ஞாயிறு, 13 ஜனவரி, 2013

காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானிடம் இந்தியா பின்வாங்குவது ஏன்?


08-01-2013 அன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்குள் புகுந்து இரண்டு இந்திய ராணுவ வீரர்களை கொடூரனமான முறையில் கொலை செய்தது மீண்டும் இரு நாடுகளிடையே பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் ராணுவத்தின் 29 பலோக் ரெஜிமென்ட் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. நாயக் சுதாகர் சிங், நாயக் ஹேம்ராஜ் என்ற  இரு இந்திய வீரர்களின் உடலையும் சிதைத்த பாகிஸ்தான் ராணுவம் இருவரின்  தலையையும் வெட்டி அதில் நாயக் சுதாகர் சிங்கின்  தலையை வெற்றிக்கோப்பையாக கருதி தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்டது. பாகிஸ்தான் வழக்கம்போல் இந்தியாவின் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்திய ராணுவத்தின் சக வீரர்களே அவர்களை கொலை செய்துவிட்டதாக முதலில் குற்றம்சாட்டியது. பின்னர் ஒரு கட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் LOC யில் நடப்பது வழக்கமானதுதான் என்றும், இந்த சம்பவத்தின் மூலம் இரு நாடுகளிடையே நட்புறவு பாதிக்காது என்றும் கூறி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது.

மேற்கண்ட சம்பவம் போல் பல சமபவங்கள் இதற்கு முன்னும் எல்லைகோட்டில் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இந்தியாவும் தன் கண்டனங்களை பதிவு செய்கிறது. பாகிஸ்தானின் செயலை வன்மையாக கண்டிப்பதாக அரசியல்வாதிகள் அறிக்கைவிடுகின்றனர். பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்குமா? என்ற வாதங்கள் அந்த சமயங்களில் மீடியாக்களில் எழுப்பப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானுக்கு எதிராக எந்த ஒரு வலுவான பதில் நடவடிக்கையும் இந்தியா எடுப்பதில்லை. பாகிஸ்தான் ராணுவமும் தனது கொடூரமான செயல்களை தொடர்ந்து நடத்தித்தான் வருகிறது. மத்தியில் ஆள்வது காங்கிரஸ் அரசானாலும் சரி, பாஜக அரசானாலும் சரி பாகிஸ்தானை எச்சரிக்கும் விதமாக பதில் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகின்றனர் என்பதே உண்மை. மேற்கண்ட சம்பவத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் மீது  சர்வதேச அழுத்தத்தை உருவாக்க முனைய வேண்டிய இந்தியா, உண்மையில் இந்த சம்பவத்தை பூசி மறைக்கவே நினைக்கிறது. உண்மையில் பாகிஸ்தான்தான் மேற்கண்ட சம்பவத்தை அடக்கி வாசிக்க வேண்டும். ஆனால் இந்திய அதிகாரிகளின் அறிக்கையை பார்க்கும்போது இந்தியாதான் இந்த சம்பவத்தை பூசி மெழுக நினைப்பதாக தோன்றுகிறது. இரண்டு இந்திய வீரர்களை கொடூரமாக கொன்ற பாகிஸ்தானின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயங்குவது ஏன்?. குறிப்பாக இந்தியா காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானிடம் பணிந்து போவது ஏன்? அல்லது உறுதியான நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன்?
.
காரணம் ஒன்று
பாகிஸ்தான் ராணுவத்தின் கொடூர செயலை சர்வதேச நீதி மன்றத்திற்கோ, அல்லது சர்வதேச தளத்திற்கோ கொண்டு சென்றால் காஷ்மீர் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறிவிடலாம் என்று இந்தியா நினைக்கலாம். அல்லது மூன்றாவது நாடு காஷ்மீர் பிரச்சினையில் தலையிட வாய்ப்பு ஏற்படலாம் என்று இந்தியா நினைக்கலாம். ஆனால் இந்த ஒரு காரணத்திற்காக பாகிஸ்தான் செய்யும் அனைத்து கொடும் செயல்களையும் நாம் பொறுத்துத்கொண்டிருக்க வேண்டியதில்லை. பாகிஸ்தான் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பதில் நடவடிக்கை இந்தியாவால் எடுக்கப்படவேண்டும். அவ்வாறு இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவின் நிலை பலவீனமானது என்றுதான்  உலகநாடுகளால் கருதப்படக்கூடும்.

இரண்டாவது காரணம் 
“இந்தியா தனது அண்டை நாடுகளுடன் நட்புறவை விரும்பும் ஒரு சமாதான நாடு” என்று உலக நாடுகளிடம் நல்ல பெயர் வாங்க ஆசைப்படுவது மற்றொரு காரணம். ஆனால் நட்புறவு என்பது இரு நாடுகளும் சேர்ந்து பேணிக்காக்க வேண்டிய விஷயம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதுவும் பாகிஸ்தான் போன்ற பொறுப்பற்ற நாடுகளிடம் நட்புக் கரம் நீட்டுவது என்பது இந்தியாவின் பலவீனத்தையே உலகிற்கு காட்டும். பாகிஸ்தானுடன் கிரிகெட் விளையாடுவது, பஸ் விடுவது போன்றவை பத்திரிக்கைகளுக்கு செய்தி தரத்தான் பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன் தராது. இந்தியாவுடனான வெறுப்பில் தோன்றிய நாடு பாகிஸ்தான். பாகிஸ்தானின் அடிப்படை கொள்கையே இந்திய வெறுப்புதான். எனவே பாகிஸ்தானுடன் நட்பு என்பது என்றுமே நடக்காத ஒரு விஷயமாகும். எனவே அடைய முடியாத ஒன்றிற்காக பாகிஸ்தான் செய்யும் அனைத்து அட்டூழியங்களையும் இந்தியா தாங்கி கொள்ளவேண்டிய அவசியமில்லை. அண்டை நாடுகளை தாஜா செய்து பிரச்சினைகளை தீர்த்து விடலாம் என்று இந்தியா நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை. 
   
மூன்றாவது காரணம்
காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்ற நம்பிக்கை இந்தியாவிற்கே இல்லாதது போல் தெரிகிறது. இந்த அவநம்பிக்கையே இந்தியா காஷ்மீர் பிரச்சினையில் உறுதியான நடவடிக்கை எடுக்க மிகப்பெரும் தடையாக உள்ளது. காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது என்ற கருத்தில் இந்தியா முதலில் நம்பிக்கை கொள்ள வேண்டும். தனது தரப்பு கருத்து நியாயமானது என்பதில் இந்தியா உறுதியாக இருக்கவேண்டும்.

நான்காவது காரணம்
இந்தியா எடுக்கும் பதில் நடவடிக்கை இரு நாடுகளிடையே உள்ள பதட்டத்தை அதிகரித்து முழு அளவிலான போருக்கு வழி வகுத்துவிடும் என்பது சிலரின் கருத்து. இது பற்றி கவலைப்படவேண்டியது இந்தியா மட்டுமல்ல. பாகிஸ்தானும் கூடத்தான். ஆனால் எதிரி நாடு நம் மீது போரை திணிக்கும்போது அல்லது போருக்கு தயாராக இருக்கும்போது நாம் பதட்டத்தை குறைப்பது பற்றி பேசுவது நாம் பலவீனமானவர்கள் என்ற எண்ணத்தை எதிரிக்கு ஏற்படுத்திவிடும். அதுமட்டுமில்லாமல் போரை தவிர்ப்பது என்பது இந்தியாவிற்கு மட்டுமான ஒருவழிப்பாதையாக இருக்கக்கூடாது. அதுபற்றி பாகிஸ்தானும் அக்கறை கொண்டிருக்கவேண்டும். ஆனாலும் பாகிஸ்தான் போரை விரும்பும் நாடு என்பதை கடந்த கால வரலாற்றின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். இதுவரை இந்தியாவின் மீது மூன்று போர்களை பாகிஸ்தான் திணித்துள்ளதை நாம் மறந்துவிடக்கூடாது.

இந்தியாவின் பதில் நடவடிக்கை என்பது முழு அளவிலான போராக இருக்கவேண்டும் என்று கூறவில்லை. ஆனால் இந்திய வீரர்கள் இரண்டு பேர் கொல்லப்பட்டால் இருநூறு பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்படுவார்கள் என்ற விதியினை பாகிஸ்தானுக்கு உணரச்செய்யும் அளவினதாக அது இருக்கவேண்டும். சிலர் இதனை மனிதாபிமானமற்ற செயல் என்று கூறலாம். மனிதாபிமானம் மனிதர்களின் மீது காட்டப்படவேன்டியது. பாகிஸ்தானிடம் மனிதாபிமானம் காட்டுவது என்பது எந்த பலனையும் இந்தியாவிற்கு தராது. எனவே பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டனங்களை பதிவு செய்வது, வன்மையாக கண்டிக்கிறோம் என்று அறிக்கை விடுவது போன்ற கண்துடைப்பு காரியங்களை கைவிட்டு, பாகிஸ்தானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இப்போதாவது இந்திய அரசு முன்வரவேண்டும். அவ்வாறு இந்திய அரசின் நடவடிக்கை அமையாவிடில் அது இந்திய ராணுவத்தின் மனோபலத்தை மிக அதிக அளவில் பாதித்துவிடும். இந்திய ராணுவத்திற்கும், இந்திய அரசிற்கும் இடையே உள்ள நம்பிக்கையை அது குலைத்துவிடும். எக்காரணத்தை கொண்டும் இந்திய வீரர்கள் மனதில் தாங்கள் நிராதரவானவர்கள் என்ற எண்ணம் உருவாகக்கூடாது. இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்று இந்திய அரசு உலகிற்கு உணர்த்த இந்திய ராணுவத்தின் கட்டப்பட்ட கைகள் உடனடியாக அவிழ்த்து விடப்படவேண்டும்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

16 கருத்துகள்:

  1. நல்ல அலசல், அருமையான பதிவு.



    உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. karanam-nu sollittu vilaivugalai paththi ezuthi irukkeenga. thevilaaga illai please look into it.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்கு காரணங்களை தலைப்பிட்டு குறிப்பிட்டுள்ளேன். அத்துடன் அந்த காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும், இந்தியா இப்பிரச்சினையில் மெளனமாக இருப்பதால் ஏற்படும் விளைவுகளையும் குறிப்பிட்டுள்ளேன். இன்னும் தெளிவாக எழுத முயற்சி செய்கிறேன். தங்கள் கருத்துரைக்கு நன்றி!

      நீக்கு
  3. வெட்கம் கெட்ட அரசியல வாதிகள் இருக்கும் வரை இந்தியா அனைத்திற்கும் தலைதாழ்த்தி கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டே இருக்கும். இலங்கை விடயத்தில் என்ன நடக்கின்றது? அதுவே தான் பாக்கிஸ்தானிலும். பயங்கரவாதிகளை அழிக்கின்றோம் என்று அப்பாவி பொதுமக்களையும் உரிமைக்காய் போராடுபவர்களையும் கோழைத்தனமாக கொனறொழிக்கத் தெரிந்த இந்தியாவிற்கு உண்மையான பயங்கரவாதிகளான பாக்கிஸ்தானை அடக்க அஞ்சுவது வெட்கக் கேடான அவமானம் தரும் செயல்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தியாவின் மற்ற சிறிய அண்டை நாடுகளும் கூட இந்தியாவுடனான பிரச்சினைகளில் இந்தியாவை ஆதிக்கம் செய்வதை பார்க்க முடிகிறது. இலங்கை தமிழர் பிரச்சினை, கார்கில் பிரச்சினை, 2001-ஆம் ஆண்டில் இந்தியாவின் BSF – பங்களாதேஷின் BDR படைகளுக்கிடையே நடந்த தாக்குதலில் 16 இந்திய வீரர்கள் இறந்த சம்பவம் போன்ற சில சம்பவங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். மேற்கண்ட சம்பவங்களில் எல்லாம் இந்தியாவை அதன் அண்டை நாடுகள்தான் ஆதிக்கம் செய்தன. இலங்கை தமிழர் பிரச்சினையில் இலங்கை இந்தியாவின் மீது காட்டிய ஆதிக்கம் உலகம் அறிந்தது. தான் ஏமாற்றப்பட்டதை இந்தியா தற்போது ஓரளவு உணர்ந்துகொண்டாலும் வெளியே சொல்ல முடியாத நிலை. ராஜதந்திரத்தில் இந்தியா எப்போதும் அண்டைநாடுகளுடன் தோற்றுக்கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான்!

      நீக்கு
  4. இந்திய ராணுவ வீரர்கள் எப்பவோ அரசின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் இப்போது அவர்கள் படையில் இருப்பது தனது குடும்ப சூழ்நிலை பணத்தேவை கருத்தில்கொண்டு.உயிருடன் வெளிவருவது அவர்கள் லக்.மத்திய அரசுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை.மனம் வருந்தி கருத்து கூறும் ஒரு முன்னால் ராணுவ வீரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாட்டுக்காக தன் உயிரை விடத் தயாராக இருக்கும் தனது ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசு செய்த நன்றிக்கடன் இதுதான் போலும். நான் ஒரு இந்தியன் என்று சொல்லிகொள்வதில் வெட்கப்படுகிறேன்.

      நீக்கு
  5. போரிடும் வலுவான சூழலில் கூட இந்தியாவின் நிலை கண்ணாமூச்சிதான்.இப்பொழுது தீபகற்ப சுற்றி வளைப்பில் போரிடும் குணமெல்லாம் கற்பனைக்கே எட்டாதது.அதுதான் ராஜதந்திர கொடியேற்று விழாவுக்கு அழைப்பு விட்டு சமாதானம் செய்தாயிற்றே!இன்னுமொரு துயர நிகழ்வுக்கு காத்திருப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போதும் அந்த துயர சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிப்போம்! கண்டித்துக்கொண்டே இருப்போம்...

      நீக்கு
  6. பாகிஸ்தானுடன் நட்பு என்பது என்றுமே நடக்காத ஒரு விஷயமாகும். எனவே அடைய முடியாத ஒன்றிற்காக பாகிஸ்தான் செய்யும் அனைத்து அட்டூழியங்களையும் இந்தியா தாங்கி கொள்ளவேண்டிய அவசியமில்லை. அண்டை நாடுகளை தாஜா செய்து பிரச்சினைகளை தீர்த்து விடலாம் என்று இந்தியா நினைத்தால் அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.

    பதிலளிநீக்கு
  7. இந்த லட்சணத்தில் பாகிஸ்தான் தான் இந்தியாவுக்கு மிக வேண்டப் பட்ட நாடு என்ற அவார்டு வேற. எதைப் பண்ணியும் அந்த முட்டாப் பசங்க திருந்தினா மாதிரியே தெரியலை. ஐயோ........ ஐயோ.........

    பதிலளிநீக்கு
  8. இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு விசா விதிமுறைகளில் சலுகை, AFSPA சட்டத்தினை காஷ்மீரிலிருந்து திரும்பபெறுதல் என்று பாகிஸ்தானுக்கு சலுகைகளை அளிக்க தயாராக இருக்கிறது மத்திய அரசு! கடவுள்தான் நம்மை காப்பாற்ற வேண்டும்!

    பதிலளிநீக்கு
  9. Vijaya Kumar அவர்களே என்னங்க நடந்திச்சு? நானும் சில நாட்களாக உங்களுக்கு பின்னோட்டமிட முயற்ச்சித்தித்தேன்.உங்க பின்னோட்ட பெட்டி எனக்கு தோன்றவே இல்லை.இன்று தான் சரி வந்தது. உங்க பதிவு சுப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேகநரியை இன்னும் காணவில்லையே என்று நினைத்தேன். நரி முகத்தில் விழித்தால் மிகவும் நல்லதாமே!. தங்களின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு நன்றி!

      நீக்கு
  10. ராஜ நடராஜனும் semmalai akash சும் எப்படி முதலே பின்னோட்டமிட்டார்கள்?
    எல்லாம் இடியப்பபூதனார் அறிவான்.

    பதிலளிநீக்கு