ஊழலுக்கு
எதிராகப் போராடுவது என்பது இன்றைக்கு ஒரு பேஷனாகிவிட்டது போலும். இந்த காமெடி
ஆட்டத்தை முதலில் அன்னா ஹசாரே ஆரம்பித்து
வைத்தார். ஊழலைக் கண்டு மனம் வெறுத்துப் போயிருந்த இந்திய குடிமக்களின் பேராதரவு
அவருக்கு கிடைத்தது. ஹசாரே இந்தியாவின்
திடீர் ஹீரோவானார். அவருக்கு கிடைத்த மக்களின் ஆதரவு, மீடியாக்களில் முக்கியத்துவம், திடீர் புகழ் ஹசாரேவின்
இயக்கத்தில் இருந்த மற்றவர்களுக்கும் ஆசையை தூண்டியது. கெஜ்ரிவால் தனது புகழை
வளர்க்க ஹசாரேவை பகடைக் காயாக பயன்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. கிரண்
பேடி மற்றொரு பக்கத்தில் தன் தனி
ஆவர்த்தனத்தை நடத்தினார். அதன் பிறகு நடந்த ஹசாரேவின் உண்ணாவிரதங்கள் படுதோல்வியை
சந்தித்தன. முதல் உண்ணாவிரதத்தின்போது ஹசாரே என்னும் மாயபிம்பத்தை தூக்கி பிடித்த
மீடியாக்கள் அதன்பிறகு அவரை கைவிட்டன. தன்னுடைய உண்ணாவிரத தோல்விக்கு மீடியாவே என்று ஹசாரே குற்றம்சாட்டினார்.
அதோடு ஹசாரேயின் கூடாரமும் காலியானது. அதற்கு மேல் ஹசாரேயின் பருப்பு வேகாது என்பது அவரது
கூட்டாளிகளுக்கு புரிந்துவிட்டது. கேஜ்ரிவால் தனியாக அரசியல் கட்சியை தொடங்கினார்.
இப்போது மீடியாக்கள் கேஜ்ரிவாலை தூக்கிப்பிடிக்கின்றன. கேஜ்ரிவால் இந்தியாவின்
புதிய ஹீரோவானார். ஹசாரேவின் மார்கெட் இறங்குமுகமாகிவிட்டது.
இப்போது
அண்ணா ஹசாரே சில முத்துக்களை உதிர்த்துள்ளார். ஒரு நிருபர் அவரிடம் கேஜ்ரிவால்
பதவி ஆசை பிடித்தவரா? என்று கேட்டதற்கு இருக்கலாம் என பதில் அளித்துள்ளார். கெஜ்ரிவால்
சமூக சிந்தனையும், தேசப்பற்றும் , தியாக மனப்பான்மையும் உள்ளவர். அவருக்கு
அரசியலின் மூலம் பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம கிடையாது. ஆனால் அவரது
அரசியல் நடவடிக்கைக்குப் பின் பதவி ஆசை இருக்கலாம் என்று ஹசாரே மேலும்
தெரிவித்தார்.
நமக்கு
ஏற்படும் சந்தேகம் எல்லாம் ஒன்றுதான். தனக்கு என்றால் இரத்தம். அடுத்தவருக்கு
என்றால் தக்காளி சட்னியா?. இதே குற்றச்சாட்டை ஏன் ஹசாரே மேல் சுமத்தக்கூடாது. மீடியாக்களில்
தன்னுடைய முக்கியத்துவம் குறைந்ததை எண்ணி ஏற்கனவே வருந்திக்கொண்டிருந்த ஹசாரேக்கு,
கெஜ்ரிவாலின் புகழ் ஓங்குவதைக் கண்டு
பொறுக்கமுடியவில்லை. இப்போது தனது
கோபத்தை, பொறாமையை மெதுவாக விஷமாக கெஜ்ரிவாலின் மீது காட்டத்தொடங்கியிருக்கிறார். மேற்கண்ட குற்றச்சாட்டில் ஹசாரேவின் குறுகிய மனப்பான்மைதான் தெரிகிறது.
ஹசாரே அதே
பேட்டியில் கேஜ்ரிவால் சுய கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ளவேண்டும் என்றும், ஒருவர்
அனைத்து அரசியல்வாதிகளையும் மொத்தமாக தாக்க கூடாது என்றும், அவ்வாறு தாக்கினால்
அரசியல்வாதிகள் மொத்தமாக இணைந்து எதிர்
தாக்குதல் நடத்துவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதிலிருந்து ஹசாரேவின்
உண்மையான கோர முகம் தெரிய ஆரம்பிக்கிறது. அவர் ஊழல் போராட்டத்தை செலக்டிவ்வாக
நடத்த சொல்கிறார். அதாவது குறிப்பிட்ட அரசியல்வாதிகளின் ஊழலை மட்டும்
எதிர்க்க சொல்கிறார். அப்போதுதான் ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு கூட்டம்
கூடும் எனபது அவரது நம்பிக்கை. (உதாரணமாக காங்கிரசிற்கு எதிரான போராட்டத்தில் பிஜேபியின் தொண்டர் கூட்டம்)
ஊழலுக்கு
எதிராக போராடும் இவர் ஏன் அரசியல்வாதிகளின் கூட்டு எதிர்ப்புக்கு பயப்படவேண்டும்?.
காரணம் ஹசாரேயின் நோக்கம் ஊழலை எதிர்ப்பது அல்ல. கூட்டத்தை கூட்டுவதுதான் அவரது
நோக்கம். தன்னுடன் இருப்பவர்களை பலிகொடுத்தாவது தன்னுடைய புகழை நிலைநிறுத்திக்கொள்வது,
அதே சமயத்தில் தன்னுடன் இருப்பவர் யாரும் தன்னை விட புகழ் அடைந்துவிடக்கூடாது
என்பதிலும் மிகக்கவனமாக இருக்கிறார் ஹசாரே.
ஊழல்
ஒழிப்பு என்பது ஒரு அமைப்பினால்
சாதிக்கக்கூடிய காரியம் இல்லை. மேலும் அது சட்டத்தின் மூலமும், தண்டனைகள் மூலமும்
அடையக்கூடியதும் இல்லை. ஆனாலும் கேஜ்ரிவால் போன்ற தனி நபர்கள் அரசாங்கத்தில்
நடக்கும் ஊழலை வெளிப்படுத்துவதால் மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த
முடிகிறது என்பது உண்மை. அந்த வகையில் கெஜ்ரிவால், ஹசாரே போன்றவர்களை நாம்
வரவேற்கலாம் . மற்றபடி கெஜ்ரிவால், ஹசாரே போன்றவர்களின்
உண்மையான நோக்கம் பதவி ஆசை, புகழ் அடைவதுதான் எனபது ஹசாரே சொல்லி நமக்கு
தெரியவேண்டியதில்லை. அவ்வாறு ஹசாரே சொல்வது தன் மீது தானே அசிங்கத்தை வாரிக்கொட்டுவது
போலத்தான்.
Tweet |
|
||||
உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,
பதிலளிநீக்குhttp://otti.makkalsanthai.com/upcoming.php
பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,
நண்பரே,
பதிலளிநீக்குதங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
http://www.tamilkalanchiyam.com
- தமிழ் களஞ்சியம்