நிடல் ஹசன் |
நவம்பர் 5,
2009 அன்று அமெரிக்காவின் டெக்சாசில்
ராணுவ வீர்கள் குழு ஒன்று மருத்துவ தேர்வுக்கு தயாராகிகொண்டிருந்தது. ஈராக் செல்லும்
வீரர்களை தேர்வு செய்வதற்காக அந்த தகுதி
தேர்வு நடைபெற்றுகொண்டிருந்தது. அப்போது அந்த ராணுவ குழுவில் இடம் பெற்றிருந்த மேஜர்
நிடல் ஹசன் என்பவர் அந்த வீரர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததில் அமெரிக்க ராணுவ
வீரர்கள் 13 பேர் இறந்தனர். 32 பேர் காயமடைந்தனர்.
இந்த
குற்றசாட்டு நிரூபிக்கப்பட்டால் ஹசனுக்கு தூக்கு தண்டனை கிடைக்கும். இந்த வழக்கு
விசாரணை அமெரிக்க ராணுவ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த நீதிமன்றம்
வழக்கு விசாரணைக்காக ஹசன் ஆஜராகும்போது தாடி இல்லாமல் வரவேண்டும் என ஆணையிட்டுள்ளது. தனது இஸ்லாமிய
மத நம்பிக்கையின்படி தான் தாடி வளர்க்க அனுமதிக்கப்படவேண்டும் என்ற ஹசனது
கோரிக்கையை ராணுவ நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
ராணுவ
சட்டங்களின்படி தாடியுடன் ஒரு ராணுவ வீரர் விசாரணைக்கு ஆஜராக முடியாது. ராணுவ
சட்டம் அதை அனுமதிக்கவில்லை. சட்டத்தை மீறி தாடியுடன் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜரானால் அது ஹசன் மீது ஒரு தவறான
அபிப்பிராயத்தை நீதிபதிகளிடம் ஏற்படுத்திவிடலாம். ராணுவ நீதிபதியே ஒரு குற்றம் சாட்டப்பட்ட
நபர் விசாரணைக்கு என்ன உடை அணிந்து வரவேண்டும், எப்படி வரவேண்டும் என்பதை ராணுவ
விதிகளின்படி தீர்மானிக்கக்கூடியவராக இருக்கிறார்.
தான்
இஸ்லாம் மத நம்பிக்கையின்படியே தாடி வளர்ப்பதாகவும், அதனை நீக்க சொல்வது தமக்கு
இழைக்கப்படும் மத அடிப்படையிலான அநீதி என்றும் ஹசன் குற்றம் சாட்டியுள்ளார்.
அதற்கு பதில் அளித்த அரசு வழக்கறிஞர்கள் ஹசன் 20 ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தை பின்பற்றி வருவதாகவும், அவர்
ராணுவத்தில் பணியாற்றியபோது ராணுவ விதிகளுக்கு ஏற்ப தாடி வைக்கவில்லை என்றும், தினசரி
முக சவரம் செய்பவராக இருந்தார் என்றும், இப்போது மதத்தை காரணம் காட்டி தாடி
வளர்க்க அனுமதி கேட்பதை அனுமதிக்கமுடியாது என்றும் வாதாடினர்.
Religious Freedom Restoration Act, a 1993 சட்டம் ஒரு மதத்தை ஒருவர் சுதந்திரமாக
பின்பற்ற அனுமதிக்கிறது என்றும், அச்சட்டம் ராணுவ சட்டத்துக்கும் மேலான அதிகாரம்
படைத்தது என்றும், எனவே தன் மத
நம்பிக்கையான தாடி வளர்த்தலை ராணுவ நீதிமன்றம் அனுமதிக்கவேண்டும் என்றும் ஹசன
வாதாடினார். ஆனால் அதனை ராணுவ நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. தாடியுடன்
நீதி மன்றத்தில் ஆஜராவது நீதிமன்ற நன்னடத்தைக்கும், ஒழுக்கத்திற்கும் எதிரானது
என்றும், வழக்கின் தன்மையை பாதிக்கக்கூடியது என்றும் கூறி ஆறு நீதிபதிகள் அடங்கிய
ராணுவ நீதிமன்றம் 4-2 என்ற வாக்கு எண்ணிக்கையில் ஹசனின் கோரிக்கையை
நிராகரித்துவிட்டது.
மேலும் ஹசன்
ஆறு முறை கீழ் கோர்ட்டில் தாடியுடன்
ஆஜராகி இருந்தார். அதனை கோர்ட் அவமதிப்பு என்று கூறி நீதிபதி ஹசனுக்கு ஒவ்வொரு
முறையும் $1,000 அபராதம் கீழ்
கோர்ட் நீதிபதி விதித்திருந்தார். கீழ் கோர்ட் நீதிபதியின் அந்த உத்தரவை ராணுவ நீதிமன்றம் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளது. ஹசனின்
வழக்கறிஞர்கள் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்
கோர்ட்டான Court of Appeals of the Armed Forces முன்பு அப்பீல் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தற்போதைய
செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்விஷயத்தில்
ராணுவ விதிகளின் படி நடக்கும் ராணுவ நீதிமன்றத்தின் நடவடிக்கையை நாம் குறை கூற
முடியாது. ஏனென்றால் அவ்விதிகளை மீறி நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது.
வேண்டுமானால் அமெரிக்க ராணுவ சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதுவும் அமெரிக்காவில்
நடக்க வாய்ப்பில்லை. இருபது வருடம் தாடி வளர்க்காத ஹசன் திடிரென தாடி வளர்க்க
தொடங்கி இருப்பதன் காரணம் தெரியவில்லை. எப்போது தாடி வளர்க்க வேண்டும் என முடிவு
செய்வது அவரின் உரிமையாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க ராணுவ சட்டங்களுக்கு
சம்மதித்தே அவர் ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். எனவே இப்போது
அவ்விதியிலிருந்து விலக்கு கேட்பது நியாயமாகாது. ஏனென்றால் இப்போதுவரை அவர் அமெரிக்க ராணுவ வீரராகத்தான் இருக்கிறார். மேலும் அவர் மத ரீதியாக வழக்கை
திசை திருப்புவதற்காகவே தாடி வளர்க்கும் விஷயத்தை கையாள்கிறாரோ என்ற சந்தேகம்
வலுப்பெறுகிறது.
Tweet | |||||
ராணுவ நீதிமன்றத்தின் சரியான முடிவு. நிடல் ஹசன் போன்ற மத வாதிங்களுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும் இராணுவமே இஸ்லாமிய சட்டப்படி தான் நடக்கணும் என்பார்கள்.
பதிலளிநீக்குதொடர்ந்து நீங்கள் அளித்து வரும் கருத்துரைகளுக்கு நன்றி!
பதிலளிநீக்குஇரண்டு மைனஸ் ஓட்டுகள்.
பதிலளிநீக்குஇதன் மூலம் சாத்தியும் சமாதானமும் நிரம்பியவங்க ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைச்சிருக்கு. நல்லவரான நீங்க முன்னேறிவிடுவிங்க. வாழ்த்துக்கள்.