சனி, 20 அக்டோபர், 2012

இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளின் ராணுவ வலிமை - ஓர் ஒப்பீடு!

உலக நாடுகளின் ராணுவ பலத்தினை வரிசைப்படுத்துவது எனபது மிகவும் கஷ்டமான காரியம்தான். GlobalFirepower.com என்ற நிறுவனம் 2011 ஆம் ஆண்டிற்கான உலகநாடுகள் ராணுவ தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் தரவரிசை பட்டியலை வெளியிட்டபோதும் GFP வெளியிட்ட தரவரிசை பட்டியல் முழுமையானதாக கருதப்படுகிறது. இந்த தர வரிசை பட்டியல் தயாரிக்க எடுத்துக்கொள்ளப்பட்ட காரணிகளில் அணு ஆயுதங்கள் எடுத்துக்கொள்ளப்படவில்லை.  நாட்டின் தரைப்படை, கடற்படை, வான்படை, வழக்கமான போர் ஆயுதங்கள், கட்டுமான வசதிகள், மற்றும் பொருளாதார வலிமை போன்ற 45 வகையான காரணிகள் இப்பட்டியல் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டன. அணு ஆயுதங்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் இப்பட்டியலின் தரவரிசை மாறலாம். மேலும் எண்ணிக்கைகள் மட்டுமே இங்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்தந்த நாட்டு ராணுவங்களின்  போர் வியூக அறிவு திறன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை

இப்போது நாடுகளின் தரவரிசை பட்டியல்களை பார்க்கலாம்.

1
அமெரிக்கா
11
பிரேசில்
2
ரஷ்யா
12
ஈரான்
3
சீனா
13
ஜெர்மனி
4
இந்தியா
14
தைவான்
5
இங்கிலாந்து
15
பாகிஸ்தான்
6
துருக்கி
16
எகிப்து
7
தென்கொரியா
17
இத்தாலி
8
பிரான்ஸ்
18
இந்தோனேசியா
9
ஜப்பான்
19
தாய்லாந்து
10
இஸ்ரேல்
20
உக்ரைன்


இந்த பட்டியலில் நாம் எதிர்பார்க்காத நாடுகள் எதிர்பார்க்காத இடங்களில் இருப்பதை பார்க்க முடிகிறது. பட்டியலில் 9 ஆசிய நாடுகள் இடம் பிடித்துள்ளன. இதன் மூலம் ஆசியாவில் உள்ள ஆயுத போட்டியை நாம் அறிய முடிகிறது. ஆசிய கண்டத்தின் செல்வங்கள் மக்களின் வறுமையை ஒழிக்க பயன்படுத்தப்படாமல் ஆயுதங்கள்  வாங்க பயன்படுத்தப்படுவதை இந்த அட்டவணை தெளிவுபடுத்துகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவோடு எப்போதும் நட்புறவாக இருந்ததில்லை. சீனாவுடன் ஒரு முறையும், பாகிஸ்தானோடு மூன்று முறையும் இந்தியா போரிட்டுள்ளது. நாம் அமைதியை விரும்பினாலும், எதிர்காலத்தில் நம்மீது ஒரு போர் திணிக்கப்பட நிறையவே வாய்ப்புண்டு. எனவே இம்மூன்று நாடுகளின் ராணுவ பலத்தினையும் ஒரு ஒப்பிட்டு அட்டவணை மூலம் நாம் கணிக்க முற்படலாம்.
 

இந்தியா
சீனா
பாகிஸ்தான்
RANK
         4
          3

  15
Total Population
1,189,172,906
1,336,718,015
187,342,721
Military Manpower Available
615,201,057
749,610,775
93,351,401
Fit for Military Service
489,571,520
618,588,627
75,326,989
Reaching Military Age Yearly
22,896,956
19,538,534
4,342,629
Active Military Personnel
1,325,000
2,285,000
617,000
Active Military Reserves
1,747,000
800,000
515,500
Total Aircraft
2,462
5,176
1,414
Total Land-Based Weapons
75,191
47,575
16,461
Total Naval Units
175
972
11
Towed Artillery
10,000
25,000
1,806
Merchant Marine Strength
324
2,012
10
Major Ports and Terminals
7
8
2
Aircraft Carriers
1
1
0
Destroyers
8
25
1
Frigates
12
47
11
Submarines
15
63
5
Patrol Coastal Craft
31
332
15
Mine Warfare Craft

8
52
4
Amphibious Operations Craft
20
233
1
Defense Budget / Expenditure
$36,030,000,000
$100,000,000,000
$6,410,000,000
Foreign Reserves
$284,100,000,000
$2,876,000,000,000
$16,100,000,000
Purchasing Power
$4,060,000,000,000
$10,090,000,000,000
$464,900,000,000
Oil Production
878,700 bbl
4,273,000 bbl
59,140 bbl
Oil Consumption
2,980,000 bbl
9,189,000 bbl
373,000 bbl
Proven Oil Reserves
5,800,000,000 bbl
20,350,000,000 bbl
436,200,000 bbl
Total Labor Force
478,300,000
815,300,000
55,770,000
Roadway Coverage
3,320,410 km
3,860,800 km
260,760 km
Railway Coverage
63,974 km
86,000 km
7,791 km
Waterway Coverage
14,500 km
110,000 km
25,220 km
Coastline Coverage
7,000 km
14,500 km
1,046 km
Major Serviceable Airports
352
502
148
Square Land Area
3,287,263 km
9,596,961 km
796,095 km

இந்த புள்ளி விவரங்கள் மட்டும் இரு நாடுகளுக்கிடையேயான போரின் வெற்றியை தீர்மானிப்பதில்லை. ஆனால் ஒரு போரின் வெற்றியை கணிக்க எடுத்துக்கொள்ளப்படும் முக்கிய காரணிகளில் ஒன்றாக இந்த புள்ளிவிவரங்களை நாம் கருத முடியும்.

நன்றி: www.GlobalFirepower.com


More than a Blog Aggregator

வெள்ளி, 19 அக்டோபர், 2012

இஸ்லாமிய சட்டப்படி தாடி வளர்க்க அனுமதிக்க முடியாது-அமெரிக்க ராணுவ கோர்ட் கண்டிப்பு!


நிடல் ஹசன்

நவம்பர் 5, 2009 அன்று அமெரிக்காவின் டெக்சாசில் ராணுவ வீர்கள் குழு ஒன்று மருத்துவ தேர்வுக்கு தயாராகிகொண்டிருந்தது. ஈராக் செல்லும் வீரர்களை தேர்வு செய்வதற்காக  அந்த தகுதி தேர்வு நடைபெற்றுகொண்டிருந்தது. அப்போது அந்த ராணுவ குழுவில் இடம் பெற்றிருந்த மேஜர் நிடல் ஹசன் என்பவர் அந்த வீரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் இறந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.

இந்த குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால் ஹசனுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும். இந்த வழக்கு விசாரணை அமெரிக்க ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த நீதிமன்றம் வழக்கு விசாரணைக்காக ஹசன் ஆஜராகும்போது தாடி இல்லாமல்  வரவேண்டும் என ஆணையிட்டுள்ளது. தனது இஸ்லாமிய மத நம்பிக்கையின்படி தான் தாடி வளர்க்க அனுமதிக்கப்படவேண்டும் என்ற ஹசனது கோரிக்கையை ராணுவ நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

ராணுவ சட்டங்களின்படி தாடியுடன் ஒரு ராணுவ வீரர் விசாரணைக்கு ஆஜராக முடியாது. ராணுவ சட்டம் அதை அனுமதிக்கவில்லை. சட்டத்தை மீறி தாடியுடன் நீதிமன்ற விசாரணைக்கு  ஆஜரானால் அது ஹசன் மீது ஒரு தவறான அபிப்பிராயத்தை நீதிபதிகளிடம் ஏற்படுத்திவிடலாம். ராணுவ நீதிபதியே ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபர் விசாரணைக்கு என்ன உடை அணிந்து வரவேண்டும், எப்படி வரவேண்டும் என்பதை ராணுவ விதிகளின்படி தீர்மானிக்கக்கூடியவராக இருக்கிறார்.

தான் இஸ்லாம் மத நம்பிக்கையின்படியே தாடி வளர்ப்பதாகவும், அதனை நீக்க சொல்வது தமக்கு இழைக்கப்படும் மத அடிப்படையிலான அநீதி என்றும் ஹசன் குற்றம் சாட்டியுள்ளார். அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர்கள் ஹசன் 20 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருவதாகவும், அவர் ராணுவத்தில் பணியாற்றியபோது ராணுவ விதிகளுக்கு ஏற்ப தாடி வைக்கவில்லை என்றும், தினசரி முக சவரம் செய்பவராக இருந்தார் என்றும், இப்போது மதத்தை காரணம் காட்டி தாடி வளர்க்க அனுமதி கேட்பதை அனுமதிக்கமுடியாது என்றும் வாதாடினர்.

Religious Freedom Restoration Act, a 1993 சட்டம் ஒரு மதத்தை ஒருவர் சுதந்திரமாக பின்பற்ற அனுமதிக்கிறது என்றும், அச்சட்டம் ராணுவ சட்டத்துக்கும் மேலான அதிகாரம் படைத்தது  என்றும், எனவே தன் மத நம்பிக்கையான தாடி வளர்த்தலை ராணுவ நீதிமன்றம் அனுமதிக்கவேண்டும் என்றும் ஹசன வாதாடினார். ஆனால் அதனை ராணுவ நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. தாடியுடன் நீதி மன்றத்தில் ஆஜராவது நீதிமன்ற நன்னடத்தைக்கும், ஒழுக்கத்திற்கும் எதிரானது என்றும், வழக்கின் தன்மையை பாதிக்கக்கூடியது என்றும் கூறி ஆறு நீதிபதிகள் அடங்கிய ராணுவ நீதிமன்றம் 4-2  என்ற வாக்கு எண்ணிக்கையில் ஹசனின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
 
மேலும் ஹசன் ஆறு முறை  கீழ் கோர்ட்டில் தாடியுடன் ஆஜராகி இருந்தார். அதனை கோர்ட் அவமதிப்பு என்று கூறி நீதிபதி ஹசனுக்கு ஒவ்வொரு முறையும் $1,000 அபராதம் கீழ் கோர்ட் நீதிபதி விதித்திருந்தார். கீழ் கோர்ட் நீதிபதியின் அந்த உத்தரவை  ராணுவ நீதிமன்றம்  தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது. ஹசனின் வழக்கறிஞர்கள் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்  கோர்ட்டான Court of Appeals of the Armed Forces முன்பு அப்பீல் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்விஷயத்தில் ராணுவ விதிகளின் படி நடக்கும் ராணுவ நீதிமன்றத்தின் நடவடிக்கையை நாம் குறை கூற முடியாது. ஏனென்றால் அவ்விதிகளை மீறி நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது. வேண்டுமானால் அமெரிக்க ராணுவ சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதுவும் அமெரிக்காவில் நடக்க வாய்ப்பில்லை. இருபது வருடம் தாடி வளர்க்காத ஹசன் திடிரென தாடி வளர்க்க தொடங்கி இருப்பதன் காரணம் தெரியவில்லை. எப்போது தாடி வளர்க்க வேண்டும் என முடிவு செய்வது அவரின் உரிமையாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க ராணுவ சட்டங்களுக்கு சம்மதித்தே அவர் ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். எனவே இப்போது அவ்விதியிலிருந்து விலக்கு கேட்பது நியாயமாகாது. ஏனென்றால் இப்போதுவரை அவர் அமெரிக்க ராணுவ வீரராகத்தான் இருக்கிறார். மேலும் அவர் மத ரீதியாக வழக்கை திசை திருப்புவதற்காகவே தாடி வளர்க்கும் விஷயத்தை கையாள்கிறாரோ என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.
More than a Blog Aggregator

வியாழன், 18 அக்டோபர், 2012

மந்திரா பேடியின் விளம்பர படத்திற்கு தடை !-உங்களின் கருத்து என்ன?



மந்திரா பேடி மாடலாக இடம்பெற்ற  மார்பக புற்று நோய் விழிப்புணர்வு பற்றிய விளம்பர போர்டை அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் நிறுவ  தானே முனிசிபல் கார்ப்பரேஷன் (TMC)  தடை விதித்துள்ளது. அந்த விளம்பர போர்டில்  மார்பக புற்று நோயை தொடக்க நிலையிலேயே கண்டுபிடிப்பது தொடர்பான விழிப்புணர்வை, பெண்களிடம் உருவாக்கும் விதமாக வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. டாடா மெமோரியல் ஹாஸ்பிடல் அமைப்புடன் இணைந்த  Women’s Cancer Initiative (WCI) மந்திரா பேடியின் விளம்பர போர்டை வைக்க TMC ௦யிடம் அனுமதி கோரியது. ஆனால் TMC அந்த விளம்பர போர்டை அரசு நிலத்தில் வைக்க அனுமதி மறுத்துவிட்டது. TMC யின் இந்த முடிவுக்கு  பல பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த விளம்பர போர்டில் “choose breast cancer prevention”  மற்றும்  “Google cant find your breast cancer. You can.” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

அக்டோபர் மாதம் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நான்கு LED விளம்பர போர்டுகளை வைக்க TMC முடிவு செய்தது. ஆனால் அந்த விளம்பர போர்டுகள் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் வைக்க பொருத்தமானது அல்ல என்று கூறி தானே முனிசிபல் கார்ப்பரேஷன் (TMC) நிராகரித்துவிட்டது.

யாருடைய மனம் புண்பட்டிருந்தாலும் அதற்காக மன்னிப்பு கோரும் வேளையில்,  TMC யின் முடிவால் தான் மிகவும் கோபமடைந்துள்ளதாக மந்திரா பேடி தெரிவித்துள்ளார். அதிகாரிகள் விளம்பரத்தின் படத்தை மட்டுமே கவனித்துள்ளனர் என்றும் அந்த படம் சொல்ல வருகிற விஷயத்தை கவனிக்க மறந்துவிட்டார்கள் என்றும் பேடி குற்றம் சாட்டியுள்ளார். நான் ஒன்றும் உள்ளாடை விளம்பரத்திற்காக போஸ் கொடுக்கவில்லை என்றும், மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்தால் அதனை எளிதில் குணப்படுத்தலாம் என்ற விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்தினால் அது ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரை காப்பாற்றும் என்பதாலேயே அந்த விளம்பரத்தில் நடித்ததாகவும் பேடி கூறினார்.

சுற்று புற சூழல் துறை முதலில் அனுமதி மறுத்தவுடன் WCI அமைப்பினர் தானே முனிசிபல் கார்ப்பரேஷனை அணுகினர். ஆனாலும் TMC கமிஷனர் R A ராஜீவ் சுற்று புற சூழல் துறை எடுத்த முடிவை மாற்ற மறுத்துவிட்டார். நாங்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் இம்மாதிரியான விளம்பர போர்டுகளை அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் வைக்க அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் அந்த போர்டுகளை தனியார் இடங்களில் வைத்துக்கொள்ளலாம். ஒரு பெண் அதிகாரிதான்  அந்த விளம்பர போர்டுகளுக்கு அனுமதி மறுத்துள்ளார் என்றும், தான் அந்த பெண் அதிகாரியின் முடிவை மதிப்பதாகவும்  அவர் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில் தானே நகர மிடில் கிளாஸ் மக்கள் மும்பை நகர மக்களை போல் இல்லை என்றும், பொது மக்களுக்கு அசௌகரியமாக இருக்கும் எந்த செயலையும் நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இதுபற்றி WCI நிறுவனர் சமூக சேவையாளர் தேவிகா போஜ்வாணி கூறுகையில் இந்திய அரசாங்கம் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை கூறும் வகையில் முன்பு மார்பகங்கள் முழுவதும் தெரியும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டது. ஆனால் அதனை யாரும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை. இந்த விளம்பர படங்கள் மட்டும் ஏன் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகின்றன? என்று வினவினார். மேலும் அவர் தெரிவிக்கையில் மும்பை பெண்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வு பெற்றுள்ளார்களோ அந்த அளவு விழிப்புணர்வு பெற தானே மக்களுக்கும் உரிமை உண்டு என்று கூறினார்.

முன்பு தூர்தர்ஷனில் செக்ஸ் படம் என்று ஒரு படத்தை நள்ளிரவில் திரையிடுவார்கள். கொடியில் காயும் இரண்டு பிராக்களை க்ளோசப் ஷாட்டில் காட்டுவார்கள். அவ்வளவுதான். அவர்களை பொருத்தவரை அதுதான் செக்ஸ் படம். தானே அரசு அதிகாரிகளின் மனநிலையும் அந்த அளவில்தான் இருக்கிறது என்பது என் கருத்து. எனக்கென்னமோ படங்கள் ஒன்றும் வக்கிரமாக இருப்பதாக தெரியவில்லை!. இப்போது கீழ்க்கண்ட படங்களை பாருங்கள் . உங்களின் கருத்து என்ன?.



More than a Blog Aggregator

புதன், 17 அக்டோபர், 2012

முன்னாள் LTTE தலைவர் குமரன் பத்மநாதன் விடுதலை!-சில சந்தேகங்கள்.



KP  என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் விடுதலைபுலிகள்  இயக்கத்தின் கடைசி தலைவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் 58 வயது நபர். விடுதலைபுலிகளின் ஆயுத கொள்முதலில் முக்கிய பங்காற்றியவர் பத்மநாதன். விடுதலைப்  புலிகளின் தலைவரான பிரபாகரனின் மரணத்திற்கு பின் தன்னை தானே விடுதலைபுலிகளின் தலைவராக அறிவித்துக்கொண்டார். போருக்கு பின் சில மாதங்கள் கழித்து மலேசியாவில் அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

இலங்கை ராணுவ காவலில் இருந்து தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று நிருபர்களிடம்  பேசிய  இலங்கை பாதுகாப்பு துறை மீடியா சென்டரின் தலைவர் லக்ஷ்மன் ஹலுகல்ல (Lakshman Hulugalle) பத்மநாபன் இனி ராணுவ கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அவர் இனி தன்னுடைய NGO அமைப்பின் மூலம் மக்களுக்கான நலத் திட்ட பணிகளை சுதந்திரமாக செய்யலாம் என்றும் அறிவித்தார்.

லக்ஷ்மன் மேலும் தெரிவிக்கையில் பத்மநாதன் தற்போது அரசு சாரா அமைப்பு ஒன்றினை நடத்தி வருவதாகவும், அதன்மூலம் அவர் மக்கள் நலப்பணி திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும், அவர் தன நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் என்று  கூறினார்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி  திட்ட பணிகளை மேற்கொள்ள அவருக்கு முழு உரிமை உண்டு என தெரிவித்த லக்ஷ்மன் அவருடைய NGO அமைப்பு வருங்காலத்தில் அத்தகைய பணிகளில் ஈடுபடும் என்றும் தெரிவித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளியான பத்மநாதனுக்கு எதிராக இந்தியாவின் முயற்சியால் இன்டர்போல் ஏற்கனவே கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது இப்பொழுது பத்மநாதன் எந்தவிதமான காவலிலும் இல்லை என்று லக்ஷ்மன் தெரிவித்தார். மேலும் பத்மநாதன் மீது நீதிமன்றத்தில் எந்த வழக்குகளும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பத்மநாதன் விடுதலை செய்யப்பட்டது இந்தியாவிற்கு உடன்பாடான செயல்தானா?. இந்தியாவின் ஏற்புடன் அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்தியாவின் நிலை என்ன?.  இலங்கையின் இச்செயல் இந்தியாவுக்கு ஏற்பு இல்லை என்றால் பத்மநாதனை ஒப்படைக்கும்படி இந்தியா இலங்கையை வற்புறுத்துமா?. இன்டர்போல் மூலம் வெளியிடப்பட்ட கைது வாரன்ட்டின் நிலை என்ன?. இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்தால்  பல அரசியல் பேரங்களின் உண்மைகள் வெளிவரத்தொடங்கும். அதுவரை பொறுத்திருப்போம்.
More than a Blog Aggregator

செவ்வாய், 16 அக்டோபர், 2012

பாகிஸ்தான் சிறுமியை கொல்ல முடிவெடுத்தது ஏன்?-தலிபான் அறிக்கை.



பாகிஸ்தானை சேர்ந்த 14 வயது சிறுமி  மலாலா யூசுப்சாய் என்பவரை சுட்டு கொல்ல முயற்சி செய்த செயலை தலிபான் தீவிரவாதிகள் நியாயப்படுத்தி 
உள்ளனர். தலிபான் அமைப்பினை தாக்கி பேசியதாலும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை ஆதரித்து பேசியதாலும் அச்சிறுமியை கொலை செய்ய முடிவு செய்ததாக தலிபான் தெரிவித்துள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி குறித்த  முக்கியத்துவத்தையும், தலிபான்களின் கொடுமைகளையும் தொடர்ந்து தனது ப்ளாக்கில் யூசுப்சாய் எழுதிவந்தார். அக்டோபர் 12,2012 அன்று பள்ளிக்கு சென்று திரும்பும்போது தலிபான் தீவிரவாதியால் தலையிலும், கழுத்திலும் யூசுப்சாய் சுடப்பட்டார். பாகிஸ்தான் மருத்துவர்கள் அவரின் கழுத்தில் இருந்த புல்லட்டை நீக்கிவிட்டாலும், தொடர் சிகிச்சைக்காக அவர் தற்போது அவர் பிரிட்டன கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் அமைப்பு  யூசுப்சாயை மேற்கு நாடுகளின் உளவாளி என்று குற்றம்சாட்டியுள்ளது. தலிபான் அமைப்பு தனது அறிக்கையில் யூசுப்சாய் தனது செயலுக்கான பரிசினை பெற்றுள்ளார் என்றும், எதிரிகளுக்கு  உளவு வேலை செய்யும் எவரையும் கொல்ல இஸ்லாம் உத்தரவிடுகிறது என்றும் தெரிவித்துள்ளது. யூசுப்சாய் தொடர்ந்து தலிபான் அமைப்பின் மதிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், புனித போராளிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்ததாகவும், இஸ்லாமுக்கும், இஸ்லாமிய படைகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யும் எவரும் கொல்லப்படவேண்டும் என்று குர்ரான் கூறுவதாகவும் தெரிவித்தனர். தலிபான் அமைப்பிற்கு எதிராக பேசியதால் அவரை கொல்ல முயற்சி செய்யவில்லை என்றும், அந்நியயர்களுடன்  வெட்கமின்றி பழகியதாலும், ஒபாமாவை ஆதரித்து பேசியதாலுமே கொல்ல முடிவு செய்ததாக தலிபான் தெரிவித்துள்ளது. இஸ்லாமுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒரு குழந்தை கூட கொல்லப்படவேண்டும் என்று ஷரியத் சட்டம் கூறுவதாக தலிபான் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் முழுக்க ஆங்காங்கே போராட்டங்களும், மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.  ஆனாலும் அநேக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இத்தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான தாலிபானை வெளிப்படையாக விமர்சிக்க தயங்குகின்றனர். தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க பாகிஸ்தான் அரசு தயங்குவதே இதற்கு காரணம்.

இதுபோன்ற சம்பவங்களை மதத்தினால் நியாயப்படுத்தும் தலிபானின் முயற்சியை எவரும் ஆதரிக்கக்கூடாது என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. இதுபோன்ற செயலை கண்டுகொள்ளாமல் இருப்பது கூட தலிபானின் குற்ற செயலுக்கு துணை போவதற்கு சமம்தான். எனவே அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறோம் என்று  காரணம் கூறி தலிபானை நியாயப்படுத்தும் எவரும் அறியாமையினால் அல்ல , தெரிந்தே தவறு இழைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
More than a Blog Aggregator