சனி, 27 அக்டோபர், 2012

'வாழைப்பழ நாட்டின் மாம்பழ குடிமக்கள்'- அர்த்தம் தெரியுமா?!சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வதேரா தன் மீது ஊழல் குற்றசாட்டு சுமத்தப்பட்டவுடன் கோபத்தில் ஒரு சொற்றொடரை உதிர்த்தார்.  Mango People in a Banana Republic”  என்பதுதான் அந்த வார்த்தை ஆகும். இதற்கு முன்பு கூட சசி தரூர் ஒருமுறை நம் நாட்டை Banana Republic என விமர்சித்து பலரின் எதிர்ப்பை பெற்றார். முதலில் அந்த வார்த்தையின் உண்மையான அர்த்தம் எனக்கு புரியவில்லை. நான் ஒன்றும் ஆங்கிலத்தில் பெரும் புலமை பெற்றவனும் இல்லை. ஆனாலும் வதேரா மறுபடியும் அந்த வார்த்தையை கூறியதும் அச்சொற்றொடரின்  அர்த்தத்தை தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமானது.

இணையத்தில் பொருள் தேடியபோது பலவாறு அர்த்தங்கள் கிடைத்தபோதும், அது வதேரா அவ்வாறு கூறியதன்  இடம், பொருள், ஏவலுக்கு சரிவர பொருந்தவில்லை. ஆகவே பல அகராதிகளில் கூறப்பட்டுள்ள அர்த்தங்களை ஒருங்கிணைத்து. நம் அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு ஒரு அர்த்தத்தை நாம் உருவாக்கலாம்.

‘Mango People’ என்ற சொல்லுக்கு பொது ஜனம் என்று பொருள் கொள்ளலாம். இவ்விடத்தில் நாம் அதற்கு இந்திய நாட்டின் குடிமக்கள் என பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

Banana Republic என்ற சொல்லுக்கு  அரசியல் நிலைத்தன்மை இல்லாத நாடு என்று பொருள் கொள்ளலாம். பொதுவாக மிகப் பெரும் கோடீஸ்வரனாகிய,  ஊழல் அரசியல்வாதிகளால்  ஆளப்படும், ஏழை மக்கள் நிறைந்த சிறிய நாடுகளை குறிக்க இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

இப்போது Mango People in a Banana Republic என்ற வார்த்தைக்கு இவ்வாறு அர்த்தம் கொள்ளலாம். வறுமை நிறைந்த மக்களை மிகப்பெரும் பணக்கார மற்றும் ஊழல் அரசியல்வாதிகள் ஆளும், அரசியல் நிலைப்புத்தன்மை இல்லாத நாடு இந்தியா எனபதுதான் நமக்கு கிடைக்கும் அர்த்தம் ஆகும்.


இந்தியா ஒரு வாழைப்பழ நாடு என்பதனை நீங்கள்  ஏற்றுக்கொள்ளாமல் இருக்கலாம். ஆனாலும் இக்கருத்தை வதேரா கூறுவதால் அதனை மறுக்கும் முன் நாம் சற்று யோசிக்க வேண்டும். ஏனென்றால் நம் நாட்டை சுமார் ஐம்பது ஆண்டுகளாக  ஆண்டு வரும் ஒரு கட்சியின் தலைவரின் மருமகன் கூறுவதால் அதில் உண்மை இருக்கக்கூடும்.

நம் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ்தான் இருக்கிறார்கள். இந்த நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் மிகப்பெரும் பணக்காரர்களாக இருக்கிறார்கள். மேலும் ஊழல் செய்வதில் உலக அளவில் முன்னணி வகிக்கிறார்கள். எனவே வதேரா கூறிய கருத்து சரியானதுதான் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இந்தியாவை ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சியின் சாதனை இதுதான். இப்போது இந்தியாவை ஆண்டு வருவதும் காங்கிரஸ் கட்சிதான். தன் குடும்ப கட்சி இந்தியாவை ஆட்சி செய்யும் சமயத்தில் வதேரா இந்த கருத்தை ஏன் கூற வேண்டும். அவர் அர்த்தம் தெரிந்துதான் இந்த வாக்கியத்தை கூறினாரா?. அல்லது தன்னை அறியாமல் உண்மையை கூறிவிட்டாரா?.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 கருத்துகள்:

  1. Mango people endraal maanagaal endra meaning il solgiraarO ena ninaiththuvitten.
    Thankyou for explanation

    பதிலளிநீக்கு
  2. "மாங்கா மைடைய‌ர்க‌ள்" என்ற‌ அர்த்த‌த்தில் தான், வ‌த்ரா தன் மீது குற்ற‌ம் சாட்டிய‌வ‌ர்க‌ளை விம‌ர்சிக்கிறார். "அந்நிய‌ நாட்ட‌வ‌ரை" அதிகார‌ம் செய்ய‌ அனும‌தித்திருக்கும் ந‌ம் நாடு "வாழைப்ப‌ழ‌க் குடிய‌ர‌சை" விட‌ மிக‌க் கேவ‌லமான‌ அல்ல‌து அடிமைத‌ன‌மான தேச‌ம் எனச் சொல்லும் அளவில் தான் இருக்கிற‌து என்ப‌தை நாம் தான் ஒத்துக் கொள்ள‌ ம‌றுக்கிறோம். அவ‌ரின் DLF தொட‌ர்பு காம‌ன்வெல்த் புக‌ழ் க‌ல்மாடியையும், UNITEL ப‌ங்கு 2ஜி கொள்ளைய‌ர்க‌ளையும் காக்கும் என்ப‌த‌ற்கு சான்று, இவ‌ர்க‌ளின் பார்லிமமெண்டின் நிலைக் குழுவில் கிடைத்த‌ புதிய‌ ப‌த‌விக‌ள்.

    பதிலளிநீக்கு