திங்கள், 23 ஜூலை, 2012

காமம்! காதலின் கடவுள் துகள்!!



காமம்!
காதலின் கடவுள் துகள்  
உனக்கும் எனக்கும்
சமத்துவ பேரின்ப வரம் தந்த
மார்க்சிய கடவுள்

மனு தோன்றா காலத்து தோற்றம் என்றும்
முதுமை காணா  மார்கண்டேயன்
இருப்பின் உயிர் மூலம்

நேற்று போல் இன்றில்லை
இன்று போல் என்றுமில்லை
நாளையும் இன்றுபோல் இருப்பதில்லை
ஒவ்வொரு நாளும் அந்நியம்
ஆனாலும் மிக அந்நியோன்யம்

சாகும் வரை சலிப்பதில்லை நான்
சாகும் வரை சாவதுமில்லை
பிறப்பு முதல் இறப்பு வரை
மாயாஜாலம் காட்டும்
மாயக் கண்ணன்

காதலென்னும் உலக மதம் தந்து
மதம் அழித்த ஆத்திகவாதி

கரை காண முடியா பேரின்ப கடல்
விண்டது ஒரு துளிதான்   அந்த
காமேஸ்வரனின் அடி முடி காணும் வரை
எந்தன் உயிர் வழி பயணம் தொடரும்!


More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

7 கருத்துகள்:

  1. காதலென்னும் உலக மதம் தந்து
    மதம் அழித்த ஆத்திகவாதி//

    அருமை அருமை
    அருமையான ஆழமான சிந்தனையில் பிறந்த
    அற்புதப் படைப்பு
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யா,
      தங்களின் உற்சாகமூட்டும் வாழ்த்துக்களுக்கு நன்றி!

      நீக்கு
  2. நேற்று போல் இன்றில்லை
    இன்று போல் என்றுமில்லை
    நாளையும் இன்றுபோல் இருப்பதில்லை

    அருமையான வரிகள்

    பதிலளிநீக்கு
  3. அன்பு சகோ அன்பு! தங்களின் கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. //மதம் அழித்த ஆத்திகவாதி//

    - சார்! மதம் அழித்தால் நாத்திகவாதி அல்லவா? ஆத்திகவாதி என்பானேன்?!!!


    அப்புறம் காமம் என்பது பேரின்பக் கடல் அல்ல. வெறும் சிற்றின்பக் குளம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார்!
      //காதலென்னும் உலக மதம் தந்து//
      மதத்தை தோற்றுவித்தவன் ஆத்திகவாதிதானே!
      இந்த ஆத்திகவாதி காதலென்னும் மதத்தால் அழிப்பது மதம் பிடித்த மனங்களைத்தான்!

      அப்புறம், நீங்களும் உங்கள் குளத்தை விட்டு சற்று வெளியே தாவி கொஞ்சம் கடலில் மூழ்கித்தான் பாருங்களேன்!

      நீக்கு