புதன், 5 டிசம்பர், 2012

ஊழல் குறைந்த நாடுகள் தர வரிசை பட்டியல் 2012- இந்தியாவின் இடம் என்ன!?



டிரான்பரன்சி இண்டர்நேசனல் (Transparency International)  அமைப்பு 2012- ஆம் ஆண்டிற்கான ஊழல் குறைந்த நாடுகள் தர வரிசை பட்டியலை (Corruption Perception Index (CPI)) வெளியிட்டுள்ளது. 176 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்த தரவரிசை பட்டியலில் சென்ற ஆண்டு 95 ஆம் இடத்தை பெற்றிருந்த இந்தியா இந்த ஆண்டு ஒரு இடம் முன்னேறி 94 வது இடத்தை பெற்றுள்ளது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள ஊழல் தரவரிசை பட்டியலை சென்ற ஆண்டு பட்டியலுடன் ஒப்பிட முடியாது என்றும், இந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியல் புதிய அளவீட்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது என்றும் Transparency International  அமைப்பு கூறியுள்ளது. இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அளவீட்டு முறையை சென்ற ஆண்டு பயன்படுத்தியிருந்தால் அப்போது இந்தியா  95 வது இடத்திற்கு பதிலாக 96 வது இடத்தையே பெற்றிருந்திருக்கும்  என்று அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

World Bank's Country Performance, Institutional Assessment  மற்றும்  Global Insight Country Risk Ratings போன்ற 10 புள்ளிவிவரங்களின் சராசரியை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாடு  0 மதிப்பெண்களை பெற்றிருந்தால் ஊழல் மலிந்த நாடு என்றும்,  100 மதிப்பெண்களை பெற்றிருந்தால் ஊழல் இல்லாத நாடு என்றும் நிர்ணயிக்கப்பட்டது.  இந்த ஆண்டு இந்தியா 36 /100 மதிப்பெண்களை பெற்றுள்ளது. 

ஆண்டு தோறும் இந்தியாவில் ஊழல் அதிகரித்து வருவதை இப்பட்டியல் நமக்கு தெளிவாக காட்டுகிறது. 2007 ஆம் ஆண்டில் மொத்தம் 180 நாடுகளில் இந்தியா 72-வது இடத்தை பெற்றது. அதன் பின் பட்டியலில் மிகவும் பின்தங்கி 2010 ல்  87 வது இடத்தையும்,    2011-ல் 95 வது இடத்தையும் இந்தியா பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அண்டை நாடான ஸ்ரீலங்கா இப்பட்டியலில்  79-வது இடத்தையும், சீனா  80-வது இடத்தையும் பெற்று இந்தியாவை விட முன்னேறிய நிலையில் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் ஊழல் என்ற வகையில் ஆப்கானிஸ்தான், ஈரான், நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இந்தியாவை விட மிகவும் ஊழல் மலிந்த நாடுகளாக உள்ளன. டென்மார்க் 90 மதிப்பெண்கள் பெற்று ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் முதல் இடத்தை வகிக்கிறது, அதனை தொடர்ந்து பின்லாந்து இரண்டாம் இடத்தையும், நியுஸிலாந்து மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன. மியான்மர், சூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா, வட கொரியா ஆகிய நாடுகள் பட்டியலில் கடைசி இடங்களை பெற்றுள்ளன. Transparency International  அமைப்பு வெளியிட்ட  2012- ஆம் ஆண்டிற்கான பட்டியலில் 183 நாடுகள் 50 க்கும் குறைவான மதிப்பெண்களையே பெற்றிருந்தன.

மேற்கண்ட பட்டியல்  மூலம் நாம் ஒன்று மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. ஊழல் என்பது இன்று இனம், மதம், மொழி, கலாச்சாரம், நாடு என்பதை கடந்து உலகளாவிய நடைமுறையாக மாறி வருகிறது என்பதுதான் அது. இனி ஊழலை ஒழிக்க முடியுமா? என்ற மிகப்பெரிய சந்தேகத்தையும் இந்த ஆய்வு நம்மிடையே தோற்றுவித்துள்ளது. ஊழலை உரம் போட்டு வளர்த்திட அரசியல்வாதிகள் இனம், மதம், மொழி, கலாச்சாரம், நாடு என்ற அனைத்து ஆயுதங்களையும் புத்திசாலித்தனமாக பயன்படுத்துகிறார்கள். இந்த உணர்ச்சி ஆயுதங்களுக்கு மக்கள் பலியாகும்வரை ஊழலை உலகிலிருந்து ஒழிப்பது என்பது முடியாத விஷயமாகத்தான் தெரிகிறது.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 கருத்துகள்:

  1. மக்களின் அறியாமை இருள் அகளும் போது ஊழல் இல்லாத நாடு என்கின்ற விடியல் பிறக்கும்

    அதற்க்காக நாம் ஒவ்வோருவரும் பாடு பட வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் முயற்சி வெற்றி பெற இறைவன் உதவி புரிவனக!!

      நீக்கு
  2. It is not easy thing to eradicate corruption in India. Capitalists bribes political and high officials to get contract orders. Political people bribes voters to get success in election. Unemployee bribes to get permenent job. Even bike riders don,t keep license,insurance helmet with them. To escape from the fine, he bribes traffic staff. There should be complete change. It will take much time.

    பதிலளிநீக்கு