திங்கள், 1 ஏப்ரல், 2013

மாணவிகளை ஜிகாதிகளாக மாற்றும் முஸ்லிம் அமைப்பு! -மும்பை போலீஸ் ரகசிய அறிக்கை!



மும்பையில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும்  மும்பை காவல்துறையால் அனுப்பப்பட்ட ஒரு ரகசிய சுற்றறிக்கை உள்ளூர் மீடியாக்களில் வெளியானது மும்பை காவல்துறைக்கு மிகபெரும் தலைவலியை அளித்துள்ளது. அக்குறிப்பாணையில், கல்வி நிலையங்களை நடத்தி வரும் முஸ்லிம் அமைப்பு ஒன்று மாணவிகளை ஜிகாதிகளாக மாற்ற முயற்சி செய்து வருகிறது என்ற அதிர்ச்சிகர தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து காவல் அதிகாரிகளும் Girls Islamic Organisation of India என்ற அந்த அமைப்பினை தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து வரும்படியும் அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
Girls Islamic Organisation of India என்ற அமைப்பின் வெளிப்படையான நோக்கம் முஸ்லிம் பெண்களுக்கு இஸ்லாம் மதத்தை பற்றியும், புனித குர் ஆன் பற்றியும் போதிப்பதாக இருந்தாலும், உண்மையான நோக்கம் அப்பெண்களுக்கு ஜிஹாத் பற்றியும், அதற்கான பயிற்சிகளை அளிப்பதுமாக இருந்து வருகிறது என்று மேலும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Girls Islamic Organisation of India அமைப்பின் தாய் அமைப்பு ஜமாத்-இ இஸ்லாமி ஹிந்த் என்ற அமைப்பாகும். இந்த அமைப்பு முஸ்லிம் பெண்களுக்கு கல்வியையும், அவர்களுக்கு சமூக சேவைகளையும் வழங்கி வருகிறது. மும்பை காவல்துறை வெளியிட்ட இந்த சுற்றறிக்கை இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் நற்பெயரை கெடுக்க நடைபெறும் திட்டமிட்ட சதி என ஜமாத் கருத்து தெரிவித்துள்ளது. இதற்காக மும்பை காவல்துறை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த மும்பை காவல்துறை மேற்கண்ட சுற்றறிக்கை பொதுவானது அல்ல என்றும், அது காவல்துறையின் தனிப்பட்ட ரகசிய நடவடிக்கைக்காக துறை சார்ந்த ஒரு சுற்றறிக்கை என்றும், உளவு அமைப்புகளின் அறிக்கையின் படியே அச்சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
இதேபோன்று ஜனவரி மாதத்தில் மும்பை காவல்துறை அனுப்பிய இன்னொரு ரகசிய சுற்றறிக்கையும் ஊடங்கங்களில் வெளியாகி பலரது எதிர்ப்பை சம்பாதித்தது. பூங்காக்களிலும்,  பீச்சிலும் காதல் செய்யும் ஜோடிகளை பிடித்து தண்டிக்கவேண்டும் என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும் மும்பை காவல்துறை அந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தியிருந்தது. மேற்கண்ட பகுதிகள் ஒதுக்குப்புறமாக இருப்பதால் கிரிமினல்கள் கொள்ளை அடிப்பதற்கும், பெண்களை பாலியல் கொடுமை செய்வதற்கும் வசதியாக உள்ளது என்றும் அதனாலேயே அந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டது என்றும் பின்னர் மும்பை காவல்துறை விளக்கம் கூறியது.
காவல் துறையில் இதுபோன்ற அதிகாரப்பூர்வமில்லாத, அலுவல் சாரா ரகசிய குறிப்புகள் சுற்றறிக்கையாக அனுப்பப்படுவது வழக்கமான ஒன்றுதான்.  அந்த ரகசிய குறிப்பில் ஒருவர் கண்காணிக்கப்படவேண்டும் என்று கூறப்படுவதாலேயே அவர் குற்றவாளி என்ற அர்த்தம் கிடையாது. பல்வேறு உளவு அமைப்புகளின் ரகசிய அறிக்கைகளின்படி அந்தந்த மாநில காவல் துறையில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளே இவைகள். ஆனால் இதுபோன்ற சுற்றறிக்கைகள் “CONFIDENTIAL” என்று குறிப்பிடப்பட்டே அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இந்த சுற்றறிக்கைகள் ஊடங்கங்களில் எளிதாக கசிகிறது என்றால் அதற்கு காரணமானவர்களை காவல்துறை உடனடியாக அடையாளம் காணவேண்டும். ஏனென்றால் இது போன்ற செயல்களை செய்பவர்களின் நோக்கம் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதாக கூட இருக்கலாம். அல்லது காவல்துறைக்கு சங்கடங்களை விளைவித்து அவர்களின் நடவடிக்கைகளை முடக்குவதாக கூட இருக்கலாம். தண்டிக்கப்படவேன்டியது ரகசிய தகவல்களை வெளியிட்ட அந்த கருப்பு ஆடுதான். சட்டத்திற்கு உட்பட்டு யார் மீதும் சந்தேகப்படவும், நடவடிக்கை எடுக்கவும் காவல் துறைக்கு அதிகாரம் உண்டு.  மற்றபடி மேற்கண்ட சுற்றறிக்கைகளுக்கு மும்பை காவல்துறை விளக்கம் தெரிவிக்க வேண்டியதோ, அல்லது மன்னிப்பு கேட்க வேண்டியதோ இல்லை.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

8 கருத்துகள்:

  1. //மேற்கண்ட சுற்றறிக்கைகளுக்கு மும்பை காவல்துறை விளக்கம் தெரிவிக்க வேண்டியதோ, அல்லது மன்னிப்பு கேட்க வேண்டியதோ இல்லை//
    அதே தான் .முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்

    பதிலளிநீக்கு
  2. கடவுளே ! பெண்களா ? போதும் . ஒரு அவசியத்தை கடவுள்கூட விரும்பமாட்டார்.நிறுத்திவிடுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. இது போல ரகசியங்களை எல்லாம் அறிய ஆவல் காட்டும் நீங்கள்2 ௦ 1 5 இல் குஜராத் ,இந்து மாநிலமாக அறிவிக்கப்படும் என வி எச் பி தலைவர் கூறியதாக இன்று தினமணியில் நியூஸ் வந்துள்ளது ,மும்பை போலீஸ் என்ன செய்யும் :?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்?. இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றி எழுதினால் மோடி பற்றியும் அதே கட்டுரையில் குறிப்பிட வேண்டும் என்று கூறுகிறீர்களா?. அல்லது இந்த பொருள் பற்றி எழுதக்கூடாது என்கிறீர்களா? அதற்கு பெயர்தான் மதச்சார்பின்மையா?. முஸ்லீம்களையும், முஸ்லிம் தீவிரவாதிகளையும் நான் வேறுபடுத்தி காண்கிறேன். நீங்கள் இருவரும் ஒன்றுதான் என்று நினைக்கிறீர்கள் போல!. இக்கட்டுரையின் நோக்கம் காவல் துறையின் செயல்பாடுகளுக்கு உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தத்தான்.

      நீக்கு
  4. நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நிறுவனங்களில் ஒன்றைப் பற்றிய செய்தி ஒன்று வந்து விட்டால், உடனே குஜராத்தைப் பற்றி ஏதேனும் சம்பந்தப்பட்டதோ இல்லையோ சொல்லிவிட வேண்டியது தானா?
    செய்தி என்ன வென்றால், "நடுநிலையான, நல்ல முஸ்லிம் மாணவிகளை ஜிஹாதிகள் ஆக்கி போராளிகளாக மாற்ற ஒரு நிறுவனம் முயல்வதாக உறுதியற்ற தகவல்கள் சொல்கின்றன. கண்காணிக்கவும்". இது எந்த விதத்தில் இஸ்லாமியர் மனத்தை புண் படுத்தும்? மகாராஷ்ட்ராவில் ஆளுவது மதச்சார்பற்றஅரசு தானே? இந்த செய்தியின் செய்தியும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாதா?

    பதிலளிநீக்கு
  5. தீமையை எதிர்த்து போராடுவதுதான் ஜிஹாத். இது தீமை என மனதால் நினைக்கலாம். கைகளால் தடுக்கலாம். கொடுங்கோல் அரசனை எதிர்த்து குரல் கொடுக்கலாம். இதுதான் ஜிஹாத் என இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகிறார்கள். ஜிஹாதிற்கும் தீவிரவாதம், பயங்கரவாதத்திற்கும் தொடர்பில்லை. ஜிஹாத் என்று ஊடகங்கள் பூச்சாண்டி காட்டுவதை உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் தீவிரவாதிகளும் அதே வார்த்தையை பயன்படுத்துகிறார்களே!. எனவே இக்கட்டுரையில் அந்த வார்த்தை வாசகர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக தீவிரவாதிகள் பயன்படுத்தும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜிஹாத் என்பதன் உண்மை அர்த்தம் அனைவரும் அறிவர்.

      நீக்கு