ஞாயிறு, 14 அக்டோபர், 2012

டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் 'சன் டிவி' கலாநிதி மாறன்!

நேற்று ‘இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின்  புதிய பட்டியல்’ என்ற தலைப்பில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தேன். இன்று வெளியிட்டுள்ள இப்பதிவினை அதன் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம். நேற்று வெளியிட்ட பதிவில் முழு பட்டியலையும்  வெளியிடவில்லை. இன்று இப்பதிவில் அதனை வெளியிட்டுள்ளேன். அதுமட்டுமில்லாமல் சீனாவின் ஹுருன் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் தமிழர்கள் எத்தனை பேர் இடம் பிடித்துள்ளார்கள் என்று அறிய நம்மில் பலருக்கு ஆர்வம இருக்கும். அந்த காரணத்திற்காகவும் இப்பதிவு இன்று வெளியிடப்படுகிறது. ஏனென்றால் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் மூன்று தமிழர்கள் இடம்பிடித்துள்ளனர்.

தமிழர்களில் முதல் இடத்தை சன் நெட்வொர்க் அதிபர் கலாநிதி மாறன் வகிக்கிறார். அவர் அகில இந்திய அளவில் 28 வது இடத்தை பிடிக்கிறார். இவரின் சொத்து மதிப்பு $2,200 மில்லியன். இரண்டாவது இடத்தை EID Parry நிறுவன அதிபர் வெள்ளையன் முருகப்பா குடும்பத்தினரும் (அகில இந்திய அளவில் 61 வது இடம்), மூன்றாவது இடத்தை அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் அதிபர் பிரதாப் ரெட்டியும் (அகில இந்திய அளவில் 84 வது இடம்)  வகிக்கின்றனர். இவர்களின் சொத்து மதிப்பு முறையே $860 மில்லியன் மற்றும் $560 மில்லியன் ஆகும்.  


Hurun India Rich List 2012


Name
Wealth US$m
Company
Location
1
Mukesh Ambani
19,300
Reliance Industries
Mumbai
2
Lakshmi Narayan Mittal
16,900
Arcelor Mittal
London
3
Azim Premji
12,300
Wipro
Bangalore
4
Dilip Shanghvi
8,500
Sun Pharmaceuticals
Mumbai
5
Pallonji Mistry
7,900
Shapoorji Pallonji & Co
Mumbai
6
Shashi & Ravi Ruia
7,200
Essar Energy
Mumbai
7
Adi Godrej
6,900
Godrej Group
Mumbai
8
Kushal Pal Singh
6,300
DLF
Delhi
9
Kumara Mangalam Birla
5,800
Grasim Industries
Mumbai
10
Shiv Nadar
5,700
HCL Technology
Delhi
10
Sunil Mittal
5,700
Bharti Airtel
Delhi
12
Savitri Jindal
5,600
Jindal Steel & Power
Delhi
13
Anil Ambani
5,300
Reliance Infrastructure
Mumbai
14
Micky Jagtiani
4,100
LandMark Group
Dubai
15
Uday Kotak
4,000
Kotak Mahindra Bank
Mumbai
16
Brijmohan Lall Munjal & Family
3,800
Hero Moto Corp
Delhi
17
Anand Burman
3,100
Dabur
Delhi
17
Gautam Adani
3,100
Adani Enterprise
Ahmedabad
19
Rahul Bajaj
3,000
Bajaj Auto Limited
Pune
20
Pankaj Patel
2,800
Cadila Healthcare
Ahmedabad
21
Venugopal Dhoot
2,700
Videocon Industries
Mumbai
22
Subhash Chandra
2,500
Zee Networks
Mumbai
22
Desh Bandhu Gupta
2,500
Lupin Pharmaceuticals
Mumbai
22
Anil Agarwal
2,500
Vedanta Resources
London
25
Cyrus Poonawalla
2,300
Serum Pharma
Pune
25
Ajay Kalsi
2,300
Indus Gas Ltd
Delhi
25
Yusuf Hamied
2,300
Cipla
Mumbai
28
Malvinder Mohan Singh & Shivinder Mohan Singh
2,200
Religare Enterprise
Delhi
28
Kalanithi Maran
2,200
Sun Networks
Chennai
30
Rajan Raheja
2,100
Exide Industries
Mumbai
31
Habil Khorakiwala
1,900
Wockhardt
Mumbai
32
Sudhir & Samir Mehta
1,700
Torrent pharma
Ahmedabad
32
Indu Jain
1,700
Bennett Coleman
Delhi
34
Ajay Piramal
1,600
Piramal healthcare
Mumbai
35
Murali Divi
1,500
Divi's Lab
Hyderabad
35
Benu Gopal Bangur
1,500
Shree cements
Kolkata
37
K. Anji Reddy
1,400
Dr Reddy's Lab
Hyderabad
37
Balvant Parekh
1,400
Pidilite Industries
Mumbai
37
Harsh Mariwala
1,400
Marico Ltd
Mumbai
37
Ashwin Dani
1,400
Asian Paints
Mumbai
37
N.R. Narayana Murthy
1,400
Infosys
Bangalore
42
Brij Bhushan Singal
1,300
Bhusan Steel
Delhi
42
Shyam & Hari Bhartia
1,300
Jubilant Foodworks
Delhi
44
Gautam Thapar
1,200
Avantha Group
Delhi
44
Vikas Oberoi
1,200
Oberoi Reality
Mumbai
44
Kapil & Rahul Bhatia
1,200
Indigo Aviations
Gurgaon
47
Glenn Saldanha & Family
1,100
Glenmark Pharma
Mumbai
47
Vijay Mallya
1,100
United Breweries
Bangalore
47
G M Rao
1,100
GMR
Bangalore
47
Ashwin Choksi
1,100
Asian Paints
Mumbai
47
Rajesh Mehta
1,100
Rajesh Exports
Bangalore
47
Jaiprakash Gaur
1,100
Jaiprakash Associates
Delhi
53
Chandru Raheja
1,000
K Raheja Corp
Mumbai
53
Abhay Vakil
1,000
Asian Paints
Mumbai
53
S Gopalakrishnan
1,000
Infosys
Bangalore
53
Nandan Nilekani
1,000
Infosys
Bangalore
53
Mangal Prabhat Lodha
1,000
Lodha Developers
Mumbai
53
Bhupendra Kumar Modi
1,000
Spice Group
Singapore
53
Niranjan Hiranandani
1,000
Hiranandini Developers
Mumbai
60
Hemendra Kothari
900
DSP BlackRock
Mumbai
61
Anand Mahindra
860
Mahindra & Mahindra
Mumbai
61
Vellayan Murugappa & Family
860
EID Parry
Chennai
63
M.G. George Muthoot
800
Muthoot Finance
Delhi
63
Rakesh Jhunjhunwala
800
Rare Enterprise
Mumbai
65
Karsanbhai Patel
790
Nirma
Ahmedabad
66
V.G. Siddhartha
780
Coffee day Resorts
Bangalore
66
Baba Kalyani
780
Bharat Forge
Pune
68
Analgit Singh
770
Max India
Delhi
69
Qimat Rai Gupta
750
Havells India
Delhi
70
K. Dinesh
730
Infosys
Bangalore
71
Anu Aga
690
Thermax
Pune
72
Keshub Mahindra
680
Mahindra & Mahindra
Mumbai
73
Devendra Kumar Jain
670
Gujarat Flouro Chemicals
Delhi
74
S.D. Shibulal
650
Infosys
Bangalore
74
Shishir Bajaj
650
Bajaj Corp
Mumbai
76
Kiran Mazumdar-Shaw
640
Biocon
Bangalore
77
Mofatraj Munot
630
Kalpataru Group
Mumbai
78
Sanjiv Goenka
610
CESC
Kolkata
78
T.T. Jagannathan
610
TTK Prestige
Bangalore
80
Radhe Shyam Goenka
580
Emami Ltd
Kolkata
80
Radhe Shyam Agarwal
580
Emami Ltd
Kolkata
80
Irfan Razack
580
Prestige Estate Projects
Bangalore
83
Vivek Chaand Sehgal
570
Motherson Sumi System
Delhi
84
Harsh Goenka
560
RPG Group
Mumbai
84
Ramesh Agarwal
560
Dainik Bhaskar
Bhopal
84
Prathap Reddy
560
Apollo Hospitals
Chennai
87
Virendra Mhaiskar
550
IRB Infrastructure Developers
Mumbai
88
Naresh Goyal
490
Jet Airways
London
88
Shobhana Bhartia
490
Hindustan Times
Delhi
90
Ramesh Chandra
480
Unitech
Delhi
91
Ramesh Genomal & family
440
Page Industries
Bangalore
92
Bhadresh Shah
400
AIA Engineering
Ahmedabad
93
PNC Menon
390
Sobha Developers
Bangalore
93
PV Ramaprasad Reddy
390
Aurobindo Pharma
Hyderabad
95
Tulsi Tanti
380
Suzlon
Pune
95
L. Madhusudan Rao
380
Lanco Infratech
Delhi
97
Kishore Biyani
370
Pantaloon retail
Mumbai
98
Rana Kapoor
340
Yes bank
Mumbai
99
Prithvi Raj Singh Oberoi
330
East India Hotels
Delhi
99
Atul Ruia
330
Phoenix Mills Ltd
Mumbai

Geographical spread

Rank
Geography
Number of indiv.
Richest Person
1
Mumbai
36
Mukesh Ambani
2
Delhi
22
Kushal Pal Singh
3
Bangalore
15
Azim Premji
4
Ahmedabad
5
Gautam Adani
4
Pune
5
Rahul Bajaj
6
Kolkata
4
Benu Gopal Bangur
7
London
3
Lakshmi Narayan Mittal
7
Chennai
3
Kalanithi Maran
7
Hyderabad
3
Murali Divi
10
Dubai
1
Micky Jagtiani
10
Gurgaon
1
Kapil & Rahul Bhatia
10
Singapore
1
Bhupendra Kumar Modi
10
Bhopal
1
Ramesh Agarwal

Wealth Allocation by Sector

Rank
Sector
No. of indiv.
Richest Individual
1
Manufacturing
17
Kumara Mangalam Birla
2
Pharmaceuticals
12
Dilip Shanghvi
3
Real estate
10
Kushal Pal Singh
4
Infrastructure
8
Anil Ambani
5
Energy
7
Mukesh Ambani
5
Technology
7
Azim Premji
7
FMCG
6
Adi Godrej
8
Media & Entertainment
5
Subhash Chandra
9
Automobile
4
Brijmohan Lall Munjal & Family
9
Retail
4
Micky Jagtiani
11
Financial services
3
Malvinder & Shivinder
11
Services
3
Habil Khorakiwala
11
Steel
3
Lakshmi Narayan Mittal
14
Aviation
2
Kapil & Rahul Bhatia
14
Banking
2
Uday Kotak
14
Food & Beverages
2
Shyam & Hari Bhartia
14
Investments
2
Hemendra Kothari
14
Telecom
2
Sunil Mittal
19
Engineering & Construction
1
Pallonji Mistry

நன்றி: www.hurun.net
More than a Blog Aggregator

சனி, 13 அக்டோபர், 2012

இந்தியாவின் டாப் 100 பணக்காரர்களின் புதிய பட்டியல்!



உலகப்பிரசித்தி பெற்ற சீனாவை சேர்ந்த Hurun  நிறுவனம் இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. செப்டம்பர்,22 ,2012  அன்றைய சொத்து மதிப்பினை அடிப்படையாக கொண்டு இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. (அதாவது செப்டம்பர்,22 ,2012   அன்று அமெரிக்கன் டாலருக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.54/-  எனபது அடிப்படை அளவீடாகும்) அவற்றுள் முதல் 10 இடங்களை பிடித்த பணக்காரர்கள் பட்டியல் இதோ!

1) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி $19.3 பில்லியன் சொத்துக்களோடு முதலிடத்தை பிடித்துள்ளார்.
2) இரண்டாவது இடத்தை ஸ்டீல் நிறுவன தொழிலதிபர் L N  மிட்டல் வகிக்கிறார். இவரின் சொத்து மதிப்பு $16.9 பில்லியன்.
3) விப்ரோ நிறுவன தலைவர் அசிம் ப்ரேம்ஜி (USD 12.3 பில்லியன்)
4)சன் பார்மாசுடிகல்ஸ் (Sun  Pharmaceuticals) நிறுவன தலைவர்                திலிப் சங்கவி  (USD 8.5 பில்லியன்)
5) Shapoorji Pallonji & Co நிறுவன தலைவர் பலோன்ஜி மிஸ்ட்ரி (USD        7.9 பில்லியன்)
6) எஸ்ஸார் எனர்ஜி நிறுவன தலைவர் ஷாஷி மற்றும் ரவி ரூயா (USD 7.2 பில்லியன்)
7) கோத்ரேஜ் நிறுவன அதிபர் ஆதி கோத்ரேஜ் ( USD 6.9 பில்லியன்).
8) DLF நிறுவன அதிபர் குஷால் பால் சிங் (USD 6.3 பில்லியன்),
9)கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் (Grasim Industries) அதிபர் குமார மங்களம் பிர்லா(USD 5.8 பில்லியன்),
10)பத்தாவது இடத்தை இருவர் வகிக்கின்றனர். HCL  நிறுவன அதிபர் ஷிவ் நாடார் மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவன அதிபர் சுனில் மிட்டல். இருவரின் சொத்து மதிப்பும் தலா $ 5.7 பில்லியன்  ஆகும் 

டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் ஆண்களே பெரும்பான்மையாக இடம்பிடித்துள்ளனர். பெண்கள் வெறும் 5% மட்டுமே இடம்பிடித்துள்ளனர். அதாவது வெறும் 5 பெண்களே இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அவர்களுள் சாவித்திரி ஜிண்டால்  $ 5.6 பில்லியன் சொத்து மதிப்புகளோடு முதலிடத்தை வகிக்கிறார். இரண்டாம் இடத்தை பென்னட் கோல்மன் நிறுவன அதிபர் இந்து ஜெயின் $1.7 பில்லியன் சொத்து மதிப்புகளோடு வகிக்கிறார். மூன்றாம் இடத்தை தெர்மாக்ஸ் நிறுவன தலைவர் அனு ஆகா  $690 மில்லியன் சொத்துக்களோடு வகிக்கிறார். பயோகான் நிறுவன தலைவர் கிரண் மசும்தார் ஷா ($600 மில்லியன்) நான்காம் இடத்தையும், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நிறுவன அதிபர் ஷோபனா பார்தியா($490 மில்லியன்) ஐந்தாம் இடத்தையும் பெறுகின்றனர். 

2012 –ஆம் ஆண்டில் சொத்து மதிப்பு இறங்குமுகத்தில் உள்ளவர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, L N மிட்டல், ஷாஷி ரூயா மற்றும் ரவி ரூயா, குமாரமங்கலம் பிர்லாவின் நிறுவனம் ஹின்டால்கோ மற்றும் சுனில் மிட்டல் ஆகியோர் உள்ளனர். 

2012 –ஆம் ஆண்டில் சொத்து மதிப்பு ஏறுமுகத்தில் உள்ளவர்கள் பட்டியலில்  அசிம் பிரேம்ஜி, திலிப் சிங்வி, பலோன்ஜி மிஸ்ட்ரி மற்றும் ஷிவ் நாடார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்களுள் 62% பேர் சுயமாக வளர்ச்சியடைந்து (வாரிசு அடிப்படையில் இல்லாமல்) பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள் எனபது குறிப்பிடத்தக்கது. சுயமாக வளர்ச்சியடைந்த தொழிலதிபர்களுள்  ஒரே ஒரு பெண் தொழிலதிபர் கிரண் மசும்தார் ஷா மட்டுமே இடம்பிடித்துள்ளார்.

டாப் 100 பணக்காரர்களில் 36 பேர் மும்பை நகரை சேர்ந்தவர்கள். 22 பேர் டெல்லியை சேர்ந்தவர்கள் மற்றும்  15 பேர் பெங்களூர் நகரை  சேர்ந்தவர்கள். 5 பேர் வெளிநாடு வாழ் இந்தியர்கள். அவர்களில் ஸ்டீல் தொழிலதிபர் L N மிட்டல் முதன்மையானவராக திகழ்கிறார். பட்டியலில் மிக வயது குறைந்தவராக ஷிவிந்தர் மோகன்சிங் (37 வயது) இருக்கிறார். அதிக வயதானவராக கேசுப் மஹிந்திரா (89 வயது) இருக்கிறார். டாப் 100 பட்டியலின் சராசரி வயது 62. டாப் 10 பட்டியலின் சராசரி வயது 65.
எனவே இதிலிருந்து நமக்கு உணர்த்தப்படும் நீதி என்னவென்றால் இந்தியா பணக்கார நாடாகிவிட்டது என்பதாகும்!.
More than a Blog Aggregator

வியாழன், 11 அக்டோபர், 2012

2004-ல் சோனியா பிரதமர் ஆவதை தடுத்தது யார்!?



2004 –ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியை ஆட்சி அமைக்க ஜனாதிபதி கலாம் அழைப்பு விடுத்தார். சோனியா காந்திதான் அடுத்த பிரதமர் என்று அனைவரும் உறுதியாக நம்பினார். சோனியாவும் தான்தான் அடுத்த பிரதமர் என்று நம்பினார். ஆனால் அவர் கலாமை சந்தித்துவிட்டு வந்தபின் அனைத்தும் தலைகீழாக மாறியது. மன்மோகன் சிங் பிரதமராக அறிவிக்கப்பட்டார்.  சோனியா காந்தி பிரதமர் ஆவதை தடுத்தது எது?. அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் எடுத்த முடிவுதான் சோனியாவின் பிரதமர் பதவி ஆசைக்கு தடையாக இருந்தது எனபது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் கலாம் அப்படி ஒரு முடிவெடுக்க எது காரணமாக இருந்தது?. சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் சோனியா பிரதமர் ஆவதை தான் ஒருபோதும் தடுக்கவில்லை என்று கலாம் கூறியிருந்தார். அப்படியானால் அன்று ஆட்சி அமைக்க சோனியாவை ஏன் கலாம் அழைக்கவில்லை?. அந்த ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.

ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி ஜனாதிபதிக்கு எழுதிய ஒரு கடிதமே, 2004-ல்  கலாம்  பிரதமர் பதவிக்கு சோனியாவை நிராகரித்ததற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது. அக்கடிதத்தின் விளைவாகவே  ஆட்சி அமைக்க சோனியாவை கலாம் அழைக்கவில்லை என்ற உண்மை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தற்போது தெரியவந்துள்ளது.

டெல்லியை சேர்ந்த சுபாஷ் அகர்வால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் 2004 – ல் மத்தியில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்திற்கும், மற்றவர்களுக்கும் இடையே நடந்த கடிதப் போக்குவரத்து மற்றும் கோப்பு தொடர்பான தகவல்களை ஜனாதிபதி அலுவலகத்தில் கேட்டார். 

இதற்கான பதிலை ஏப்ரல், 26, 2012 அன்று ஜனாதிபதி அலுவலகம் அளித்தது. அதில் 2004 – ல் மன்மோகன் சிங் ஆட்சி அமைக்க அழைக்கப்படுவதற்கு முன்பாக சுப்ரமண்யம் சுவாமி ஜனாதிபதி கலாமிற்கு ஒரு ரகசிய கடிதம் எழுதியதாகவும், அக்கடிதத்தின் அடிப்படையிலேயே கலாம் யாரை ஆட்சி அமைக்க அழைக்கலாம் என்ற முடிவை Article 75 – ன்படி எடுத்தார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சுவாமி எழுதிய கடிதத்தின் நகலை  மனுதாரர் அகர்வாலுக்கு வழங்கமுடியாது என்றும், அது தகவல் அறியும் சட்டம் பிரிவு  8(1) (e) – க்கு எதிரானது என்றும் மேலும் தெரிவித்தது.  ஆயினும் தலைமை பொது தகவல் மேலாளர் (chief public information officer) தனது பதிலில் அப்போதைய ஜனாதிபதி கலாம், சுவாமி எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே பிரதமர் பதவிக்கு சோனியாவை நிராகரித்தார் என்று ஒத்துக்கொண்டது மிகப் பெரும் பரபரப்பை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ளது.

அக்கடிதத்தில் அப்படி என்னதான் சுவாமி எழுதியிருந்தார்? RTI Act, section 11 – ன்படி சுவாமியின் ஒப்புதல் பெற்று அக்கடிதத்தை ஜனாதிபதி அலுவலகம் வெளியிடமுடியும். ஆனால் ஜனாதிபதி அலுவலகம் இதுதொடர்பாக சுவாமியின்  கருத்தை கேட்கவில்லை. ஆனாலும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அநேக பத்திரிக்கைகளில் பேட்டிகள் வாயிலாக ஏற்கனவே சுவாமியால் வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது. இதுபற்றி சுப்பிரமணிய சுவாமி தெரிவிக்கையில் UPA கூட்டணி ஆட்சி அமைக்கும் முன் தான் ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி Citizenship Act விதிகளின்படி பிரதமராக பதவி ஏற்க முடியாது என்றும், அவ்வாறு ஜனாதிபதி  ஆட்சி அமைக்க சோனியாவை அழைத்தால், அதனை தான் நீதிமன்றத்தில் எதிர்க்கப்போவதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்ததாக அவர் உறுதிப்படுத்தினார். எனவே இதனை அடுத்தே சோனியாவை பிரதமராக ஏற்க கலாம் மறுத்துவிட்டார் என்பது நமக்கு புலனாகிறது. சுவாமியே கடிதத்தில் உள்ள தகவல்களை வெளியிட்டபின், ஜனாதிபதி அலுவலகம் இன்னும் அக்கடிதத்தை ரகசிய ஆவணம் என்று சொல்லிவருவது நல்லநகைச்சுவைதான்!

சுப்ரமண்யம் சுவாமியை அரசியல் கோமாளி என்று அவருடைய அரசியல் எதிரிகள் விமர்சிப்பதுண்டு. ஆனால் சுவாமியின் அரசியல் நடவடிக்கைகள் இந்திய அரசியலில் மிகப் பெரிய விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது. பிஜேபி அரசு கவிழ்ப்பு, 2G ஊழல் போன்றவை அவற்றுள்  சில. இப்போது சோனியாவின் பிரதமர் பதவி ஆசை கனவாகிப்போனதற்கும் சுவாமிதான் காரணம் எனபது அவரது சாதனையில் மற்றொரு மைல் கல்!

More than a Blog Aggregator

செவ்வாய், 9 அக்டோபர், 2012

சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் -ஒரு பார்வை!

நேருவுடன் கிருஷ்ண மேனன்
ஊழல்கள் கொழிக்கும் நாடாக இன்று இந்தியா திகழ்கிறது. ஆனால் இந்தியாவில் ஊழல்கள் வெளிவரும் வேகத்திலேயே அதன் பரபரப்பும் உடனே அடங்கிவிடுகிறது. ஒரு ஊழல் அல்லது இரண்டு ஊழல என்றால் நினைவில் வைத்துக்கொள்ளலாம். நாளுக்கு ஒரு  ஊழல், 1.86 லட்சம் கோடி, 3 லட்சம் கோடி ஊழல் என்றால் இந்திய குடிமகனால் அனைத்தையும் எப்படி நினைவில் வைத்துகொள்ளமுடியும்.ஆனாலும் எந்த நேர்விலும்  முதல் தடவை என்பதற்கு ஒரு மதிப்பு உண்டு. உதாரணமாக கல்லூரியில் முதல் நாள், முதல் காதல், முதலிரவு, etc என்பது போல. அதுபோல சுதந்திர இந்தியாவின் ஊழல் வரலாற்றில் முதல் ஊழல் எது என்று அறிய நமக்கெல்லாம் ஒரு ஆவல் இருக்கும். அந்த பெருமையை  1948 –ல் நடந்த  ராணுவ ஜீப் ஊழல் தட்டிச்செல்கிறது.

அப்போது பிரிட்டனின் இந்திய ஹைகமிஷனராக பணிபுரிந்த  V.K. கிருஷ்ண மேனன் விதிமுறைகளை மீறி ராணுவத்திற்கு ஜீப் வாங்கும் எண்பது லட்ச ரூபாய்க்கான ஒப்பந்தத்தில் வெளிநாட்டு நிறுவனத்துடன் கையேழுத்திட்டார்.  அப்போது இந்திய ராணுவத்திற்கு 4603 ஜீப்கள் தேவைப்பட்டது. எண்பது லட்ச ரூபாய்க்கு 1500 ஜீப்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்திற்கு பின் ஒன்பது மாதங்களாகியும் ஜீப்கள் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனம் ஜீப்களை ஒப்படைக்கும் முன்பே மொத்த பணத்தின் பெரும் பகுதி அந்த  நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 1949 – ல் 155 ஜீப்கள் மட்டும் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போதைய பிரதமர் அவற்றினை இந்திய ராணுவம் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தித்தினார்.

இந்த ஊழலைப் பற்றி விசாரிக்க நேரு அரசினால் அனந்தசயனம் ஐயங்கார் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரனை கமிஷன் தனது விசாரணை அறிக்கையில் நீதிமன்ற விசாரணைக்கு சிபாரிசு செய்தது. எதிர்கட்சிகளும் நீதிமன்ற விசாரணையை கோரினர். ஆனால் நேரு நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த் பல்லாப் பந்த்  செப்டம்பர் 30, 1955 – ல் ஒரு அறிக்கையினை வெளியிட்டார். அதன்படி ஜீப் ஊழல் வழக்கு முடிக்கப்படுவதாகவும், எதிர்கட்சிகள் திருப்தி அடையாவிட்டால்  இப்பிரச்சினையை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். 

இச்சம்பவத்தில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் V.K. கிருஷ்ண மேனன் பிப்ரவரி  3,1956  அன்று நேருவின் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். பின்னாளில் நேருவின் நம்பிக்கைக்கு உரிய நண்பராக  V.K. கிருஷ்ண மேனன் உருவானார். இதில் வேதனையான விஷயம், பின்னாளில் இதே V.K. கிருஷ்ண மேனனை பாதுகாப்பு துறை அமைச்சராகவும் நேரு நியமித்தார்.

மேற்கண்ட சம்பவத்திலிருந்து நமக்கு ஒரு படிப்பினை கிடைக்கிறது. ஊழல் என்பது காங்கிரசின் இரத்தத்தில் ஊறியது. ஊழல் செய்தவர்களுக்கு மேலும் பதவிகளை கொடுத்து உற்சாகப்படுத்தும் கட்சி காங்கிரஸ். மக்களின் எண்ணங்களுக்கு சற்றும் மரியாதை அளிக்காத கட்சி காங்கிரஸ். 1948 – ல் தொடங்கிய காங்கிரசின் இந்த ஊழல் ஸ்டைல்   2012 – லும் மாறவில்லை. 2G ஊழலில் சிக்கிய ராஜா, கனிமொழி, காமன்வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடி ஆகியோரை Parliamentary Standing Committee உறுப்பினர்களாக தற்போது நியமித்துள்ள  மன்மோகன் அரசின் நடவடிக்கையை இதற்கு உதாரணமாக கூறலாம். வரலாறு எவ்வளவு முக்கியம் என்று இப்போது நமக்கு புரிகிறது.
More than a Blog Aggregator

வெள்ளி, 5 அக்டோபர், 2012

பாகிஸ்தானை அதிர வைக்கும் காதல் கதை - பின்னனியில் ISI சதி!



பாகிஸ்தான் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இன்று பரபரப்பாக பேசப்படும் காதல் கதை ஹினா ரப்பானி கர் மற்றும் பிலவால் புட்டோ  சர்தாரி ஜோடியினதுதான். ஹினா பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர். 34 வயது. திருமணமானவர். இரண்டு குழந்தைகளுக்கு தாய். கணவர் மிக பெரிய கோடீஸ்வரர். பிலவால்  பாகிஸ்தான் அதிபர் சர்தாரி - பெனாசிர் புட்டோ ஆகியோரின்  24 வயது வாரிசு. பாகிஸ்தானின் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சார்ந்தவர். கடந்த வாரம் பங்களாதேஷ் வார பத்திரிக்கை Blitz, ஹினா, பிலவால் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும் , இருவரும் திருமணம் செய்ய விரும்புவதாகவும், இருவரும் தொலைபேசியில் அடிக்கடி பேசிக்கொள்வதாகவும், வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொள்வதாகவும் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது.
Bilawal and Hina
 சர்தாரி இருவரின் காதலுக்கும் கடும் எதிர்ப்பை தெரிவித்ததாகவும், இருவரின் தொலைபேசி உரையாடல்கள் பற்றிய விவரங்களை உளவு நிறுவனங்களிடம் கேட்டுள்ளதாகவும் அப்பத்திரிகை மேலும்  தெரிவித்தது. ஹினாவும் அவரது கணவரும் பத்திரிக்கை செய்தியை மறுத்தனர். மேற்கண்ட  செய்தி பொய்யானவை என்றும், குப்பை என்றும் வர்ணித்தனர். 

இதற்கிடையே தி டெய்லி டெலிகிராப் பத்திரிக்கை Blitz பத்திரிக்கை செய்தியின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான Inter-Services Intelligence (ISI)  - யின் சதித்திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பெயர் வெளியிட விரும்பாத முக்கிய தலைவர்களின் கருத்தினை அடிப்படையாக கொண்டு மேற்கண்ட தகவல்களை டெலிகிராப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. 

பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான  மக்கள் காணாமல் போனது பற்றி விசாரிக்க  ஐ.நா விசாரணை குழுவிற்கு ஹினா ஒப்புதல் அளித்ததாகவும், அதனால் ISI  ஹினா மீது கடும் கோபம கொண்டுள்ளதாகவும், எனவே ஹினாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இத்தகைய வதந்தியை ISI பரப்பி உள்ளதாகவும் டெலிகிராப் மேலும் தெரிவித்துள்ளது. United Nations’ Working Group on Enforced and Involuntary Disappearances குழு தனது விசாரணையில் பாகிஸ்தான் ராணுவத்தின் சில அதிகாரிகளையும், சில ISI அதிகாரிகளையும் அவர்களுடைய சட்ட விரோத செயல்களுக்காக தண்டிக்க அரசுக்கு சிபாரிசு செய்யும் என ISI எதிர்பார்க்கிறது என்றும், அதனால் ஹினாவின் இந்த முடிவு குறித்து கடும் அதிருப்தி கொண்டுள்ளதாகவும் மேலும் ஒரு C பாகிஸ்தான் மக்கள் கட்சியின்  (PPP) உறுப்பினர் டெலிகிராப் பதிரிக்கையிடம் தெரிவித்தார். ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பாகிஸ்தான் அரசு பதில் அளிக்கவில்லை.

ஹினாவுக்கும், ISI – கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக வெளிவந்த செய்தியை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. Inter-Services Public Relations (ISPR) வெளியிட்ட அறிக்கையில் ISI மீதான டெலிகிராப் பத்திரிக்கையின் குற்றச்சாட்டு தவறானது; அடிப்படையற்றது என்று தெரிவித்துள்ளது. நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டை பலவீனப்படுத்த விரும்பும் அன்னிய சக்திகளால் இத்தகைய வதந்திகள் பரப்பப்படுகின்றன என்றும், செய்திகளை வெளியிடும் முன் டெலிக்ராப் பத்திரிக்கை செய்தியின் உண்மைத் தன்மை குறித்து உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும், பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்றும், ஆதாரமில்லாமல் செய்திகளை வெளியிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்பட நேரிடும் என்றும் ISPR தெரிவித்துள்ளது.

இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது  ஹினா – பிலவால் காதல் பற்றியது அல்ல. அச்செய்தி உண்மையாகவும் இருக்கலாம். வதந்தியாகவும் இருக்கலாம். உண்மையாக இருந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அவர்களின் நாட்டு சட்ட விதிகளின்படி அவர்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்க உரிமை உண்டு. இச்செய்தியை நான் இங்கு பதிவு செய்ய ஒரு முக்கிய  காரணம் உண்டு. தனி மனிதனாகட்டும், அல்லது அலுவலகமாகட்டும், அல்லது குடும்பமாகட்டும், அல்லது தேசமாகட்டும் ஒரு பெண்ணை பழிவாங்க வேண்டுமானால் நாம் எடுக்கும் ஆயுதம் அவளின் ஒழுக்க நடத்தையை பற்றி வதந்தியை கிளப்புவதாகவே இருக்கிறது.
More than a Blog Aggregator