வியாழன், 18 அக்டோபர், 2012

மந்திரா பேடியின் விளம்பர படத்திற்கு தடை !-உங்களின் கருத்து என்ன?



மந்திரா பேடி மாடலாக இடம்பெற்ற  மார்பக புற்று நோய் விழிப்புணர்வு பற்றிய விளம்பர போர்டை அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தில் நிறுவ  தானே முனிசிபல் கார்ப்பரேஷன் (TMC)  தடை விதித்துள்ளது. அந்த விளம்பர போர்டில்  மார்பக புற்று நோயை தொடக்க நிலையிலேயே கண்டுபிடிப்பது தொடர்பான விழிப்புணர்வை, பெண்களிடம் உருவாக்கும் விதமாக வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. டாடா மெமோரியல் ஹாஸ்பிடல் அமைப்புடன் இணைந்த  Women’s Cancer Initiative (WCI) மந்திரா பேடியின் விளம்பர போர்டை வைக்க TMC ௦யிடம் அனுமதி கோரியது. ஆனால் TMC அந்த விளம்பர போர்டை அரசு நிலத்தில் வைக்க அனுமதி மறுத்துவிட்டது. TMC யின் இந்த முடிவுக்கு  பல பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அந்த விளம்பர போர்டில் “choose breast cancer prevention”  மற்றும்  “Google cant find your breast cancer. You can.” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

அக்டோபர் மாதம் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நான்கு LED விளம்பர போர்டுகளை வைக்க TMC முடிவு செய்தது. ஆனால் அந்த விளம்பர போர்டுகள் அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் வைக்க பொருத்தமானது அல்ல என்று கூறி தானே முனிசிபல் கார்ப்பரேஷன் (TMC) நிராகரித்துவிட்டது.

யாருடைய மனம் புண்பட்டிருந்தாலும் அதற்காக மன்னிப்பு கோரும் வேளையில்,  TMC யின் முடிவால் தான் மிகவும் கோபமடைந்துள்ளதாக மந்திரா பேடி தெரிவித்துள்ளார். அதிகாரிகள் விளம்பரத்தின் படத்தை மட்டுமே கவனித்துள்ளனர் என்றும் அந்த படம் சொல்ல வருகிற விஷயத்தை கவனிக்க மறந்துவிட்டார்கள் என்றும் பேடி குற்றம் சாட்டியுள்ளார். நான் ஒன்றும் உள்ளாடை விளம்பரத்திற்காக போஸ் கொடுக்கவில்லை என்றும், மார்பக புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டுபிடித்தால் அதனை எளிதில் குணப்படுத்தலாம் என்ற விழிப்புணர்வை பெண்களிடம் ஏற்படுத்தினால் அது ஆயிரக்கணக்கான பெண்களின் உயிரை காப்பாற்றும் என்பதாலேயே அந்த விளம்பரத்தில் நடித்ததாகவும் பேடி கூறினார்.

சுற்று புற சூழல் துறை முதலில் அனுமதி மறுத்தவுடன் WCI அமைப்பினர் தானே முனிசிபல் கார்ப்பரேஷனை அணுகினர். ஆனாலும் TMC கமிஷனர் R A ராஜீவ் சுற்று புற சூழல் துறை எடுத்த முடிவை மாற்ற மறுத்துவிட்டார். நாங்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் இம்மாதிரியான விளம்பர போர்டுகளை அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் வைக்க அனுமதிக்க முடியாது. வேண்டுமானால் அந்த போர்டுகளை தனியார் இடங்களில் வைத்துக்கொள்ளலாம். ஒரு பெண் அதிகாரிதான்  அந்த விளம்பர போர்டுகளுக்கு அனுமதி மறுத்துள்ளார் என்றும், தான் அந்த பெண் அதிகாரியின் முடிவை மதிப்பதாகவும்  அவர் கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில் தானே நகர மிடில் கிளாஸ் மக்கள் மும்பை நகர மக்களை போல் இல்லை என்றும், பொது மக்களுக்கு அசௌகரியமாக இருக்கும் எந்த செயலையும் நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

இதுபற்றி WCI நிறுவனர் சமூக சேவையாளர் தேவிகா போஜ்வாணி கூறுகையில் இந்திய அரசாங்கம் தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை கூறும் வகையில் முன்பு மார்பகங்கள் முழுவதும் தெரியும் வகையில் விளம்பரங்களை வெளியிட்டது. ஆனால் அதனை யாரும் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை. இந்த விளம்பர படங்கள் மட்டும் ஏன் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகின்றன? என்று வினவினார். மேலும் அவர் தெரிவிக்கையில் மும்பை பெண்கள் எந்த அளவிற்கு விழிப்புணர்வு பெற்றுள்ளார்களோ அந்த அளவு விழிப்புணர்வு பெற தானே மக்களுக்கும் உரிமை உண்டு என்று கூறினார்.

முன்பு தூர்தர்ஷனில் செக்ஸ் படம் என்று ஒரு படத்தை நள்ளிரவில் திரையிடுவார்கள். கொடியில் காயும் இரண்டு பிராக்களை க்ளோசப் ஷாட்டில் காட்டுவார்கள். அவ்வளவுதான். அவர்களை பொருத்தவரை அதுதான் செக்ஸ் படம். தானே அரசு அதிகாரிகளின் மனநிலையும் அந்த அளவில்தான் இருக்கிறது என்பது என் கருத்து. எனக்கென்னமோ படங்கள் ஒன்றும் வக்கிரமாக இருப்பதாக தெரியவில்லை!. இப்போது கீழ்க்கண்ட படங்களை பாருங்கள் . உங்களின் கருத்து என்ன?.



More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 கருத்துகள்:

  1. Excellent Creativity!

    இது சொந்த சரக்காக இருந்தால் அமெரிக்காவில் இதை வாங்கிக் கொள்வார்கள்; non-profit எனபதால் பணம் தரமாட்டார்கள்; அனால், இதன் மூலம் இதை உருவாகியவ்ரகளுக்கு பணம் விளம்பரம் உலக அளவில் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. நம்ம சினிமாவை இவனுங்களை விட்டு பார்க்கச் சொல்லனும் தொப்ப்புலி ஆம்லேட் போட்டது, பம்பரம் விட்டது என்று, அப்புறம் இதை jujupi nnu விட்டு விடுவானுங்க

    பதிலளிநீக்கு