வெள்ளி, 16 மார்ச், 2012

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா செய்ய வேண்டியது என்ன?

              சில நாட்களுக்கு முன்பு தமிழ் பத்திரிகை ஒன்றினை படித்துக் கொண்டிருந்தேன். அப்பத்திரிகையில் புலம் பெயர்ந்த ஈழத்துக் கவிஞர் ஒருவரது பேட்டி வெளியாகி இருந்தது. பேட்டி எடுத்த நண்பர் ஈழத்தை பற்றி, ஈழப் போராட்டத்தை பற்றி பல கேள்விகளை கேட்டார். கவிஞரும் வேதனையோடு பதில்களை சொல்லி கொண்டே வந்தார். ஈழப் போராட்டத்தின் தொடக்கம், மக்களின் துயரங்கள், ஈழ மக்களின் மன உறுதி என பல செய்திகளை அவர் கூறினார்.

பேட்டியின் சிறப்பான அம்சம் நிருபர் இறுதியாக கேட்ட கேள்விதான்.

நிருபர்: தற்போது தமிழ் ஈழ மக்களுக்கு இந்தியா செய்ய                        
       வேண்டியது என்ன?

அதற்கு கவிஞர் உடனே சொன்னார்.

 மறுபடியும் முதல்ல இருந்தா?

 அத்துடன் பேட்டியும் முடிந்தது.

கவிஞரின் பதில்  நடிகர் வடிவேலு ஒரு படத்தில் கூறும் நகைச்சுவை வசனம்தான். ஆனால் இந்த பதிலை படித்ததும் எனக்கு விவரிக்க முடியாத உணர்வும் , சிந்தனையும் ஒரே நேரத்தில உண்டாயிற்று.

இந்தியா செய்ய வேண்டியதை விட, செய்ததை நினைத்து பார்த்தால் நிருபர் கேட்ட கேள்வியின் நகைச்சுவை தெரியும். கவிஞரின் பயமும் புரியும்.

தன்  குடும்ப  பழி  வாங்கும் உணர்சிக்காக ஒரு இனத்தையே  அழித்த   காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு, இனி ஈழத் தமிழர்களுக்கு செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?

        இலங்கை எம் தாய் நாடு என்றால், இந்தியா எம் தந்தை நாடு என்று பெருமையாக சொன்ன ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ் தலைமையிலான இந்திய  அரசு, இனி ஈழத் தமிழர்களுக்கு செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?

       கோவிலிலும், பாதுகாக்கப்பட்ட இடங்களிலும்   தஞ்சம் அடைந்தவர்களை குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் என்று பாராமல் கொன்று குவித்த இலங்கை ராணுவத்திற்கு சர்வ தேச வக்காலத்து வாங்கிய இந்திய அரசு, இனி ஈழத் தமிழர்களுக்கு செய்ய வேண்டியது என்ன இருக்கிறது?


     ஈழத் தமிழர்கள் தங்கள் நிலைமைக்கு யாருடைய பரிதாபத்தையும் எதிர்பார்க்கவில்லை. அவர்களுடைய மனஉறுதி மிகப் பெரியது. இவ்வளவு இழப்பிற்கு பின்னும் அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சாதாரணமானதல்ல. ஒரு இயக்கமாக ஒன்று அல்ல இரு நாட்டின் ராணுவத்தையே எதிர்த்தவர்கள். சினிமாவிலும், சாராயக் கடைகளிலும்  தன இன அடையாளத்தை தொலைத்து ஆட்டு மந்தைகளாகி போன தமிழ் நாட்டு தமிழனை போல் இல்லாமல் , தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற பாரதியின் சொல்லுக்கு உலகளவில் உதாரணமாய் நிற்கிறான் ஈழத் தமிழன். எத்தனை முறை அவன் வீழ்ந்தாலும் அத்தனை முறையும் அவன் எழுவான். வெற்றி பெறுவான்.

           எனவே இனி இந்தியா ஈழத் தமிழர்களுக்கு செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது இனிமேலாவது இந்திய அரசு ஈழத் தமிழர்களின் நல்வாழ்விற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என்பது  போன்ற காகித அறிக்கைகளை வெளியிடாமல் இருப்பதுதான். ஏன் என்றால் இது போன்ற அறிக்கைகள் ஈழத் தமிழன் மீதான இலங்கை ராணுவத்தின் மனிதாபிமானமற்ற  தாக்குதல்களை விடவும் மிகவும் கொடூரமானதாகும்.,  


.


     
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 கருத்துகள்:

 1. உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பகிர்வதன் மூலம் ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.

  பதிலளிநீக்கு
 2. ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட, இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்

  புலிகளின் 1985 ஆண்டு ஆகஸ்டில் தொடங்கிய முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையானது 2006ம் ஆண்டு திருகோணமலையில் அமைந்துள்ள முஸ்லீம் கிராம்மான மூதூர் சுற்றி வளைக்கப்பட்டு அது அரச படையினரால் மீட்கப்படும் வரை தொடர்ந்தது என்பதே கசப்பான உண்மை . .


  சானல் 4 தொலைக்காட்சி காண்பிக்காத முஸ்லீம்களுக்கு எதிரான புலிகளின் போர்க்குற்ற ஆதாரங்கள்.

  இதுவரையிலும் ஊட‌க‌ங்க‌ளில் க‌ண்டிராத‌வை

  அந்த போர்க்குற்றங்களை இங்கு ஆதாரத்துடன் முன்வைக்கிறோம்..!


  சிங்களப் பேரினவாதத்தின் கொடுமைகளிலிருந்து விடுதலை பெறுதல் எனும் தூரநோக்கோடு ஸ்தாபிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் போராட்டங்களில் இறுதியாக நிலைத்து நின்றது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மட்டும்தான்.

  ஆயினும், சிறுபான்மையினர் போராட்டமாக உருவெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்பு, பின்னர் மற்றொரு சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தின் மீது கொடுமைகளையும் படுகொலைகளையும் கட்டவிழ்த்து விட்டமையே அதன் அழிவுக்குக் காரணமாயமைந்தது.

  விடுதலைப் புலிகள், முஸ்லிம் சமூகத்தை நசுக்க ஆரம்பிக்கும் வரைக்கும், அவர்களது போராட்டத்துக்கு தமது உடல், பொருளால் முஸ்லிம்கள் பெரும் உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் வழங்கி வந்துள்ளார்கள்.

  ஆரம்ப கட்டங்களில், புலிகளின் முன்னணி வீரர்களாக நின்று போராடியவர்கள் முஸ்லிம்களே.

  புலி உறுப்பினர்களை, இந்திய இராணுவத்திடமிருந்தும் இலங்கை இராணுவத்திடமிருந்தும் பாதுகாத்துக் காப்பாற்றி வந்தவர்களும் முஸ்லிம்களே.

  புலிகள் வருமானமின்றி நாதியற்றுத் திரிந்த காலப்பகுதிகளில், தமது மாடுகள், வயல் விளைச்சல்கள், வர்த்தகப் பண்டங்கள், பொருளாதாரங்கள், ஆளணியினர் என பலவகையிலும் உதவியவர்கள் முஸ்லிம்களே.

  எனினும், முஸ்லிம்களை தமது இனமொன்றாகக் கருதாது, அவர்களை இரண்டாந்தரமாகவே கருதி வந்த புலிகள், கிடைத்த சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது படுகொலைகளையும் கொடுமைகளையும் கட்டவிழ்த்து விட்ட போதே, முஸ்லிம்கள் விழித்துக் கொண்டனர்.

  புலிகளுக்கான தமது ஆதரவையும் ஒத்துழைப்பையும் முழுமையாக வாபஸ் பெற்றனர்.

  அதன்பின், முஸ்லிம்களின் பகிரங்க விரோதிகளாகிப் போன புலிகள், அம்முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளும் வன்முறைகளும் மிகக் குரூரமானவை.

  வடகிழக்கிலுள்ள முஸ்லிம்களிடமிருந்து கப்பம், ஆட்கடத்தல், கொள்ளை, திருட்டு என புலிகள் சேகரித்துள்ள பொருளாதாரத்தின் மொத்தத் தொகை, 550 கோடிகளையும் தாண்டுவதாக ஒரு கணிப்பீடுள்ளது.

  அதேவேளை, வடக்கிலிருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட மக்களிடமிருந்து புலிகள் அபகரித்துக் கொண்ட பொருளாதாரத்தின் மொத்தத் தொகை 1135 கோடிகளையும் தாண்டும் என்பது சரிகாணப்பட்ட புள்ளிவிபரமாகும்.


  எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

  எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

  ஏன் பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள் சில மாதங்களே ஆன எத்தனை பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது


  இதில் மிக வேதனைக்குறிய விடையம்

  இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

  சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.


  இங்கு கிளிக்செய்து >>>>> கொலைவெறி புலிகளின் இன‌ஒழிப்பு (படங்கள் = விடியோ) <<<< பார்வையிடவும்.

  சொடுக்கி >>>>> சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.  .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு சகோதரர் ஈழதமிழன் அவர்களுக்கு,

   உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டேன். விடுதலை புலிகள் தவறுகள் செய்து இருந்தாலும் அதற்கு அப்பாவி பொது மக்கள் எவ்வாறு பொறுப்பாக முடியும்?. விடுதலை புலிகளை அழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு அப்பாவி மக்களை கொன்று குவிப்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும். எல்லா உயிர்களும் சம மதிப்பானவை.அதில் முஸ்லிம், இந்து என்ற வேறுபாடு இல்லை. படுகொலை எங்கு நடந்தாலும் கண்டிக்கப்படத்தக்கது.

   நீக்கு
  2. ரொம்ப சாமர்த்தியமாக எழுதுகிறேன் என்ற பெயரில் புலி ஆதரவாளர்கள் புலிகளின் தவறுகளை மறைத்து எழுதுவதும் பேசுவதும் சகஜம்தானே! இந்தியாவின் நடவடிக்கைகளுக்குப் பின் புலிகளின் தவறுகள் இல்லையா என்ன?

   நீக்கு