செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

நேதாஜியின் மரணம்- வெடித்து கிளம்பும் புதிய உண்மைகள்!


இந்தியாவின் விடுதலைக்காக இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்து  ஜப்பானுடன் கூட்டணி அமைத்து ஆங்கிலப்படைக்கு எதிராக இரண்டாம் உலகப்போரில் போரிட்டவர் சுபாஷ் சந்திர போஸ். இந்திய இளைஞர்களின் கதாநாயகனாக திகழ்பவர். ஆனால் அவரது மரணம் குறித்த சர்ச்சைகள், சந்தேகங்கள் இன்றுவரை தீர்ந்தபாடில்லை. ஒரு நாட்டின் வரலாறு பற்றி அறிய அந்த நாட்டு குடிமக்களுக்கு முழு உரிமையும் உண்டு. ஆனால் தேசியத் தலைவரான சுபாஷ் சந்திர போஸின் கடைசி நாட்களைப் பற்றிய மர்மத்தை மக்களுக்கு தெரிவிக்க எந்த இந்திய அரசும் உண்மையாக முயற்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை.
இதுவரை நேதாஜி பற்றிய ரகசியத்தை அறிய இந்தியாவில் மூன்று கமிஷன்கள்  அமைக்கப்பட்டுள்ளன. முதலாவதாக 1956 ஆம் ஆண்டு நேரு, ஷா நவாஸ் கமிட்டி-ஐ  அமைத்தார். இரண்டாவதாக கோசலா  கமிட்டி  அமைக்கப்பட்டது. 1999 – ஆம் ஆண்டு வாஜ்பாய் அரசு முகர்ஜி கமிஷன்-ஐ அமைத்தது. இந்த விசாரனை கமிஷன் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி M.K. முகர்ஜி தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கமிட்டி தனது அறிக்கையை 8-11-2005  அன்று அப்போது காங்கிரஸ் ஆட்சியில் உள்துறை அமைச்சராக  சிவராஜ் பட்டீல் அவர்களிடம்  அளித்தது. இந்திய பாராளுமன்றத்தில் 17-05-2006 அன்று அவ்வறிக்கை முன் வைக்கப்பட்டது. முதல் இரண்டு  கமிஷன்களின் முடிவுகளுக்கு எதிராக முகர்ஜி கமிஷன் முடிவு இருந்தது  அது நேதாஜி 18-08-1945 அன்று  விமான விபத்தில் இறந்தார் என்ற வாதத்தை ஏற்கவில்லை. . நேதாஜி ரஷியா தப்பி செல்வதற்காகவே விமான விபத்து நடந்தது போல்  நாடகம் நடத்தப்பட்டது என்று தெரிவித்தது. அதற்கு ஆதாரமாக, 14-08-1945 முதல் 20-09-1945 வரை   தைவானில் விமான விபத்து நடந்ததாக ஆவணங்கள் ஏதும் தங்களிடம் இல்லை என்ற தைவான் அரசின் அறிக்கை சுட்டிக்காட்டப்பட்டது.. அதே சமயத்தில்  நேதாஜி ரஷியாவில் இருந்ததை உறுதிப்படுத்தவும் முடியவில்லை  எனவும் கமிஷன் தெரிவித்தது. முகர்ஜி கமிஷன் அறிக்கையை காங்கரஸ் அரசு நிராகரித்தது.  மேற்கண்ட மூன்று கமிஷன்களின் அறிக்கையுமே மக்களின் சந்தேகத்தை தீர்ப்பதற்கு பதிலாக மர்மத்தை அதிகரிக்கவே செய்கின்றன. 

நேதாஜியின் மரணத்தை பற்றி பல புத்தகங்கள் ஏற்கனவே வெளிவந்துள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக சமர் குஹா எழுதிய Netaji: Dead or Alive?  மற்றும்  அனுஜ் தார் எழுதிய Back from Dead: Inside the Subhas Bose Mystery  ஆகியவைகளை சொல்ல முடியும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள அனுஜ் தார் எழுதிய India's Biggest Cover-up என்ற புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்க புத்தகமாக கருதப்படுகிறது.

இப்புத்தகமானது 65 வருடங்களாக ரகசியமாக வைக்கப்பட்டு இருந்த அமெரிக்க, பிரிட்டிஷ், மற்றும் இந்திய ரகசிய ஆவணங்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகம் மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை தருகிறது. நேதாஜி 1985 வரை உயிரோடு இருந்தார் என்பதற்கான ஆதாரமாக மிக ரகசிய (top secret) ஆவணங்களையும், புகைப்படங்களையும் தருகிறது.

கூடுதலாக தற்போது இந்திய ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜி வெளியுறவு அமைச்சராக இருந்தபோது   நேதாஜி பற்றிய உண்மைகள் வெளிவருவதை தடுக்கும் அல்லது  மூடி மறைக்கும் வகையில் செயல்பட்டார் என்றும் தெரிவிக்கிறது. 
பிரணாப் முகர்ஜி வெளி உறவு அமைச்சராக இருந்த பொது நேதாஜி விமான விபத்தில் இறந்தார் என்ற வாதத்தை போதிய ஆதாரங்கள் இல்லாத போதும் தேவைக்கும் அதிகமாக ஆதரித்தார் என்று புத்தகத்தின் ஆசிரியர் தெரிவித்துள்ளார்.  அதற்கு ஆதாரமாக 1996 –ல் நடந்த ஒரு சம்பவத்தை கூறுகிறார்.  1996 –ல் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் தனது ரகசிய குறிப்புரையில், ரஷிய உளவு நிறுவனமான KGP –இன் ரகசிய ஆவணங்களில்  நேதாஜி பற்றிய ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா? என்பதனை அறிய  தேடுதல் நடவடிக்கை எடுக்கும்படி  ரஷிய கூட்டமைப்பிடம் இந்திய அரசு  கோரிக்கை வைக்க வேண்டும் என்று இந்திய அரசுக்கு தெரிவித்தார். பிரணாப் முகர்ஜி அக்குறிப்புரையை படித்ததாகவும், அதன்பின் அப்போது  வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த சல்மான் ஹைதரை அழைத்து குறிப்புரை எழுதிய இணை செயலாளரை சந்திக்கும்படி அறிவுறித்தினார் என்றும், அச்சந்திப்பிற்கு பின்னர் அதே இணை செயலாளர் ஆவணங்களை ரஷியா அரசிடம் கேட்பது இந்திய ரஷிய நல்லுறவை பாதிக்கும் என்று குறிப்புரை எழுதினார் என்றும் அனுஜ் தார் கூறுகிறார். மேலும், நேதாஜி தைவானில் விமான விபத்தில் இறந்தார் என்ற வாதத்தை ஆதரிக்கும் மிகப் பெரும் ஆதரவாளராக பிரணாப் முகர்ஜி இருக்கிறார் என்றும் கூறுகிறார்.

மேலும்  நேதாஜி 1945 ஆம் ஆண்டு விமான விபத்துக்கு பின்னர் ரஷியாவில் காணப்பட்டார் என்றும், அதுபற்றி இந்திய அரசாங்கம் ரஷிய அரசிடம் விளக்கம் ஏதும் கோரவில்லை என்றும் கூறுகிறார்.

1994-ல் உள்துறை அமைச்சகம், வெளியுறவு அமைச்சகத்திடம்  ஜப்பானிய அரசாங்கம் முறையான இறப்பு சான்றிதழ் வழங்கி நேதாஜியின் இறப்பை உறுதி செய்துள்ளதா என் விளக்கம் கேட்டபோது வெளியுறவு அமைச்சகம் எதிர்மறையாகவே பதில் அளித்ததாகவும், ஏனென்றால் ஜப்பானின் ஆவணங்கள் வெளிப்படையாகவே போலியாக இருந்தது என்றும் நூலாசிரியர் தெரிவிக்கிறார்.

1945 விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்றால் அவர்  எப்போது இறந்திருப்பார்? என்று அனுஜ் தாரிடம் கேட்ட போது பைசலாபாத் நகரில் அவர் இறந்திருக்கலாம் என்பதற்கான சில ஆதாரங்கள் உள்ளன என்றும், ஆனால் இந்திய அரசு தனது உளவு நிறுவனங்களிடம் உள்ள மிக ரகசிய ஆவணங்களை வெளியிட்டால்தான் நேதாஜி பற்றிய மர்மங்களை முழுமையாக அவிழ்க்க முடியும் என்று தெரிவித்தார். ஆனால் பிரதமர் அலுவலகம் உட்பட இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தர மறுத்துவிட்டன. அவ்வாறு ரகசிய ஆவணங்களை வெளியிட்டால் அது பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை பாதிக்கும் என்று காரணம் தெரிவிக்கப்பட்டது.

நேதாஜி உயிருடன் இருந்தால் அல்லது உயிருடன் இருந்திருந்தால் யாருக்கு பிரச்சினையாக இருந்திருக்கும்? இந்திய அரசாங்கங்கள் குறிப்பாக காங்கிரஸ் அரசாங்கம் ஏன் நேதாஜி பற்றிய உண்மையை மக்களுக்கு அறிவிக்க முயற்சிக்கவில்லை?. நேதாஜி விமான விபத்தில் இறந்து விட்டார்  என்ற வாதத்தை காங்கரஸ் தலைவர்கள் உரிய ஆதாரங்கள் இல்லாமல் வலியுறுத்துவது ஏன்?.  நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடுவது பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை பாதிக்கும் என்றால், நேதாஜியின் மரணம் என்பது மிக பெரிய ரகசியங்களை உள்ளடக்கியதாகத்தான் இருக்க முடியும். ஒருவேளை உங்கள் தாத்தா, பாட்டியிடம் கேட்டால் அந்த ரகசியங்களுக்கு விடை கிடைக்கலாம்.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

13 கருத்துகள்:

  1. //பிரதமர் அலுவலகம் உட்பட இந்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தர மறுத்துவிட்டன. அவ்வாறு ரகசிய ஆவணங்களை வெளியிட்டால் அது பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை பாதிக்கும் என்று காரணம் தெரிவிக்கப்பட்டது//

    இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய ஒரு மாபெரும் வீரனின் மரணத்தோடு விளையாடிய நாடுகளின் நல்லுறவுகள்தான் இன்று முக்கியமாக இருக்கிறது இப்போதைய கயவாளிகளுக்கு. இதே போல்தான் இன்றும் சிங்கள நாய்களுடனான உறவுகளுக்கு தமிழர்களின் உயிர்கள், மீனவர்களின் உயிர்கள் அநியாயமாய் அழிக்கப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்திய தேசிய விடுதலை போராட்ட வரலாற்றில் நேதாஜிக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதே உண்மை. எல்லாவற்றிற்கும் பின்னால் அரசியல்வாதிகளின் சுயநலம் ஒளிந்திருக்கிறது.

      நீக்கு
  2. வணக்கம்
    அவர் இன்றைய முதல் குடிமகனாகவே வந்து விட்டார் இன்னும் என்னலாம் பண்ண போகிறாரோ...

    தங்கள் வலைப்பதிவு மிக அருமை
    என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
    என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
    வாசிக்க இங்கே சொடுக்கவும்
    http://kavithai7.blogspot.in/
    புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
    நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்

    என்றும் அன்புடன்
    செழியன்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கவிதைகளை ரசித்தேன். இரத்தின சுருக்கம் என்பார்கள். தங்களில் கவிதை அதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. வாழ்த்துக்கள்!

      நீக்கு
  3. why did not you add join site and subscribe by mail option in your blog anna?
    your content is valuable, please you add.....

    பதிலளிநீக்கு
  4. தம்பி,
    உண்மையில் எனக்கு கணினி தொழில்நுட்ப ஞானம் கிடையாது. பிறரிடம் கேட்டு படித்து வருகிறேன். பெரும்பாலும் கேள்வி ஞானம்தான். ஆயினும் கற்றுக்கொள்ளும் வேட்கையுடன் இருக்கிறேன். ஈமெயில் option என் பிளாகில் வொர்க் ஆகவில்லை(err: feedburner url not found). and i dont know how to add "join this site" option. if you send some ideas to my email id(writervijayakumar@gmail.com), it will be useful.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பி செழியன்! தற்போது எனது தளத்தில் subscribe by mail option செயல்படுத்தப்பட்டுள்ளது. பயன்படுத்திகொள்ளுங்கள்.
      துரை டேனியல் (www.duraidaniel.blogspot.in) சார் அவர்களுக்கு நன்றி! செழியன் நீங்கள் கண்டிப்பாக துரைடேனியல் தளத்தை பார்வையிடுங்கள். உங்களைப்போல் மிக சிறப்பாக கவிதை எழுதக்கூடியவர்.

      நீக்கு
  5. இந்திய எல்லகளைகளைத்தாண்டியும் விடுதலையை நேசிக்கும் அனைத்து மக்களாலும் நேசிக்கப்பட்ட வீரரே நேதாஜி,இப்படியான வீரர்களையும் அவர்களின் தியாகங்களையும் வரலாற்றின் பக்கங்களிலிருந்து எடுத்துவிடத்துடிக்கும் சிலரின் நயவஞ்சகமாகக்கூட இருக்கலாம் இந்த மர்மம்....நல்ல பதிவு,வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. மக்களுக்கு தெரிய வேண்டிய உண்மைகள் நிறைந்த பதிவு

    பதிலளிநீக்கு
  7. தங்களின் கருத்துரைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. உண்மைகள் தெரியப் படுத்தியமைக்கு நன்றி...அவரை சிறப்பாக கௌரவத்திருக்கலாம்.

    என்னுடைய வலைப்பு

    http://rebacca-vethathiri.blogspot.in/

    பதிலளிநீக்கு
  9. நேதாஜி, பரிதாபாத் என்ற நகரில், ஒரு பெயரிலாத சாமியாராக வாழ்ந்து தன்னை, அடயாளம் காண்பித்துக் கொள்ளாமலே இயற்கையாக, மரணம் அடைந்தார் என்றும், அவரது உடல் ஒரு, இருசக்கர வாகன வெளிச்சத்தில் யாருக்கும் தெரியாமல் தகனம் செய்யப் பட்டதாகவும் சில வட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. அவர் தன்னை கும்னாமி பாபா (பெயரில்லாத சாமியார்) என்று சொல்லிக் கொண்டதாகவும் சொல்வார்கள்.

    இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் அவர் தன்னை அடையாளம் காண்பித்துக் கொண்டால், அது இந்தியாவிற்குப் பெரிய தலைவலியாக இருந்திருக்கும். மேலும் அவர், தன்னை வெளிக் காண்பித்து, சுதந்திர இந்தியாவில் ஏதேனும் ஒருப் பதவியில் அமர்ந்து இருந்தால், அது அவரை நம்பிப் போர் முனையில் மரணம் அடைந்தவர்களின் தியாகத்தைக் களங்கப் படுத்தியதுப் போல் இருந்திருக்கும்.

    ஆகையினால்தான், அவர் ஒரு இறந்தவனாகவேத் தன்னைக் கருதி தனது எஞ்சிய வாழ்னாளைக் கழித்திருக்க வேண்டும். இறந்து போன தனது கதாபாத்திரத்துடன் தனதுப் பெயரையும் கொன்றுவிட்டு மகானாய் வாழ்ந்தவர் அவர். உண்மையில் ஒரு காவியத் தலைவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் அவர் தன்னை அடையாளம் காண்பித்துக் கொண்டால், அது இந்தியாவிற்குப் பெரிய தலைவலியாக இருந்திருக்கும்.//

      இந்தியாவுக்கு தலைவலியாக இருந்திருக்காது. அப்போதிருந்த சில பதவி ஆசை பிடித்த தலைவர்களுக்கு தலைவலியாக இருந்திருக்கும் என்பதே உண்மை.

      நீக்கு