சனி, 16 ஜூன், 2012

அப்துல் கலாமிற்கு இந்தியாவின் ஜனாதிபதியாகும் தகுதி இல்லை!!!

காங்கிரசுக்கும், நேர்மைக்கும்  எப்போதும் சம்பந்தம் கிடையாது என்பது நமக்கு தெரியும். இந்த உண்மை மறுபடியும் ஜனாதிபதி தேர்தல் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அப்துல் கலாம் நேர்மையின் பிறப்பிடம். இந்திய இளைஞர்களின் ரோல் மாடலாக  இருப்பவர். வீண் ஆடம்பரம் இல்லாதவர். நடுநிலையானவர். ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர். இத்தகைய தகுதிகள் இருந்தால் சோனியாவுக்கும், காங்கிரசுக்கும் அப்துல் கலாமை எப்படி பிடிக்கும்?. சோனியா காந்திக்கு தேவை காலடியில் வாலை ஆட்டிகொண்டு நிற்கும் ஒரு நாய் குட்டி. அப்துல் கலாம் நிச்சயம் அவ்வாறு நடக்க மாட்டார். நீதியின்படி நடப்பவர் அப்துல் கலாம். சோனியா முன்னாள் கையை கட்டிக்கொண்டு சேவகம் செய்யும் குணம் படைத்தவர்  அல்ல அப்துல் கலாம்.

அதே போல் கருணாநிதிக்கும் அப்துல் கலாமை ஆதரிக்க பிடிக்கவில்லை.  தமிழன், தமிழன் என்று கூவும் கருணாநிதிக்கு ஒரு தமிழனை ஜனாதிபதியாக்க விருப்பமில்லை. அவர் ஏற்கனவே மூப்பனாரை பிரதமர் ஆகவிடாமல் தடுத்தவர்தான் அவருடைய தமிழ் பாசம் அபாடிப்பட்டது. தமிழனை, தமிழ் இனத்தை  நம்ப வைத்து கெடுத்தவர் இவரை போல் எவருமில்லை. அப்துல் கலாம் ஒன்றும் அதிமுக கட்சி உறுப்பினர் இல்லையே! பிறகு ஏன் அவருக்கு அப்துல் கலாமை ஜனாதிபதியாக்குவதில் விருப்பமில்லை.. அவருக்கு இப்போதைய லட்சியம் தனது மகளை காப்பாற்ற வேண்டும். அதற்காக எத்தனை தமிழனையும் பலி கொடுக்க தயார். குடும்பத்துக்காகவும், பதவிக்காகவும்  ஈழத்தையே பலி கொடுத்தவர்தானே  அவர். இப்போது டெசோ இயக்கம் தனி ஈழம் வாங்கித் தரும் என்று வெட்கமில்லாமல் சொல்கிறார். தமிழனை இன்னும் முட்டாள் என நினைத்து கொண்டிருக்கிறார். இவர்தான் உலகத் தமிழர்களின் இன மான தலைவராம். பேசாமல் மதம் மாறுவது போல் இனம் மாறிவிடலாம் போலிருக்கிறது.                   
காங்கிரசின் வேட்பாளராக பிரணாப் முகர்ஜி அறிவிக்கப்பட்டிருக்கிறார். பிரணாப் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவரா இல்லையா  என்பது என்னுடைய வாதம் அல்ல.ஆனால் அப்பதவிக்கு கட்சி சார்பற்ற, நடுநிலையான  ஒருவர்தான் பொருத்தமானவராக இருக்க முடியும். மத்திய அரசின் பல ஊழல்கள் வெளிவந்துள்ள இந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாக இருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சில அனுகூலங்களை தரலாம். ஆனால் ஜனாதிபதி பதவியின் நம்பகத்தன்மை  பாதிக்கப்படகூடும்.

காங்கிரஸ் கட்சியால் சென்ற முறை தேர்ந்தெடுக்கப்பட்ட  பிரதிபா பட்டீல் அவர்களின் தகுதிகள் சிலவற்றை சற்று பார்ப்போம். இந்திரா காந்தி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தவர், காங்கிரஸ் உறுப்பினர். 5 தடவை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். விஸ்ராம் பட்டில் கொலை வழக்கில் சம்பந்தபட்டிருப்பதாக புகார், பிரதிபா மகிளா சஹாகரி வங்கியின் பண மோசடியில் சம்பந்தபட்டிருப்பதாக புகார், அவர் தொடங்கிய Sant Muktabai Sahakari Sakhar Karkhana sugar factory யில் லோன் கட்டாத defaulter,  1991 – 1996 வரை அமராவதியில் MP யாக இருந்தபோது MPLADS  நிதி  ரூ. 36 லட்சத்தை  தனது கணவரின் அறக்கட்டளைக்கு திருப்பியாதாக புகார்,   தனது பதவி காலத்தில் வெளிநாடுகளுக்கு சென்று வந்த வகையில் அரசுக்கு செலவு Rs.205 கோடி. இதுதான் காங்கிரஸ் கட்சி சென்ற முறை தேர்ந்தெடுத்த ஜனாதிபதியின் தகுதிகள். இப்படிப்பட்ட காங்கிரஸ் அப்துல் கலாமை ஆதரிக்கும் என்று நாம் எப்படி எதிர் பார்க்க முடியும்.

மக்களின் விருப்பம் அப்துல் கலாம் மட்டுமே. மக்களின் விருப்பம் அரசியல் கட்சிகளுக்கும் தெரியும். ஆனால் மக்களின் விருப்பம் பொது தேர்தலின் போது மட்டுமே கவனிக்கப்படும். ஜனாதிபதி தேர்தலின் போது அரசியல் கட்சிகளின் அரசியல் லாபங்கள் மட்டுமே கவனிக்கப்படும். மக்களிடம்  கருத்து கணிப்பு நடத்தினால், அல்லது மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறை இருந்தால் யார் வெற்றி பெறுவார் என்பது காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிக்கும் தெரியும்.ஆனால் மக்களின் விருப்பத்தை நிராகரிக்கும் காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கையால் காங்கிரஸ் உண்மையிலேயே மக்கள் விரோத கட்சியாகிவிட்டது. ஏற்கனவே மூழ்கி போன கப்பலாக உள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மேலும் மக்கள் வெறுப்பை சம்பாதித்துள்ளது. அப்துல் கலாம் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படாவிட்டால்  தோல்வி அவருக்கல்ல. மக்களுக்குத்தான். ஆனால் மக்கள் காலம் வரும் வரை காத்திருந்து காங்கிரசுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது உறுதி.

More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 கருத்துகள்:

  1. இந்திய அரசியல்வாதிகள் யாரும் யோக்கியம் கிடையாது ,அப்படி இருந்திருந்தால் ஜனாதிபதி பதவிக்கு என் பெயரை அல்லவா சிபாரிசு செய்திருப்பார்கள்,எனக்கும் ஜனாதிபதி ஆவதில் விருப்பம் இல்லை இந்த ஆசை தப்பி தவறியும் கூட எனக்கு வந்திடக்கூடாது என்பதற்காகவே இதுவரை நான் பாஸ்போர்ட் எடுத்து வைத்துக்கொள்ளவில்லை.தவிர எனக்கு இந்தியாவில் முடிக்க வேண்டிய வேலைகளே நிறையயிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. அப்துல் கலாம் அப்படி என்னதான் செய்து விட்டார் அவருக்கு இந்த அளவுக்கு வக்காலத்து வாங்குகின்றீர்கள்

    பதிலளிநீக்கு
  3. மன்னன எவ்வழியோ மக்கள் அவ்வழி. தலைவன் ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும்போது மக்களும் அவ்வழியை பின்பற்ற முனைகின்றனர். இந்தியாவில் சிறந்த தலைவர்களுக்கு மிக பெரிய பஞ்சம். அப்துல் கலாம் நேர்மைக்கும், எளிமைக்கும் உதாரணமாகவும் இந்திய இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் அடையாளமாகவும் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு