செவ்வாய், 30 அக்டோபர், 2012

உங்கள் குழந்தைகளுக்கு தயவுசெய்து உடனடி நூடுல்ஸ் கொடுக்காதீர்கள்!



இன்று நம்முடைய வீடுகளின் உணவுப் பட்டியலில் உடனடி நூடுல்ஸ் ஒரு முக்கிய இடத்தை பிடித்துவிட்டது. முதலில் குழந்தைகளின் பிரியமான உணவாக இருந்த நூடுல்ஸ் இன்று அனைவருக்கும் பிடித்தமான உணவாகிவிட்டது. சமைப்பது எளிது. நேரம் மிச்சம், வேலை குறைவு, பிடித்த சுவை என்று சகல சௌகரியங்களும் உள்ளதால் இன்று நூடுல்ஸ் தமிழர்கள் உணவில் முக்கிய இடத்தை பிடித்த்விட்டது. இன்று பள்ளிக்குழந்தைகளின் மதிய உணவு டிபன் பாக்ஸில் கூட நூடுல்ஸ்தான் முதலிடம் பிடிக்கிறது. ஆனால் நூடுல்ஸின் கெடுதல் பற்றி தெரியாமல் பெற்றோர்களே குழந்தைகளுக்கு ஆசையாய் சமைத்து தருவது மிகவும்  கவலைக்குரிய விஷயமாகும். எனவேதான் இந்த பதிவினை குழந்தைகளின் நலன் கருதி இங்கு வெளியிடுகிறேன்.

அகமதாபாத்தை சார்ந்த Consumer Education and Research Society (CERC) என்ற அமைப்பு 15 நிறுவனங்களின் நூடுல்ஸ் தயாரிப்புகளை தனது ஆய்வகத்தில் ஆய்வு செய்தது. நூடுல்ஸில் உள்ளதாக கூறப்படும்  சத்துக்களான கொழுப்பு, பைபர், சோடியம், கால்சியம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் அளவு குறித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் நூடுல்ஸில் அதிக அளவில் சோடியமும் குறைந்த அளவு பைபரும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

CERC அமைப்பின் பொது மேலாளர்  ப்ரிதி ஷா தெரிவிக்கையில் நூடுல்ஸ் எனபது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான  சத்து உணவு என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் எங்களுடைய ஆய்வு முடிவுகள் அந்த நிறுவனங்கள் கூறுவதை பொய் என நிரூபித்துள்ளன என்றார். மேலும் அவர் நூடுல்ஸில்  உள்ள அதிகப்படியான சோடியம், கொழுப்பு மற்றும் கார்போ ஹைட்ரேட்  உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக்கூடிய இதய நோய்களுக்கும், இரத்த அழுத்த நோய்களுக்கும் காரணமாக அமைகிறது என்று தெரிவித்தார்.

Maggi, Top Ramen, Knorr, Ching's Secret, Sunfeast Yippee!, Foodles, Tasty Treat and Wai Wai X-press ஆகிய பிராண்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
அனைத்து பிராண்டுகளிலும்  அதிக அளவு சோடியமும், குறைந்த அளவு பைபரும் இருப்பதை ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. மேற்கண்ட ஆய்வு முடிவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி விளக்கம் கேட்டபோது அவைகள் இதுவரை பதில் அளிக்கவில்லை என்று ஷா தெரிவித்தார்.

ஆய்வின்படி 100 கிராம் நூடுல்ஸில் 821 மில்லிகிராம் சோடியம் காணப்பட்டது.. இது பிரிட்டிஷ் உணவு பாதுகாப்பு ஏஜென்சி (UK FSA) நிர்ணயித்துள்ள அளவை விட மிகவும் கூடுதலாகும். Maggi Meri Masala பிராண்டில் 100 கிராம் நூடுல்ஸில் 821 மில்லிகிராம் சோடியம் காணப்பட்டது. அதே வேளையில், Knorr Soupy பிராண்டில் அதிகபட்சமாக 100 கிராம் நூடுல்ஸில் 1,943  மில்லிகிராம் சோடியம் காணப்பட்டது.

Top Ramen நூடுல்ஸில் 6.8 சதவீதம் ஓட்ஸ் மாவு உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் ஆய்வின் முடிவில் அதை விட குறைவான அளவே ஓட்ஸ் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல் பைபர் சத்து 5.6  கிராம்  கொண்ட முழு பைபர் சத்தை உடைய நூடுல்ஸ் என Top Ramen பிராண்டு விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் 100 கிராம் உணவில் 6 கிராம் பைபர் சத்து இருந்தால் மட்டுமே அந்த உணவு முழு பைபர் சத்து உடைய உணவு என UK FSA  வரையறுத்துள்ளது.

Maggi New Vegetable Atta Noodles பிராண்டு நூடுல்ஸில் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ள சத்து அளவுக்கும் குறைவாகவே காய்கறிகள் சேர்க்கப்பட்டிருந்தன.

Wai Wai X-press Instant Noodles Masala Delight பிராண்டு தனது நூடுல்ஸில் அதிக அளவு அதாவது 7 mg இரும்பு சத்து உள்ளதாக விளம்பரம் செய்கிறது. ஆனால் ஆய்வின்படி வெறும் 2.6 mg இரும்பு சத்து மட்டுமே உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உணவு தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, UK FSA ன் குறைந்தபட்ச நிபந்தனைகளை உணவு நிறுவனங்கள் பின்பற்றுவதை உறுதி செய்யவேண்டும் என தன் அறிக்கையில் CERC தெரிவித்துள்ளது. மேலும் உணவுப்பொருளில் சேர்ந்துள்ள பொருட்கள் மற்றும் சத்துக்களின் விவரங்களை நுகர்வோர் எளிதில் கவனிக்கும் வண்ணம் தெளிவாக பேக்கிங் கவரில் உடனடி உணவு தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றனவா என்று உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கண்டிப்புடன் கவனிக்கவேண்டும் என்று மேலும் CERC தெரிவித்துள்ளது.

CERC –ன் மேற்கண்ட ஆய்வு முடிவுகள் நுகர்வோர் பத்திரிக்கையான இன்சைட்(Insight) ல் வெளியிடப்பட்டுள்ளது.


பைபிளில் ஒரு வசனம் உண்டு. 
உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக்  கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா?” (லூக்கா 11:11 ). 
ஆனால் இன்று நாம் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறோம். ஆரோக்கியமான  எதிர்கால சந்ததியை உருவாக்கவேண்டிய பொறுப்பில் உள்ள நாம் அதற்கு நேர் எதிரான செயலை செய்துகொண்டிருக்கிறோம். இந்த நிலை மாறினால் மட்டுமே நாம் வளமான, ஆரோக்கியமான எதிர்கால சந்ததியை உருவாக்கமுடியும் என்பது நிச்சயம்.

More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 கருத்துகள்:

  1. குழந்தைகளின் உணவா? நாங்களே இதை விரும்பி சாப்பிட்டிருக்கோம். நல்லவங்க தீமையை சொல்லி எச்சரித்ததால் விட்டாச்சு.
    மிகவும் பயனுள்ள தகவல்

    பதிலளிநீக்கு
  2. \\CERC அமைப்பின் பொது மேலாளர் ப்ரிதி ஷா தெரிவிக்கையில் நூடுல்ஸ் எனபது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சத்து உணவு என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் எங்களுடைய ஆய்வு முடிவுகள் அந்த நிறுவனங்கள் கூறுவதை பொய் என நிரூபித்துள்ளன என்றார்.//

    பிறகு ஏன் இவர்கள் இந்த விஷத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல தயங்குகிறார்கள்? இவர்களை போன்றவர்கள் ஆதாரங்களை கொடுத்து மக்களுக்கு எதாவது செய்யல்லமே? எது இவர்களை தடுக்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர்களை குற்றம் சொல்வதா? அல்லது அரசு அமைப்புகளை குற்றம் சொல்வதா?. நம்மை நாமே பாதுகாத்துகக்கொள்ள வேண்டியதுதான்.

      நீக்கு