திங்கள், 19 நவம்பர், 2012

இந்த பதிவை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்படலாம்!Indiavisitinformation.com
பால் தாக்கரே மரணத்தையொட்டி மும்பையில் முழுஅடைப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த தானேயை சேர்ந்த ஷாகீன் தாடா என்று  பெண் நேற்று மும்பை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.  பால் தாக்கரேயின் மரணத்திற்காக மும்பையில் முழு அடைப்பு நடத்தக்கூடாது என்றும்,  நாம் பகத் சிங்கையும், சுஹ்தேவையும் நினைவு கூறவேண்டும் என்றும் அவர் பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.  இதைவிட கொடுமை என்னவென்றால் அவரது கருத்தினை “Likes” செய்ததால் ஷாகீனின் தோழி ரேனுவும் கைதுசெய்யப்பட்டார்.

உள்ளூர் சிவசேனா தலைவர் ஒருவரின் புகாரின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் இ.த.ச பிரிவு 505(2) (statements creating or promoting enmity, hatred or ill-will between classes) -ன் கீழ் கைது செய்யப்பட்டனர். இருவரும் இன்று பெயிலில் விடுவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண்களின் வழக்கறிஞர் சுதிர் குப்தா தெரிவித்தார்.

பேஸ்புக்கில் ஷாகீனின் கருத்து வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில்  40 பேர்களை கொண்ட சிவசேனா தொண்டர்கள் படை பல்காரில் உள்ள  ஷாகீனின் உறவினர் ஒருவரின் மருத்துவமனையை  தாக்கி சேதப்படுத்தியது.

பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா தலைவர் மார்கண்டேய கட்ஜு மும்பை பொலிசாரின் மேற்கண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இரு பெண்களையும் கைது செய்த மும்பை போலீசார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மகாராஷ்டிரா முதல் அமைச்சருக்கு அனுப்பியுள்ள இ-மெயிலில் மும்பை போலீசார் மீது முதல் அமைச்சர் நடவடிக்கை எடுக்கத் தவறினால் தான்  சட்டப்பூர்வமான மேல்நடவடிக்கை எடுக்கப்போவதாக கட்ஜு தெரிவித்துள்ளார்.

கட்ஜு தனது இ-மெயிலில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
“I will deem it that you as CM are unable to run the state in a democratic manner as envisaged by the Constitution to which you have taken oath and then legal consequences will follow,”

சம்பந்தப்பட்ட போலீசாரை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யவேண்டும் என்றும், அவர்களை கைது செய்து அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கட்ஜு முதல் அமைச்சருக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளார். என்னை பொருத்தவரை பந்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது எவருடைய மத உணர்வுகளையும் புண்படுத்துவதாக கருத முடியாது என்றும், நமது அரசியல் சட்டத்தின் Article 19 ன்படி பேச்சுரிமை என்பது நமது அடிப்படை உரிமை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்றும் கட்ஜு மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிசாரின் இந்த கைது நடவடிக்கை பிரிவு 341 மற்றும் 342-ன் கீழ் கிரிமினல் நடவடிக்கையாக கருத முடியும் என்றும், ஒருவரை தவறான முறையில் கைது செய்வதும், குற்றம் ஏதும் செய்யாத ஒருவரை சிறையில் வைப்பதும்  பிரிவு 341 மற்றும் 342-ன் கீழ் கிரிமினல் குற்றமாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் நமக்கு உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். அரசியல்வாதிகள் மக்களின் பேச்சுரிமையை மறைமுகமாக பறிக்க நினைக்கிறார்கள். பந்த் நடத்த ஒரு அமைப்பிற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே அளவு உரிமை பந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் ஒருவருக்கு உண்டு. ஆனால் இத்தகைய கைது  நடவடிக்கைகள் மூலம் மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி மிரட்ட நினைக்கின்றனர்.   பத்திரிக்கைகள் மீது பாய்ந்தால் அவைகள் அவர்களை திருப்பி அடிப்பார்கள். ஆனால் அப்பாவி மக்களுக்கு பத்தரிக்கைகள் போல் பின்புலம் கிடையாது. எனவே அவர்களை எளிதில் மிரட்டலாம் எனபது அவர்கள் கணக்கு. அதனால்தான் அரசியல்வாதிகள்  மீது ஆதாரமில்லாமல் ஊழல் குற்றச்சாட்டுக்களை பத்திரிக்கைகள் தெரிவிக்கும்போது அமைதியாக இருந்துவிடும் அவர்கள், சமூக வலைத்தளங்களில் ஒரு சராசரி இந்தியன் தனது கருத்தை தெரிவிக்கும்போது தைரியமாக பொங்கி எழுகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளின் இந்த அடக்குமுறை நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதை அனைவரும் உணர வேண்டும். குறிப்பாக பத்திரிக்கைகள் இந்த விஷயத்தில் அரசியல்வாதிகளுக்கு எதிராக உரக்க குரல் கொடுக்க வேண்டும். ஆனால் பல பெரிய பத்திரிக்கைகள் கூட இந்த விஷயத்தை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை என்பதுதான் என் எண்ணம். 

இந்த பதிவை வெளியிட்டதற்காக நான் கைது செய்யப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஏனென்றால் அந்த அச்சத்தை என் மனதில் விதைப்பதில் இந்த அரசியல்வாதிகள் ஓரளவு வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.  
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

18 கருத்துகள்:

 1. இந்தப் பதிவிற்கு பின்னூட்டம் போட்டவர்களை என்ன செய்வார்கள்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் இரண்டு நாள்ல பதில் கிடைக்கும்ன்னு நினைக்கிறேன்!

   நீக்கு
  2. மதம் சார்ந்த அரசியல்? மதத்தை மக்கள் புறக்கனிக்க வேண்டும்.

   நீக்கு
 2. அமெரிக்காவில் இருந்து லைக் போட்டாலும் கைது செய்வார்களா? பயமுறுத்துறாங்கப்பா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமெரிக்காவில் உள்ளவங்களுக்கு அந்த பெருமை கிடைக்க வாய்ப்பில்லை சார்!

   நீக்கு
 3. எனக்கும் பயமாத்தான் இருக்கு அதான் நான் ஒன்னும் சொல்லாமலே போறன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்படியும் பெயில்ல விட்டுருவாங்க. பயப்படாதீங்க!

   நீக்கு
 4. bold attempt sir....many of the peoples vre do fear abt that kind of thing

  பதிலளிநீக்கு
 5. நான் இலங்கையனாக இருந்த போதும் பால் தாக்ரேயின் கொடுமைகளை கேட்டறிந்து இருக்கிறேன். அந்த சர்வதிகாரியை எதிர்த்ததற்கு தண்டணை சிறை! வாழ்க ஜனநாயகம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட ராமா.............இப்போ பின்னூட்டம் போட்டாலும் சிறைவாசமா? ஒன்னும் புரியலையே:(

   இனிமே இந்தியாவுக்கு வந்தால் கப்சுப்ன்னு இருக்கணும்,இல்லே?

   நீக்கு
 6. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 7. எழுதுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதக்கூடாது....இந்த ஷாகீன் தாடா செத்தால் தெருவில் போற நாய்கூட திரும்பிப் பார்க்குமா என்றால் சந்தேகமே...அனால் பால் தாக்கரேயின் மரண ஊர்வலத்தில் 25 லக்ஷ்ம் மக்கள் கலந்துகொண்டனர். அது பால் தாக்கரே மற்றும் சிவசேனை மீது உள்ள பயத்தால் என்றால் நம்பமுடியாதது மட்டுமல்ல முட்டாள்தனமானதும்கூட....ஏதோ ஒரு பொறாமையில், வன்மத்தில் (அது மதம் சார்ந்ததாக கூட இருக்கலாம் )இந்த பெண் எழுதியுள்ளார்...இது நிச்சயமாக தவறுதான் தவறுக்கு தண்டனை கட்டாயம் கிடைத்தாக வேண்டும் பெண் என்பதற்காக நடவடிக்கை கூடாது என்று கூறுவதும் முட்டாள்தனமானது....மார்க்கண்டேய கட்சுவின் அறிக்கையும் ஒரு விளம்பரத்திற்கானதுதான்......இதைக் கண்டிக்கும் நீங்கள் இன்னோசன்ஸ் முஸ்லீம் யூ டியூப் படத்திற்காக ஏற்பட்ட வன்முறை வெறியாட்டத்தின்போது எங்கே போயிருந்தீர்கள்...???இந்த க்ட்சு எங்கே போயிருந்தார்...???தூங்கவா..அல்லது சின்ன வீட்டிற்கா...?? இதை நீங்கள் வெளியிடாவிட்டாலும் சரி உங்களின் வாதம் தவறானது..அந்த ஷாகீன் தாடா வின் எழுத்தும் தவறானது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாகரீகமாக விமர்சிக்கும் பின்னூட்டங்கள் இங்கு கண்டிப்பாக வெளியிடப்படும். நீங்கள் குறிப்பிடும் திரைப்படத்தில் நாகரீகமான விமர்சனம் இல்லை எனபது மட்டுமல்ல அது அநாகரீகத்தின் உச்சமாக இருந்தது. அத்திரைப்படம் மற்றவர்களின் சுதந்திரத்தில் அநாகரீகமாக மூக்கை நுழைத்தது. அத்திரைப்படத்திற்கு தடை விதித்தது சரிதான். எனவே என்னுடைய கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. மீண்டும் கூறுகிறேன். பந்த் நடத்த ஒரு அமைப்பிற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே அளவு உரிமை பந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் ஒருவருக்கு உண்டு.

   நீக்கு
 8. மும்பையில் இருந்தால் அந்நிலை வரலாம் .

  பதிலளிநீக்கு
 9. If the revolt (atrocities) against the anti-Islam film is logical, the atrocities done by shiv-sena is also correct.

  பதிலளிநீக்கு
 10. எஹ்தியா எழுதறதுக்கும் பயமா இருக்கு. எங்க ஊரு கண்மாய் பத்தி கூட எழுதுவதில்லை.. இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் போட்டாலும் வம்பாப் போயிடுமோ............ பயம்.......பயம்.......பயம்............

  பதிலளிநீக்கு