சனி, 13 ஜூலை, 2013

தாலிபான்களின் முகத்தில் கரியை பூசிய மலாலா!




மலாலா யூசப்சாய்  இன்று நியூயார்க்கில் ஐ. நா சபையில் பேசியதில் குறிப்பாக ஒரு வாக்கியம் என்னை மிகவும் கவர்ந்தது. தலிபான்கள் அவர் மீது நடத்திய கொலைவெறி தாக்குதல் குறித்து பேசும் போது அவர் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார். 

தாலிபான் பயங்கரவாதிகள் சுட்ட குண்டுகள் என்னை மௌனமாக்கிவிட்டன என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தோற்றுவிட்டனர். என்னுடைய பலவீனம், பயம், நம்பிக்கையின்மை மட்டுமே இறந்தது.

தலிபான்களின் தாக்குதலுக்கு இதைவிட மிகப்பெரிய எதிர்தாக்குதலை வேறு யாரும் நடத்திவிட முடியாது. அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல்கள் தலிபான்களுக்கு ஏற்படுத்திய அழிவை விட, இச்சிறு பெண் தன் சொற்பொழிவினால் தலிபான்களுக்கு தார்மீக ரீதியில் மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளார். தலிபான்களை இதைவிட யாரும் அவமானப்படுத்த முடியாது.

இன்று மலாலாவின் பதினாறாவது பிறந்த நாள். இந்த நாளை  MALALA DAY”  என ஐ. நா அறிவித்துள்ளது. இதைப்பற்றி மலாலா பேசும்போது இது என்னுடைய நாள் அல்ல. இது தங்களின் உரிமைக்காக குரல் எழுப்பும் ஒவ்வொரு சிறுவன், சிறுமி, பெண்ணின் நாள் ஆகும் என்றார். தலிபான்கள் எவ்வளவு பெரிய கோழைகள் என்பதை மலாலாவின் மன உறுதி உலகிற்கு காட்டியுள்ளது. தலிபான்களை அழிக்க ஆயுதங்கள் தேவையில்லை. மலாலா போன்ற மன உறுதி மிக்க பெண்களே போதும்.
  
பாகிஸ்தானில் மட்டும் ஐம்பது லட்சம் சிறுவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.  இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண் குழந்தைகள் எனபது குறிப்பிடத்தக்கது. மலாலாவை கொலை செய்து மற்ற பெண்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்த நினைத்த தலிபான்கள் ஒரு விஷயத்தை மறந்துவிட்டார்கள். அது உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்தது சுதந்திரம் என்பதைத்தான். அது ஆயுதத்தின் முன் சமரசம் ஆனதாக என்றுமே வரலாறு இல்லை.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 கருத்துகள்:

  1. குடும்பத்துடன் மொத்தமாக இந்த காணொளியை பார்த்தோம். உங்கள் பதிவு கண்டதில் மிக்க மகிழ்ச்சி. சிறப்பான மொழியாக்கம்.

    பதிலளிநீக்கு
  2. சிறிது இடைவெளிக்குப் பின் எழுதிய முதல் பதிவு. முதல் கருத்துரையாக தங்கள் கருத்தினை கண்டதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி!

    பதிலளிநீக்கு
  3. நல்லா கேட்டுகொள்ளவும் தாலிபானுக்கு வாய் மற்றும் ********* இருக்கும் தமிழக / இந்திய முஸ்லிம் களில் ஒரு சிலருக்கு இது புரியுமா ?

    பதிலளிநீக்கு
  4. வன்முறைகள் என்றும் தீர்வைத் தருவதில்லை. மலாலாவின் மன உறுதி வியக்க வைக்கிறது. ஒரு சிறு நெருப்பு முழுக் காட்டையே கொளுத்திவிடுவதைப் போல இந்த ஒரு பேச்சு தாலிபான்களின் கோட்டைக்கு வைக்கப்பட்ட முதல் வெடிகுண்டு. தொடர்ந்து கலக்குங்க சார்!

    பதிலளிநீக்கு