையே. யுத்தம் முடித்துவைக்கபட்டு 4வருடங்கள் ஆனாலும் பல வருடங்களாக புலிகள் யுத்தம் நடத்தியிருக்கிறது. அதனாலே மிக பெரிய அழிவுகள் அங்கே ஏற்பட்டிருக்கு. யுத்தத்தின் பின் அவர்களின் நிலை மேம்பட்டே வந்திருக்கு. அவர்களுடைய வாழ்க்கை நிலமை உயர்வடைவதை அமெரிக்காவோ மேற்குலநாடுகளோ மறுத்ததில்லை. யுத்தமொன்று நடக்காத தமிழக ஏழை மக்களின் நிலை ஒன்றும் மேம்பட்டது கிடையாது.எனது நண்பர் ஒருவருக்கு ஒருவன் பூ சுத்தினான் இலங்கை தமிழர்களுக்கு தீப்பெட்டி கூட இலங்கை அரசு கொடுப்பதில்லையென்று. நான் நேரில் பார்த்தபடியா அது எவ்வளுவு பொய் என்பது தெரியும்.எல்லாம் ப்ரொபகன்டா தான். தினமணியில் இரா. சோமசுந்தரம் எழுதிய ஒரு நல்ல கட்டுரை வந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்க நண்பன் சொன்னதெல்லாம் நம்பி இப்படி ஒரு ஏமாளியாய் இருந்திருக்கிறீங்க. நேற்று மீண்டு ஒருமுறை (மீண்டும் என்கின்ர வார்த்தை சொல்லியே சலிப்பாகி விட்டது) ஸ்ரீலங்கா அரச ஆதரவு ராணுவ புலநாய்வுப்பிரிவால் தமிழர் எம்பிக்கள் அலுவலகம் கல்வீசி அட்டூழியம் நடந்திருக்கு.
   http://onlineuthayan.com/News_More.php?id=509451935901155244
   இவர்களில் இருவரைப் பிடித்து பொலிசிடம் க்டுத்தவுடன் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்லனர்.
   இப்படியே அண்மையில் நடந்தது பிடித்துக் கொடுக்கப்பட்டவர்கலை பொலிஸ் அழைத்துச் செல்லு படம் உலகெங்கும் வெளியாகியது ஆனால் பாருங்கள் பொலிஸ் அதிகாரி சொல்கிறார் அது தொழில்நுட்ப உதவியால் சோடிக்கப்பட்ட படமாம்!

   தமிழனை விடுங்கள் ....முஸ்லிம் வியாபார நிலையம் மஹிந்த ராஜபக்சாவின் ச்கோதரால் வலர்த்து எடுக்கப்பட்டல் பெலத்த பிக்குகளால் தாக்கப்படுவது (மூன்று நாட்களின் முன்ன்னர்) பார்க்கப்போகிறீர்களா? பி.பி.சி யில் கேட்டால் இன்னும் நன்றாக இருக்குமல்லவா? கேளுங்கள்...
   http://onlineuthayan.com/News_More.php?id=509451935901155244

   முஸ்லிம்கள் சிங்கலவருக்கு புலிகளுக்கு எதிராகவும் ஜெனீவாவிலும் ஆதரவாக இருந்தார்களே!

   நீங்கள் என்னடாவென்றால் நெருப்புப்பெட்டி அது இது என சுப்பராய் கதைவிடுகிறீர்களே?
   புத்தபிக்கு செக்குயூரிட்டி கமராவுக்கு கல்லெறிந்து உடைப்பது வீடியோவில் உள்லது...பார்க்க விரும்புகிறீர்களா வேக நரி அவர்களே!


   நீக்கு
  2. இன்னொன்று...புலிகளின் பரம எதிரி டி.பி.எஸ் ஜெயராஜ் கூட எழுதி இருக்கிறார். படிச்சுப் பாருங்க...
   http://dbsjeyaraj.com/dbsj/archives/19246

   நீக்கு
 4. நீங்கள் சொன்ன மாதிரி சமாதானம் நிலவுவதாக உங்களுக்கு வசதியாக இருக்க ஸ்ரீலங்கா அரசு முஸ்லிம்களின் மேல் தாக்குதல் நடந்த விடயத்தை எழுதிய வெப்சைற்ரை ஸ்ரீலங்காவில் தடை செய்திருக்கிறது. செய்தி கீழே.....
  http://www.colombotelegraph.com/index.php/selected-tweets-colombo-telegraph-unblocked/
  இதைப் பார்க்காதவர்கள் தமிழ்நாட்டுச் செய்திகளை அதாவது போர் முடிந்து ஒருமாதமே ஆகிறது என உங்கலைப் போன்றவர்கலை நம்பவைக்கப் பார்க்கிறார்கள்! மிகவும் அவதானமாய் இருங்கள். இப்படித்தான் வேகநரி நெருப்புப்பெட்டி கதையை நம்பி மோசம் போனார். நீங்கள் ‘கம்பேகர்’ கதையில் அடித்த தலைகுத்துக்கரணம் போல் அடிக்க வேண்டி வரும். மிக அவதானமாக இருக்கவும்!

  பதிலளிநீக்கு
 5. யாருங்க இந்த இந்த ஊர்சுற்றி? வெளிநாட்டில் இருந்து வரும் டெலரில் நம்மூரில் ஊர்சுற்றி திரியும் தீமையின் உருவமா? (பார்க்க திண்ணை கட்டுரை) அல்லது வெளிநாட்டில் தமிழர்களிடம் கப்பபணம் பெற்று வாழும் புலி கோடீஸ்வரனா?

  பதிலளிநீக்கு
 6. //..யாருங்க இந்த இந்த ஊர்சுற்றி?...//

  ஹா...ஹா..ஹா...ஏனுங்க பம்மாத்து கதை அளப்புகளுக்கு பதில் சொல்லாமல் திசை திருப்புறீங்க?
  வேகநரியாய் இருக்கலாம் ஆனால் படுவேகமாய் பம்மாத்து விட்டால் நமக்கு தெரியாமல் போய்விடும் என்கின்ர நினைப்பா?

  பதிலளிநீக்கு