செவ்வாய், 18 செப்டம்பர், 2012

1971:இந்திய-பாகிஸ்தான் போர்: பாகிஸ்தானுக்கு போர் உதவி அளித்த இலங்கை!

இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என இந்திய அரசின் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு நட்பு நாடா? என்பதை அவ்விரு நாடுகளுக்கிடையேயான  கடந்த கால வரலாற்று நிகழ்வுகளை வைத்தே கணிக்க முடியும்.
 
1971 இந்திய பாகிஸ்தான் போரின் போது  இலங்கை பாகிஸ்தானுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. பாகிஸ்தான் ராணுவம் தனது தளவாடங்களை மேற்கு பாகிஸ்தானிலிருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு (தற்போது பங்களாதேஷ்) கொண்டு செல்ல இலங்கை பெரும் உதவி செய்தது. மேலும் பாகிஸ்தான் போர் விமானங்கள் தனது பண்டாரநாயக விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்ப இலங்கை அனுமதி வழங்கியது. ஏனென்றால் பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான் எல்லையில் பறக்க முடியாததால், எரிபொருள் நிரப்ப இலங்கையின் உதவி அவர்களுக்கு கண்டிப்பாக தேவைபட்டது. இல்லாவிடில் அவர்கள் பங்களாதேஷை அடைய முடியாத சூழ்நிலை இருந்தது. இவ்வாறு இந்தியாவுடன் போர் புரிந்த ஒரு நாட்டிற்கு தளவாட உதவிகளும், அரசியல் ஆதரவும் அளித்த இலங்கை எப்படி இந்தியாவின் நட்பு நாடாக இருக்க முடியும்?. கடந்த ஆண்டு கொழும்பில்  நடந்த Lanka-Pakistan business council  - கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் ஹைகமிஷனர் சீமா இலாஹி பலூக் (Seema Ilahi Baloch) 1971 இந்திய பாகிஸ்தான் போரின் போது  இலங்கை பாகிஸ்தானுக்கு அளித்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் போர் விமானங்கள் எரிபொருள் நிரப்ப அனுமதி,  தளவாட மற்றும் அரசியல் ரீதியான ஆதரவு போன்ற இலங்கையின் உதவிகளை பாகிஸ்தானியர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்று மேலும்  அவர் கூறினார். இதனை இந்திய மத்திய அமைச்சர்கள் யாராவது மறுக்க முடியுமா?. கண்டிப்பாக முடியாது. அப்படியானால் இலங்கை எப்படி இந்தியாவின் நட்பு நாடாக இருக்க முடியும்?

1971 போரில் இலங்கையின் பாகிஸ்தான் ஆதரவு போக்கினால் கடும் அதிருப்தி அடைந்த இந்திரா காந்தி இலங்கையை வழிக்கு கொண்டு வர RAW -வின் மூலம்  விடுதலைப்புலிகளுக்கு பயிற்சியினையும், பணத்தையும் அளித்து தனது முழு ஆதரவை வழங்கினார் என்றொரு வாதமும் உண்டு.

சீனாவை காரணம் காட்டி, இந்தியாவை மிரட்டி தனக்கு தேவையான காரியங்களை சாதித்துக் கொள்ளும் இலங்கையின் ராஜ தந்திரம் முன் இந்தியாவின் ராஜா தந்திரம் தோற்றுவிட்டதுதான் உண்மை. உதாரணமாக திரிகோணமலை, சம்பூரில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் உதவியுடன் அணு உலை நிறுவும் திட்டத்தினை இலங்கை அரசு உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இலங்கையில் அதிகரிக்கும் சீனா  மற்றும் பாகிஸ்தானின் ஆதிக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறப் போவது உண்மை. இனி இதற்கு பதிலாக இந்தியாவே ஒரு அணு உலையை இலங்கைக்கு நிர்மாணித்து தந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்த பின் இலங்கை வெளியுறவு துறை துணை அமைச்சர் ஹுசைன் A . பைலா (Hussein A. Bhaila) பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில், இலங்கை அரசும், மக்களும்  பாகிஸ்தானையே இலங்கையின் உண்மையான நட்பு நாடு என்று  கருதுகிறார்கள்  என்று கூறியதை நாம் இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும். 

சிங்கள ராணுவம் இதுவரை 550 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சித்திரவதை செய்து கொலை செய்திருக்கிறது.  இந்தியாவின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் கூட எல்லை கடந்து செல்லும் இந்திய மீனவர்களை கைது மட்டுமே செய்கிறது. ஆனால் இந்தியாவின் நட்பு நாடாக காங்கிரஸ் அரசால் கருதப்படும் இலங்கை, இந்தியாவின் 550 க்கும் மேற்பட்ட மீனவ குடிமக்களை கொன்றிருக்கிறது. ஒருவேளை தமிழ் நாட்டு மீனவர்கள் இந்திய குடிமக்கள் இல்லையோ!?. தனது நாட்டின் ஒரு குடிமகனுக்கு ஆபத்து என்றால் கூட போர் கப்பல்களை அனுப்பும் அமெரிக்க அரசின் பொறுப்புணர்ச்சியில் 1/550 பங்கு கூட இந்தியாவுக்கு இல்லையே!?. அதைக்கூட விட்டு விடலாம். ஆனால் தன்  நாட்டின் அப்பாவி குடிமக்களை கொலை செய்யும்  ஒரு  நாட்டினை நட்பு நாடு என்று கூறுவது எப்படி நியாயம்?.

வரலாற்றை திரும்பிப் பார்ப்போமானால் எப்போதுமே இலங்கை இந்தியாவின் எதிரி நாடுகளோடு நட்பு பாராட்டி வரும் ஒரு நாடாகவே  இருந்து வருகிறது. நாளையே பாகிஸ்தான் அல்லது சீனா, இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்நாடுகளுக்கு இலங்கை அனைத்து உதவிகளையும் செய்யும் என்பதுதான் நிதர்சனம். எனவே இலங்கை ஒருபோதும் இந்தியாவின் நட்பு நாடாக இருக்க முடியாது என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில்  இலங்கையை தனது வழிக்கு கொண்டு வரும் துருப்பு சீட்டு இப்போது இந்தியாவின் கையில் இல்லை என்பதே உண்மை.
More than a Blog Aggregator

திங்கள், 17 செப்டம்பர், 2012

அல் ஜசீரா டிவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்! - ஒரு பார்வை.

யாசர் அராபத், Palestine Liberation Organization (PLO) அமைப்பின் தலைவர்.  பாலஸ்தீன மக்களின் அன்புக்குரிய தலைவர். தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் கழித்தவர். பாலஸ்தீன மக்களை பொருத்தவரை விடுதலை போராட்ட வீரர். ஆனால் இஸ்ரேலை பொருத்தவரை அவர் ஒரு தீவிரவாதி. அவர் 11-11-2004 அன்று மரணமடைந்தார். அவர் இரத்தம் உறைதல் பாதிப்பால் (Disseminated Intravascular Coagulation or DIC) பிரான்சில் இயற்கை மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது அல் ஜசீரா தொலைக் காட்சி அறிவித்துள்ளது. இது பற்றிய உண்மைகளை அறிய சட்டப்பூர்வமான  விசாரணைக்கு  பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

அராபத்தின் மனைவி சுஹா கூறுகையில் அக்டோபர் 12, 2004 அன்று அராபத் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும்,  வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்ட அவர், அதன் பின் வயிற்று வலியால் மேலும் சோர்வடைந்ததாக தெரிவிக்கிறார். உடல் நிலைமை மேலும் மோசமடையவே அவர் பாலஸ்தீனத்தின் ரமல்லா நகரில் இருந்து பாரிசில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் 11-11-2004 அன்று மரணமடைந்தார். அவர் மரணத்தில் மர்மம உள்ளதாக அவர் இறந்தது முதல் பல்வேறு தரப்பில் கூறப்பட்டு வந்தது. யாசர் அராபத் கொலை செய்யப்பட்டிருக்கலாம்  என்ற  வாதத்திற்கான  ஆதாரங்களை  எட்டு வருடங்களுக்கு பிறகு அல் ஜசீரா தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

அல் ஜசீரா தொலைக்காட்சி  அராபத்தின் மனைவி சுஹாவிடம் அராபத் கடைசியாக பயன்படுத்திய  பொருட்களை  பெற்று சுவிட்சர்லாந்தில் உள்ள Institute of Radiation Physics என்ற பரிசோதனை கூடத்திற்கு அனுப்பியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனம் தனது பரிசோதனையின் முடிவை வெளியிட்டது. அவ்வறிக்கையில்  அராபத் உள்ளாடை, டூத் பிரஷ் மற்றும் தொப்பியில் பொலொனியம்-210 கதிர்வீச்சு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இம்முடிவு இறுதியானது அல்ல என்றும், அராபத்தின் எலும்பு சோதனை செய்யப்பட்ட பிறகே இம்முடிவை உறுதி செய்ய இயலும் என்றும்  அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

பொலொனியம்-210 என்ற கதிர்வீச்சு தனிமத்தின் பெயரை நீங்கள் ஏற்கனவே கேள்விபட்டிருக்கலாம். 2006, நவம்பரில் ரஷிய அரசினை கடுமையாக விமர்சித்த முன்னாள் ரஷிய உளவாளி அலெக்சாந்தர் லித்விநெங்கொ (Alexander Litvinenko) திடீரென உடல் நலம் குன்றி லண்டன் மருத்துவமனையில் இறந்து போனார். பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் பொலொனியம்-210 கதிர்வீச்சு அதிக சக்தியுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொலொனியம்-210 கதிர்வீச்சினால் கொலை செய்யப்பட முதல் நபர் அவர்தான். பொலொனியம் தனிமத்தின் ஐசோடோப்பான பொலொனியம் -210 மேரி கியூரி என்ற பெண் விஞ்ஞானியால்  19- ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது அதிக அணுக்கதிர்வீச்சினை உடையது. இதன் கதிர்வீச்சின் பாதிப்பு ஒரு இடத்தில் இருப்பதை நாம் சாதாரண நிலையில் கண்டுபிடிக்க முடியாது. அது மணம், நிறம் போன்ற எந்த குணங்களும் அற்றது. 0.1 மைக்ரோ கிராம் அளவு தனிமம் உடலுக்குள் சென்றாலே அது உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியது. இத்தனிமத்தின் கதிர்வீச்சு மனித தோலினை கடந்து செல்ல இயலாது. குறிப்பிடத்தக்க அளவு தனிமம் உடலுக்குள் சென்றால் மட்டுமே மரணத்தை ஏற்படுத்தும். உதாரணமாக இத்தனிமத்தின் கதிர்வீச்சு  உண்பது மூலமாகவோ, அல்லது சுவாசிப்பது மூலமாகவோ உடலுக்குள் செல்ல முடியும். நமது சுற்றுப்புறத்திலும் குறைந்த அளவு இத்தனிமம் உள்ளது.

இதனை அடுத்து சுஹா தன கணவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.. ஆனாலும் தன் புகாரில் அவர் யார் மேலும் சந்தேகம் தெரிவிக்கவில்லை. தற்போது விசாரணையை தொடங்கியுள்ள பிரான்ஸ் அதிகாரிகள் அராபத்தின் உடல் மீண்டும் பரிசோதனை செய்யப்படும் என அறிவித்துள்ளனர். பாலஸ்தீன அதிகாரிகள் உடலை தோண்டி எடுக்க அனுமதியை சென்ற மாதம் வழங்கியுள்ளனர். ஆனால் அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பொலொனியம் -210 தனிமத்தின் அரை ஆயுட்காலம் 138 நாட்கள் மட்டுமே. அதாவது அத்ததனிமம்  விரைவில் அழிந்துவிடக்கூடியது. எனவே விரைவில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மைகளை வெளிக்கொணர முடியும். தாமதித்தால் அவர் உடலில் உள்ள கதிர்வீச்சு தடயங்கள் அழியக்கூடும். அராபத்தின்  உடல் அவர் இறுதி நாட்களை கழித்த முசொலியம் (mausoleum) என்னும் அரசுக்குரிய  இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது. அங்குதான் அவர் கடைசி மூன்று ஆண்டுகளாக இஸ்ரேலிய அரசால் வீட்டு சிறை வைக்கப்பட்டிருந்தார். 
 
அராபத் கொலை செய்யப்பட்டிருந்தால் அவர் யாரால் கொலை செய்யப்பட்டிருப்பார்?. அனைவரும் இஸ்ரேலை சந்தேகிப்பது நியாயம்தான்.  ஏனென்றால் பொலொனியம்-210 எளிதில் கிடைப்பதில்லை. ஒரு சில நாடுகளால் மட்டுமே இத்தனிமத்தை தயாரிக்க முடியும். அணு உலை இருந்தால் மட்டுமே அதனை தயாரிக்க முடியும். இஸ்ரேல் அத்தனிமத்தை இருப்பு வைத்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளிவந்துள்ளன.  2002 ல் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷெரோன் இஸ்ரேலிய பத்திரிகை  Ma'ariv க்கு அளித்த பேட்டியில் 1982 ல் இஸ்ரேலிய படைகள் தெற்கு லெபனானை கைப்பற்றிய போது யாசர் அராபத்தை கொலை செய்யாததற்கு தான் இப்போது வருத்தப்படுவதாக தெரிவித்தார். 2003 ல்  அப்போதைய இஸ்ரேல் துணை பிரதமர் ஈஹுட் ஆல்மேர்ட்,  அராபத்தை கொலை செய்வது இஸ்ரேல்  மேற்கொள்ளப்படவேண்டடிய நடவடிக்கைகளில் ஒன்றாக உள்ளது என தெரிவித்தார். இவையெல்லாம் இஸ்ரேல் அராபத்தின் மிகப் பெரிய எதிரியாக இருந்தது என்பதை உறுதிப்படுத்துகிறது. 99.9% சதவீத பாலஸ்தீன மக்கள் யாசர் அராபத் இஸ்ரேல் உளவு அமைப்பால்  கொலை செய்யப்பட்டதாகவே நம்புகின்றனர். எனினும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை இஸ்ரேலிய அதிகாரிகள் மறுக்கிறார்கள். அராபாத்தை கொலை செய்து அவரை மிகப் பெரிய தியாகியாக்க இஸ்ரேல் எப்போதுமே விரும்பியதில்லை என்றும், அவ்வாறு கொல்ல வேண்டும் என்று இஸ்ரேல் விரும்பியிருந்தால் தீவிரவாதம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது அதனை  செய்திருக்கும் என்றும், 2004- ல் அவர் அரசியல் செல்வாக்கினை இழந்த நிலையில் அவரை கொல்ல  வேண்டிய அவசியம் இஸ்ரேலுக்கு இல்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். 
 
அதே சமயத்தில் அராபத்தின் மரணம் மீதான விசாரணை பாலஸ்தீன அதிகாரிகளுக்கும் பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. அராபத்தின் உள்ளாடைகள்  மீதான  சுவிஸ் பரிசோதனைகூட ஆதாரங்களை (பொலொனியம் -210 ) அல் ஜசீரா தொலைக்காட்சி முதன் முதலில் வெளியிட்டது. ஆனால் அராபத்தின் மரணம் குறித்து விசாரிக்க பாலஸ்தீன அரசால் அமைக்கப்பட்ட டிரவி விசாரணை கமிஷன் ஏன் இதை முதலில் கண்டுபிடிக்கவில்லை என்பது வியப்பினை தருகிறது. மேலும் அராபத்துக்கு  மிக வலுவான பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது. அவருடைய உணவு கூட மற்றொருவரால் உண்டு பரிசோதிக்கப்பட்ட பிறகே அவருக்கு வழங்கப்பட்டது. அவ்வாறு இருக்கையில் பாலஸ்தீன அதிகாரிகளின் பங்களிப்பு இல்லாமல் கொலை திட்டத்தை செயல்படுத்துவது என்பது கொலையாளிக்கு சாத்தியமில்லாதது ஆகும். பிரான்சின் விசாரணைக்கு பாலஸ்தீன அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுவதாக ஏற்கனவே சுஹா குற்றம் சாட்டியுள்ளது  இங்கு மிகவும் கவனிக்கத்தக்கது ஆகும். அராபத்தின் மரணம் பற்றிய மர்மங்களை உடைக்க பாலஸ்தீன அரசு உண்மையாக முயற்சி செய்யவில்லை என்றே பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் நம்புகின்றனர்.

விடை தெரியாத கேள்விகள் சில.
1) அராபத்தின் கல்லீரலை சோதனை (biopsy) செய்ய சுஹாஅராபத் அனுமதி மறுத்தது ஏன்?
2)  அராபத்தின் உடல் போஸ்ட்மார்டம் செய்யப்படாதது ஏன்?
3)அராபத்தின் உடலில்  பல்வேறு இடங்களில் இரத்தம் அசாதாரணமாக  உறைந்ததற்கும், அதனை தொடர்ந்த வலுவான ஸ்ட்ரோக்குக்கும்  சரியான காரணத்தை திறமை மிக்க பிரெஞ்சு மருத்துவர்கள் இதுவரை தெரிவிக்காதது ஏன்?. அராபத்தின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை மறைக்க பிரெஞ்சு அரசு முயற்சி செய்கிறதா?

அராபத்தின்  மரணம் பற்றிய விசாரணை எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. உண்மை ஒருபோதும் உறங்காது என்பது பொன்மொழி. அதற்கேற்ப அராபத் மரணத்தின் மர்மத்திரை தற்போது விலக ஆரம்பித்திருக்கிறது. அந்த திரை முழுவதும் விலகும் போது அதிர்ச்சியூட்டும் காட்சிகள் நமக்கு கிடைக்கலாம். ஏனெனில் ஒரு வெற்றிகரமான நாடகத்தின் கிளைமாக்ஸ்  எவரும் எதிர்பார்க்காத ஒன்றாகவே இருக்கும்.
More than a Blog Aggregator

யாசர் அராபத் மரணத்தில் மர்மம்! - அல் ஜசீரா டிவி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்!

3)அராபத்தின் உடலில்  பல்வேறு இடங்களில் இரத்தம் அசாதாரணமாக  உறைந்ததற்கும், அதனை தொடர்ந்த வலுவான ஸ்ட்ரோக்குக்கும்  சரியான காரணத்தை திறமை மிக்க பிரெஞ்சு மருத்துவர்கள் இதுவரை தெரிவிக்காதது ஏன்?. அராபத்தின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை மறைக்க பிரெஞ்சு அரசு முயற்சி செய்கிறதா?.

அராபத்தின்  மரணம் பற்றிய விசாரணை எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. உண்மை ஒருபோதும் உறங்காது என்பது பொன்மொழி. அதற்கேற்ப அராபத் மரணத்தின் மர்மத்திரை தற்போது விலக ஆரம்பித்திருக்கிறது. அந்த திரை முழுவதும் விலகும் போது அதிர்ச்சியூட்டும் காட்சிகள் நமக்கு கிடைக்கலாம். ஏனெனில் ஒரு வெற்றிகரமான நாடகத்தின் கிளைமாக்ஸ்  எவரும் எதிர்பார்க்காத ஒன்றாகவே இருக்கும்.
More than a Blog Aggregator

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

போபார்ஸ் ஊழலைப் போல் நிலக்கரி ஊழலும் மக்களால் மறக்கப்படும் -காங்கிரஸ் அமைச்சரின் open talk!

போதைகளில் மிகப் பெரிய போதை அதிகார போதை. அந்த போதைதான்   ஒரு அரசியல்வாதிக்கு  நம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது  என்ற ஆணவத்தை கொடுக்கிறது. எட்டு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் அரசுக்கும் தம்மை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்ற மமதை தலைக்கேறிவிட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் முதல் ஐந்தாண்டில் அமைதியாக இருந்த மத்திய அமைச்சர்கள், அடுத்த ஐந்தாண்டில் ஊழலில் புகுந்த விளையாட தொடங்கிவிட்டார்கள். அடுத்தடுத்து இமாலய ஊழல்களை செய்து உலக அளவில் பேரும் வாங்கிவிட்டார்கள். இவ்வளவு பெரிய ஊழல்களை எந்த தைரியத்தில் செய்கிறார்கள் என்று மக்களுக்கு வியப்பாக இருந்து வந்தது. ஊழலுக்காக இந்தியாவில் மிகப் பெரிய தலைவர்கள் யாரும் தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை என்பது வேறு விஷயம். சுக்ராம் போன்று அங்கொன்று, இங்கொன்றுமாக சில அரசியல்வாதிகள்  செல்வாக்கு இழந்த பிறகுதான் தண்டிக்கப்பட்டார்கள். ஆனால் உண்மையில் காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு எந்த தைரியத்தில் ஊழலை செய்கிறது என்பதை உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

நேற்று புனேயில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் போபார்ஸ் ஊழலை போன்று நிலக்கரி ஊழலையும் மக்கள் விரைவில் மறந்து விடுவார்கள் என்று தெரிவித்தார். 1984-85   ல் போபார்ஸ் ஊழல பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் விரைவில் மக்கள் அதனை மறந்து விட்டனர். அதுபோல் இப்போது நிலக்கரி ஊழல் பற்றி பேசப்படுகிறது. இதுவும் விரைவில் மக்களால் மறக்கப்படும். இந்த விஷயம் மறக்கப்பட்டவுடன் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களும் நேர்மையானவர்களாக கருதப்படுவார்கள் என்றும் மேலும் அவர் தெரிவித்தார். 

இதுவரை இலைமறைக்காயாய் இருந்த உண்மையை இப்போது மத்திய அமைச்சர் வெட்டவெளிச்சமாக்கி விட்டார். இந்த உண்மையை வெளிப்படையாய் கூறுவதற்கும் அமைச்சருக்கு ஒரு தைரியம் வேண்டும். அதிகார போதைதான் அந்த தைரியத்தை அமைச்சருக்கு தந்திருக்கக் கூடும். எப்படியோ மக்களுக்கு உண்மையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமைச்சரை பாராட்டுவோம். இந்த ஒப்புதல் வாக்குமூலத்தையும் மக்கள் மறப்பார்கள் என்ற அரசியல்வாதிகளின் நம்பிக்கையை நாம் காப்பாற்றுவோம்!
More than a Blog Aggregator

செவ்வாய், 11 செப்டம்பர், 2012

உலகின் டாப் 10 உளவு ஏஜென்ஸிகள்-இந்தியாவின் RAW -வுக்கு இடம் உண்டா!?

RAW Headquarters, New Delhi

ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு உளவு நிறுவனங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனால்தான் மன்னர் காலம் தொட்டு இக்காலம் வரை உளவு வேலைகளுக்கு அரசாங்கங்கள் முக்கியத்துவம் வழங்கி வருகின்றன 1971-ல் ஒரு இந்திய CIA ஏஜெண்டால் இந்திரா காந்தியின் போர் திட்டம் எவ்வாறு தவிடுபொடியாக்கப்பட்டது என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம். ஒரு நாட்டின் பலம் அந்த நாட்டின் உளவு ஏஜென்சி பெரும் வெற்றியின் மூலமாகவே தற்போது கணிக்கப்படுகிறது. 2011- வரை பல்வேறு  நாட்டின் உளவு ஏஜன்சிகள்  பெற்ற வெற்றிகள், தோல்விகள், தொழில் நுட்ப வசதிகள், பணியாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை  பொறுத்து அவைகள் இங்கு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.(ஆதாரம்:Smartlist.com)  

10. ASIS – ஆஸ்திரேலியா

Formed
:13 May 1952
Headquarters
:Canberra, Australian Capital Territory, Australia
Annual budget
:$162.5m AUD (2007)
ஆஸ்திரேலியா அரசின் Australian Secret Intelligence Service (ASIS) வெளிநாட்டு உளவு, மற்ற நாட்டு உளவு ஏஜென்ஸிகளின் நடவடிக்கைகளை வேவு பார்த்தல், அயல் நாட்டு உளவு ஏஜென்சிகளுடன் ஒத்துழைத்தல் போன்ற பணிகளை கவனித்து வருகிறது. இந்த அமைப்பு செயல்பட்டு வருவது  இருபது வருடங்களுக்கும் மேலாக  ஆஸ்திரேலியா அரசுக்கே தெரியாமல் ரகசியமாக இருந்து வந்தது

9. RAW – இந்தியா

Formed
:21 September 1968
Headquarters
:New Delhi, India
Parent agency
:Prime Minister’s Office, GoI
1962  இந்திய சீன போர், 1965 இந்திய பாகிஸ்தான் போர் ஆகியவற்றின் காரணமாக இந்திய அரசு உளவு பணிகளின்  முக்கியத்துவத்தை உணர்ந்து Research and Analysis Wing (RAW)  ஏஜென்ஸியை துவக்கியது. RAW வுக்கு முன்பு இப்பணியை Intelligence Bureau (IB) செய்து வந்தது

8. DGSE – பிரான்ஸ்

Formed
:April 2, 1982
Preceding agency
:External Documentation and Counter-Espionage Service

பிரான்சின் Directorate General for External Security (DGSE) ஏஜென்சி பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. அது DCRI     (Central Directorate of Interior Intelligence) என்ற அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.  இப்பகுதியின் மற்ற நாட்டு உளவு ஏஜென்ஸிகளோடு ஒப்பிடும்போது இதன் வரலாறு குறுகியது. இந்த ஏஜென்சி 5000- க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு இயங்கி வருகிறது.

7. FSB – ரஷியா

Formed
:3 April, 1995
Employees
:350,000
Headquarters
:Lubyanka Square
Preceding agency
:KGB
ரஷியாவின் The Federal Security Service of Russian Federation (FSB) ஏஜென்சி சோவியத் காலக்கட்டத்திற்கு பிறகு முக்கியமான உளவு ஏஜென்ஸியாக செயல்பட்டுவருகிறது. ரஷியாவின் NKVD, KGB உட்பட அனைத்து உளவு நிறுவனங்களும் FSB அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக  ரஷியாவின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் GRU,  spetsnaz,  Internal Troops detachments ஆகிய உளவு அமைப்புகள் செச்சன்யா பிரச்சினையில் FSB ஏஜன்ஸியின் கீழ் செயல்பட்டன. இந்த ஏஜன்ஸியின் பணியாளர்களின் எண்ணிக்கை, வருடாந்திர பட்ஜெட் போன்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் இதன் பணியாளர்களின் எண்ணிக்கை 3,50,000 என மற்றொரு தகவல் கூறுகிறது

6. BND – ஜெர்மனி

Formed
:1 April 1956
Employees
:6,050
அயல் நாடுகளால் ஜெர்மன்  நாட்டிற்கு ஏற்படும் ஆபத்துக்களை முன்கூட்டியே அறிவித்து எச்சரிப்பதற்காக  Bundesnachrichtendienst (BND) ஏஜன்சி துவக்கப்பட்டது.  சர்வதேச தொலைதொடர்பு செய்திகளை ஒட்டு கேட்பது போன்ற எலெக்ட்ரானிக் தொழில் நுட்பத்தில் மிக திறமை வாய்ந்த ஏஜென்சி இது.

5. MSS – சீனா

Jurisdiction
:People’s Republic of China
Headquarters
:Beijing
Parent agency
:State Council
சீன அரசின் மிகப் பெரிய  மற்றும் திறமை வாய்ந்த உளவு ஏஜென்சி Ministry of State Security (MSS) ஆகும். இது வெளிநாட்டு உளவு பணிகள் மட்டுமில்லாது உள்நாட்டு பாதுகாப்புக்கான உளவு பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. Criminal Procedure Law , Article 4, சந்தேகப்படுவோரை கைது செய்யும் போலீஸ் அதிகாரத்தை ஏஜென்சிக்கு தருகிறது.

4. Mossad – இஸ்ரேல்

Formed
:December 13, 1949 as the Central Institute for Coordination
Employees
:1,200
Parent agency
:Office of the Prime Minister
இஸ்ரேலின் உளவு ஏஜென்சிகளில்  Mossad  மிக முக்கியமானது ஆகும். இதன் தலைவர் நேரடியாக பிரதமரிடம் மட்டுமே தனது அறிக்கையை தாக்கல் செய்வார்.  Aman (military intelligence),  Shin Bet (internal security) ஆகியவை இஸ்ரேலின் பிற முக்கிய ஏஜன்சிகள் ஆகும். Mossad ன் திறமைக்கு முக்கிய உதாரணமாக 1972 ல் நடந்த சம்பவத்தை கூறலாம். 1972 முனிச் ஒலிம்பிக்கில் பாலஸ்தீன  PLO அமைப்பால் 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட  PLO  உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து Mossad பழிக்குப் பழியாக கொலை செய்தது. இச்சம்பவம் உலக அளவில் Mossad ன் திறமையை பறைசாற்றியது.

3. ISI – பாகிஸ்தான்

Formed
:1948
Jurisdiction
:Government of Pakistan
Headquarters
:Islamabad, Pakistan
1947 இந்திய பாகிஸ்தான் போருக்கு பின் பாகிஸ்தானின் ராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கில் Inter-Services Intelligence (ISI ) தொடங்கப்பட்டது. உலக அளவில் அதிகமான வெற்றிகளை கொண்ட வரலாற்றை உடையது ISI . உலக அளவில் பிரபலமான ரஷியாவின் KGB உளவு நிறுவனம் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட நடவடிக்கைகளை ISI  வெற்றிகரமாக தோற்கடித்தது. இதன் மூலம் மத்திய ஆசியாவில் ரஷியாவின் செல்வாக்கை கால் பதிய விடாமல் செய்தது. இது 10,000 பணியாளர்களை கொண்டதாக கூறப்படுகிறது. டாப் 10 உளவு ஏஜென்சிகளில் மிக குறைவாக நிதி ஒதுக்கீடு பெரும் ஏஜென்சியாகவும் உள்ளது. போதை மருந்து விற்பனை மூலமாகவும் ISI பணம் திரட்டுவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் எந்த சட்ட திட்டங்களுக்கும் இது கட்டுப்படாது. அரசாங்கத்திற்குள் ஒரு தனி அரசாங்கம் (A State, with in a State) என ISI கருதப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு அமைதிக்கு பங்கம் விளைவிப்பதின் மூலம் இந்தியா தெற்காசியாவில் மிகப் பெரும் சக்தியாக உருவாவதை தடுக்கிறது

2. M1-6 – இங்கிலாந்து

Formed
:1909 as the Secret Service Bureau
Jurisdiction
:Government of the United Kingdom
Headquarters
:Vauxhall Cross, London
Parent agency
:Foreign and Commonwealth Office
அமெரிக்காவின் CIA வுக்கு இணையாக திறமை வாய்ந்தது பிரிட்டனின் MI6.

1. CIA – அமெரிக்கா

Formed
:September 18, 1947
Employees
:20,000
Parent agency
:Central Intelligence Group
உளவு ஏஜென்சிகளில் மிகப் பெரியது அமெரிக்காவின் Central Intelligence Agency (CIA).  வெளிநாட்டு அரசுகளை கண்காணிப்பது, நிறுவனங்கள், தனி நபர்கள் நடவடிக்கைகளை கண்காணிப்பது போன்ற வேலைகளை CIA செய்கிறது.  9/11 தீவிரவாத தாக்குதல் பற்றி முன் எச்சரிக்கை செய்யாதது இதன் முக்கிய தோல்வியாகும். ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக கூறியது. ஆனால் இதுவரை எந்த ரசாயன ஆயுதங்களும் ஈராக்கில் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பத்து லட்சம் சோவியத் வீரர்கள் ஆப்கானிஸ்தானுக்கு அணிவகுத்து சென்றதை கண்காணிக்காமல் கோட்டை விட்டது இதன் மற்றொரு தோல்வியாகும். இந்தியா இரண்டாம் முறையாக அணுகுண்டு வெடிப்பு சோதனை செய்ததை முன்கூட்டியே கண்டுபிடித்து கூறாதது இதன் மற்றொரு தோல்வியாகும். அல் கைதா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா-பின்-லேடனை பாகிஸ்தானில் என்கௌன்டர் மூலம் தீர்த்துக்கட்டியது CIA யின் தற்போதைய மிகப் பெரிய வெற்றி ஆகும்.  உலக அளவில் அதிக நிதி ஒதுக்கீடு பெறும் ஏஜென்சியாகவும், அதிநவீன தொழில் நுட்ப உபகரணங்களை பெற்றுள்ள ஏஜென்சியாகவும் CIA உள்ளது.
More than a Blog Aggregator

புதன், 5 செப்டம்பர், 2012

1971:இந்திய-பாகிஸ்தான் போர்: CIA வெளியிட்ட அதிர்ச்சிகர தகவல்கள்!

1971- இந்திய பாகிஸ்தான் போரில் இந்தியாவின் நோக்கம் பங்களாதேஷை உருவாக்குவது மட்டுமல்ல. அதற்கும் மேலாக பல திகைப்பூட்டும் நோக்கங்களை உள்ளடக்கியதாக இருந்தது.  பாகிஸதானின் முக்கிய பகுதிகளையும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையும் கைப்பற்றி பாகிஸ்தானை நிர்மூலமாக்குவதுதான் அப்போரின் மறைமுகமான நோக்கமாக இந்தியா கொண்டிருந்தது. இதன் மூலம் எக்காலத்திலும் இந்தியாவை எதிர்க்க முடியாத அளவிற்கு  பாகிஸ்தானை பலவீனப்படுத்த வேண்டும் என இந்தியாவின் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்திராவின் அந்த திட்டம் அவரது அமைச்சரவையில் இருந்த ஒரு  CIA உளவாளியால் தவிடுபொடியாக்கப்பட்டது. இந்திராவின் ஆசை பங்களாதேஷை உருவாக்குவதோடு தடுத்து நிறுத்தப்பட்டது. CIA யின் ஏஜண்டாக பணியாற்றிய அந்த கேபினெட் அமைச்சர் யார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. இதுவே இந்தியாவின் மிகப் பெரும் உளவு மோசடியாக  பலரால் கருதப்படுகிறது.

நூலாசிரியர் அனுஜ் தார் தான் எழுதியுள்ள CIA’s Eye on South Asia என்ற நூலில் மேற்கண்ட தகவலகளை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகள் தொடர்பாக CIA பல ஆண்டுகளுக்குப் பின் வெளியிட்ட ரகசிய ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு இந்த நூலை அனுஜ் தார் எழுதியுள்ளார். 

சமீபத்தில் வெளியிடப்பட்ட CIA யின் ரகசிய ஆவணங்கள்  1971 ல் நடந்த போர் சம்பவங்களை தெளிவாக விளக்கவில்லை. ஆயினும் அவை இந்திய CIA ஏஜென்ட், மேற்கு பாகிஸ்தான் (தற்போதைய பாகிஸ்தான்) மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மீது தாக்குதல் நடத்தும் இந்தியாவின் திட்டத்தை முன்கூட்டியே அமெரிக்க ஏஜென்சிக்கு தெரிவித்ததையும், அதனை தொடர்ந்து நடைபெற்ற அதிரடி அரசியல் திருப்பங்களையும் தெளிவாக விளக்குகிறது. அனுஜ் தார் அந்த CIA ஏஜென்ட் இந்திராவின் அமைச்சரவையில் இருந்த ஒரு காபினெட் அமைச்சர்  என உறுதியாக கூறுகிறார்.

டெல்லியில் நடந்த ரகசிய அமைச்சரவை கூட்டத்தில் பேசும்போது இந்திரா காந்தி, தான் பங்களாதேஷை உருவாக்க மட்டும் போரை தொடக்கவில்லை என்றும், பாகிஸதானின் முக்கிய பகுதிகளையும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையும் கைப்பற்றி பாகிஸ்தானை முழு அளவில் தோற்கடிக்கப்போவதாகவும், இதன் மூலம் எக்காலத்திலும் இந்தியாவை எதிர்க்க முடியாத அளவிற்கு  பாகிஸ்தானை பலவீனப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார். இச்செய்தி அடுத்த இரண்டு மணி நேரத்தில் இந்திய CIA ஏஜெண்டால் CIA ஏஜென்சிக்கு தெரிவிக்கப்பட்டது. CIA  தனது அறிக்கையினை அமெரிக்க அதிபர் நிக்சனிடம் சமர்ப்பித்தது.

CIA யின் அறிக்கையினை படித்ததும் கோபமடைந்த நிக்சன் பதட்டத்துடன் இந்த பெண் (இந்திரா காந்தி) நம்மை ஏமாற்றி விட்டார் என்று கூறினார். கிழக்கு பாகிஸ்தான் (தற்போது பங்களாதேஷ்) மீது போர் தொடுக்கப்போவதில்லை என்று தன்னிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு (உண்மையில் இந்திரா அவ்வாறு வாக்குறுதி கொடுத்தாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை) தற்போது மேற்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரையும் தாக்க இந்திரா முனைவதை கண்டித்த நிக்சன், இச்செயலுக்கு இந்திரா கண்டிப்பாக விலை கொடுக்க வேண்டிவரும் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்சிங்கரிடம் தெரிவித்தார்.

இந்திய CIA ஏஜென்டின் ரகசிய தகவலின் அடிப்படையில்  நிக்சன் மேற்கு பாகிஸ்தானை (தற்போதைய பாகிஸ்தான்) இந்திய தாக்குதலில் இருந்து காப்பாற்றும் நடவடிக்கையில் நேரடியாக இறங்கினார். ஒரு பெரிய ஜனநாயக நாடு தான் விரும்பும் அநீதி அனைத்தையும் செய்ய முடியும் என்ற கொள்கையை நீங்கள் ஏற்று கொள்வீர்கள் எனில்,  அது சர்வதேச நீதியையும், ஐக்கிய நாடுகள் சபையையும் அழித்துவிடும் என்று நிக்சன் கூறினார். மேற்கு பாகிஸ்தானை தாக்கும் திட்டத்தை இந்தியா கைவிடுவதற்கு   ரஷியா இந்தியா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், அவ்வாறு ரஷியா செய்ய முடியாமல் போனால்  அது அமெரிக்க ரஷிய போராக மாற வாய்ப்புண்டு என்று நிக்சன் ரஷியாவை தனிப்பட்ட முறையில் மிரட்டினார். கிஸ்சிங்கர் ஐநாவுக்கான சீன பிரதிநிதியை ரகசியமாக சந்தித்தார்.அப்போது அவர் இந்திய CIA ஏஜென்டின் ரகசிய தகவலை சீன பிரதிநிதியிடம் தெரிவித்தார். மேலும் ரஷியாவின் ஆதரவுடன் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடங்கியுள்ள  போர், பின்னாளில் சீனாவுடன் இந்தியாவும், ரஷியாவும்  செய்யவிருக்கும் போருக்கான  ஒத்திகையாக இருக்கலாம் என அவர் சீனாவை எச்சரித்தார்.
இதனை தொடர்ந்து ரஷியாவின் முதல் துணை வெளியுறவு துறை அமைச்சர் வாசிலி குஸ்நெட்சோவ் டெல்லி வருகை தந்தார். அவர் இந்தியா தனது தாக்குதலை கிழக்கு பாகிஸ்தானோடு (பங்களாதேஷ்) நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், மேற்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரை தாக்கக் கூடாது என்றும் இந்தியாவை வற்புறுத்தினார். ஏனெனில் இந்தியாவின் அத்தகைய நடவடிக்கை துணைக்கண்டத்தில் அமெரிக்க ரஷிய  போருக்கு வழி வகுத்துவிடும் என கவலை தெரிவித்தார்.  இந்தியா மேற்கு பாகிஸ்தானை தாக்காது என்ற உறுதிமொழியை இந்தியாவிடம் பெற்று கொண்ட குஸ்நெட்சோவ், அத்தகவலை 1971, டிசம்பர் 16 அன்று  அமெரிக்காவிடம் தெரிவித்தார். அதை கேட்டதும் நிக்சன் நாம் சாதித்து விட்டோம்; ரஷியா நமது வேலையை செய்து முடித்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இந்தியாவின் உண்மையான இலக்காக இருந்த மேற்கு பாகிஸ்தானை நிக்சன் காப்பாற்றி விட்டதாக கிஸ்சிங்கர்  பாராட்டினார். CIA ஆவணங்களை ஆதாரமாக கொண்டு மேற்கண்ட தகவல்களை தன் புத்தகத்தில் அனுஜ் தார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவை மிரட்ட அமெரிக்கா தனது மிகப்பெரிய அணுசக்தி போர் கப்பலை வங்காள விரிகுடாவில் நிறுத்தியது. ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்காவின் பலத்தை பறை சாற்றும் வகையில் அந்த  போர் கப்பல் நிறுத்தி வைக்கப்படிருந்தது.  இந்திய CIA ஏஜென்ட் அளித்த  ரகசிய அறிக்கையின் விளைவாகவே அமெரிக்க அரசு மேற்கண்ட நடவடிக்கையை எடுத்தது.

1971 ல் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை முதன் முதலாக  இந்திராவின் அமைச்சரவையில் CIA ஏஜென்ட் இருந்ததை  வெளிப்படுத்தியது. அதை தொடர்ந்து டிசம்பர் -1971-ல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை, அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின்  ஆசிய பிராந்திய செயல் திட்டம், இந்திய பிரதமர் இந்திராவின் நெருங்கிய அமைச்சரவை சகா ஒருவரின் வழிகாட்டுதலின்படி வடிவமைக்கப்பட்டது என தெரிவித்தது.

பிற்காலத்தில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், இரு துணை பிரதமர்கள் ஜெகஜீவன் ராம், Y B சவான் ஆகியோர் 1971 போரின் பொது இந்திய  CIA ஏஜெண்ட்களாக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் தரப்படவில்லை. அமெரிக்க அரசு தன ரகசிய ஆவணங்களை வெளியிடும் வரை இந்திய  CIA ஏஜெண்ட் ஒருவர் இந்திராவின் அமைச்சரவையில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாமல்தான் இருந்தது. CIA தனது நம்பிக்கைகுரிய ஏஜென்ட் ஒருவரை இந்திய அரசின் கேபினட்டில் கொண்டிருந்தது என்ற வாதத்திற்கு அமெரிக்க அரசின் ஆவணங்கள் இன்று அசைக்க முடியாத ஆதாரங்களாக விளங்குகின்றன.

CIA வெளியிட்ட ரகசிய ஆவணங்களில் இந்திய CIA ஏஜென்டின் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெயரை வெளியிட்டால் அது இந்திய அமெரிக்க அரசின் உறவை பாதிக்கும் என்பதாலும், ஏஜென்சிக்கு புதிய ஏஜெண்டுகளை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படுத்தும் என்பதாலும் இந்திய CIA ஏஜென்டின் பெயரை அமெரிக்க அரசு வெளியிடவில்லை என அனுஜ் தார் கூறுகிறார். ஆயினும் அந்த ஏஜென்ட் யார் என்பதை இந்திய அரசு உறுதியாக அறிந்திருக்கும் என அவர் மேலும் கூறுகிறார்.

ஒவ்வொரு நாடும் பிற நாட்டு அரசாங்கங்களின் ரகசியங்களை உளவு பார்க்க ஏஜெண்ட்களை நியமிப்பது வழக்கமானதுதான். இந்தியாவும் இப்பணிகளுக்காக  R & AW ஏஜென்சியை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்தியாவின் கேபினட் அமைச்சர் ஒருவரே CIA  ஏஜெண்டாக இருந்தது மிகப்பெரும் அதிர்ச்சியளிக்கிறது. அது ஒவ்வொரு நாட்டு அரசாங்கத்திலும் CIA  எந்த அளவு ஊடுருவியுள்ளது என்பதை நமக்கு காட்டுகிறது. மேலும் 1971 ஆம் ஆண்டு போரில் இந்தியா தனது நோக்கத்தில் முழு வெற்றி பெறமுடியாமல் போனதற்கு இந்திய CIA ஏஜெண்ட்தான் காரணம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அன்று இந்தியாவின் போர் ரகசியம் வெளி வராமல் இருந்திருந்தால் இன்று இந்தியாவின் பூகோள அமைப்பும், பாகிஸ்தானின்  பூகோள அமைப்பும் நிச்சயம் வேறாயிருக்கும்.
More than a Blog Aggregator