RAW Headquarters, New Delhi |
ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவம் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு உளவு நிறுவனங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. அதனால்தான் மன்னர் காலம் தொட்டு இக்காலம் வரை உளவு வேலைகளுக்கு அரசாங்கங்கள் முக்கியத்துவம் வழங்கி வருகின்றன 1971-ல் ஒரு இந்திய CIA ஏஜெண்டால் இந்திரா காந்தியின் போர் திட்டம் எவ்வாறு தவிடுபொடியாக்கப்பட்டது என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம். ஒரு நாட்டின் பலம் அந்த நாட்டின் உளவு ஏஜென்சி பெரும் வெற்றியின் மூலமாகவே தற்போது கணிக்கப்படுகிறது. 2011- வரை பல்வேறு நாட்டின் உளவு ஏஜன்சிகள் பெற்ற வெற்றிகள், தோல்விகள், தொழில் நுட்ப வசதிகள், பணியாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை பொறுத்து அவைகள் இங்கு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.(ஆதாரம்:Smartlist.com)
10. ASIS – ஆஸ்திரேலியா
Formed | :13 May 1952 |
Headquarters | :Canberra, Australian Capital Territory, Australia |
Annual budget | :$162.5m AUD (2007) |
ஆஸ்திரேலியா அரசின் Australian Secret Intelligence Service (ASIS) வெளிநாட்டு உளவு, மற்ற நாட்டு உளவு ஏஜென்ஸிகளின் நடவடிக்கைகளை வேவு பார்த்தல், அயல் நாட்டு உளவு ஏஜென்சிகளுடன் ஒத்துழைத்தல் போன்ற பணிகளை கவனித்து வருகிறது. இந்த அமைப்பு செயல்பட்டு வருவது இருபது வருடங்களுக்கும் மேலாக ஆஸ்திரேலியா அரசுக்கே தெரியாமல் ரகசியமாக இருந்து வந்தது
9. RAW – இந்தியா
Formed | :21 September 1968 |
Headquarters | :New Delhi, India |
Parent agency | :Prime Minister’s Office, GoI |
1962 இந்திய – சீன போர், 1965 இந்திய – பாகிஸ்தான் போர் ஆகியவற்றின் காரணமாக இந்திய அரசு உளவு பணிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து Research and Analysis Wing (RAW) ஏஜென்ஸியை துவக்கியது. RAW – வுக்கு முன்பு இப்பணியை Intelligence Bureau (IB) செய்து வந்தது
8. DGSE – பிரான்ஸ்
Formed | :April 2, 1982 |
Preceding agency | :External Documentation and Counter-Espionage Service |
7. FSB – ரஷியா
Formed | :3 April, 1995 |
Employees | :350,000 |
Headquarters | :Lubyanka Square |
Preceding agency | :KGB |
ரஷியாவின் The Federal Security Service of Russian Federation (FSB) ஏஜென்சி சோவியத் காலக்கட்டத்திற்கு பிறகு முக்கியமான உளவு ஏஜென்ஸியாக செயல்பட்டுவருகிறது. ரஷியாவின் NKVD, KGB உட்பட அனைத்து உளவு நிறுவனங்களும் FSB அமைப்பின் கீழ் செயல்பட்டு வருகின்றன. உதாரணமாக ரஷியாவின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் GRU, spetsnaz, Internal Troops detachments ஆகிய உளவு அமைப்புகள் செச்சன்யா பிரச்சினையில் FSB ஏஜன்ஸியின் கீழ் செயல்பட்டன. இந்த ஏஜன்ஸியின் பணியாளர்களின் எண்ணிக்கை, வருடாந்திர பட்ஜெட் போன்ற விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆயினும் இதன் பணியாளர்களின் எண்ணிக்கை 3,50,000 என மற்றொரு தகவல் கூறுகிறது
6. BND – ஜெர்மனி
Formed | :1 April 1956 |
Employees | :6,050 |
அயல் நாடுகளால் ஜெர்மன் நாட்டிற்கு ஏற்படும் ஆபத்துக்களை முன்கூட்டியே அறிவித்து எச்சரிப்பதற்காக Bundesnachrichtendienst (BND) ஏஜன்சி துவக்கப்பட்டது. சர்வதேச தொலைதொடர்பு செய்திகளை ஒட்டு கேட்பது போன்ற எலெக்ட்ரானிக் தொழில் நுட்பத்தில் மிக திறமை வாய்ந்த ஏஜென்சி இது.
5. MSS – சீனா
Jurisdiction | :People’s Republic of China |
Headquarters | :Beijing |
Parent agency | :State Council |
சீன அரசின் மிகப் பெரிய மற்றும் திறமை வாய்ந்த உளவு ஏஜென்சி Ministry of State Security (MSS) ஆகும். இது வெளிநாட்டு உளவு பணிகள் மட்டுமில்லாது உள்நாட்டு பாதுகாப்புக்கான உளவு பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. Criminal Procedure Law , Article 4, சந்தேகப்படுவோரை கைது செய்யும் போலீஸ் அதிகாரத்தை ஏஜென்சிக்கு தருகிறது.
4. Mossad – இஸ்ரேல்
Formed | :December 13, 1949 as the Central Institute for Coordination |
Employees | :1,200 |
Parent agency | :Office of the Prime Minister |
இஸ்ரேலின் உளவு ஏஜென்சிகளில் Mossad மிக முக்கியமானது ஆகும். இதன் தலைவர் நேரடியாக பிரதமரிடம் மட்டுமே தனது அறிக்கையை தாக்கல் செய்வார். Aman (military intelligence), Shin Bet (internal security) ஆகியவை இஸ்ரேலின் பிற முக்கிய ஏஜன்சிகள் ஆகும். Mossad – ன் திறமைக்கு முக்கிய உதாரணமாக 1972 – ல் நடந்த சம்பவத்தை கூறலாம். 1972 – முனிச் ஒலிம்பிக்கில் பாலஸ்தீன PLO அமைப்பால் 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டனர். அந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட PLO உறுப்பினர்கள் ஒவ்வொருவரையும் கண்டுபிடித்து Mossad பழிக்குப் பழியாக கொலை செய்தது. இச்சம்பவம் உலக அளவில் Mossad – ன் திறமையை பறைசாற்றியது.
3. ISI – பாகிஸ்தான்
Formed | :1948 |
Jurisdiction | :Government of Pakistan |
Headquarters | :Islamabad, Pakistan |
1947 இந்திய – பாகிஸ்தான் போருக்கு பின் பாகிஸ்தானின் ராணுவ பலத்தை அதிகரிக்கும் நோக்கில் Inter-Services Intelligence (ISI ) தொடங்கப்பட்டது. உலக அளவில் அதிகமான வெற்றிகளை கொண்ட வரலாற்றை உடையது ISI . உலக அளவில் பிரபலமான ரஷியாவின் KGB உளவு நிறுவனம் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்ட நடவடிக்கைகளை ISI வெற்றிகரமாக தோற்கடித்தது. இதன் மூலம் மத்திய ஆசியாவில் ரஷியாவின் செல்வாக்கை கால் பதிய விடாமல் செய்தது. இது 10,000 பணியாளர்களை கொண்டதாக கூறப்படுகிறது. டாப் 10 உளவு ஏஜென்சிகளில் மிக குறைவாக நிதி ஒதுக்கீடு பெரும் ஏஜென்சியாகவும் உள்ளது. போதை மருந்து விற்பனை மூலமாகவும் ISI பணம் திரட்டுவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானின் எந்த சட்ட திட்டங்களுக்கும் இது கட்டுப்படாது. அரசாங்கத்திற்குள் ஒரு தனி அரசாங்கம் (A State, with in a State) என ISI கருதப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு அமைதிக்கு பங்கம் விளைவிப்பதின் மூலம் இந்தியா தெற்காசியாவில் மிகப் பெரும் சக்தியாக உருவாவதை தடுக்கிறது
2. M1-6 – இங்கிலாந்து
Formed | :1909 as the Secret Service Bureau |
Jurisdiction | :Government of the United Kingdom |
Headquarters | :Vauxhall Cross, London |
Parent agency | :Foreign and Commonwealth Office |
அமெரிக்காவின் CIA – வுக்கு இணையாக திறமை வாய்ந்தது பிரிட்டனின் MI6.
1. CIA – அமெரிக்கா
Formed | :September 18, 1947 |
Employees | :20,000 |
Parent agency | :Central Intelligence Group |
உளவு ஏஜென்சிகளில் மிகப் பெரியது அமெரிக்காவின் Central Intelligence Agency (CIA). வெளிநாட்டு அரசுகளை கண்காணிப்பது, நிறுவனங்கள், தனி நபர்கள் நடவடிக்கைகளை கண்காணிப்பது போன்ற வேலைகளை CIA செய்கிறது. 9/11 தீவிரவாத தாக்குதல் பற்றி முன் எச்சரிக்கை செய்யாதது இதன் முக்கிய தோல்வியாகும். ஈராக்கில் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக கூறியது. ஆனால் இதுவரை எந்த ரசாயன ஆயுதங்களும் ஈராக்கில் கைப்பற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பத்து லட்சம் சோவியத் வீரர்கள் ஆப்கானிஸ்தானுக்கு அணிவகுத்து சென்றதை கண்காணிக்காமல் கோட்டை விட்டது இதன் மற்றொரு தோல்வியாகும். இந்தியா இரண்டாம் முறையாக அணுகுண்டு வெடிப்பு சோதனை செய்ததை முன்கூட்டியே கண்டுபிடித்து கூறாதது இதன் மற்றொரு தோல்வியாகும். அல் –கைதா தீவிரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா-பின்-லேடனை பாகிஸ்தானில் என்கௌன்டர் மூலம் தீர்த்துக்கட்டியது CIA – யின் தற்போதைய மிகப் பெரிய வெற்றி ஆகும். உலக அளவில் அதிக நிதி ஒதுக்கீடு பெறும் ஏஜென்சியாகவும், அதிநவீன தொழில் நுட்ப உபகரணங்களை பெற்றுள்ள ஏஜென்சியாகவும் CIA உள்ளது.
Tweet | |||||
Good listing. Thanks for sharing.
பதிலளிநீக்குI would say MOSSAD is the number 1.
பதிலளிநீக்குJames bond is M-16 agent.
பதிலளிநீக்குதெரியாத தகவல்கள். அறிந்துகொண்டேன். அருமை. தொடரவும்...!
பதிலளிநீக்குமொசாதை பாகிஸ்தானை பின்னுக்கு தள்ளி விட்டு 2 அல்லது மூன்றாமிடத்தில் கொண்டு வந்திருக்க வேண்டும்:)
பதிலளிநீக்குtrue
நீக்குஉளவு நிறுவனங்கள் தங்களுடைய வெற்றி, தோல்விகளை வெளிப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. வெற்றிகளை கொண்டாட முடிவதில்லை. RAW ஏஜென்சிக்கு என்று அதிகார பூர்வமாக ஒரு இணைய தளம் கூட கிடையாது. எனவே அவைகளை தர வரிசைபடுத்துவது என்பது மிக கடினமான செயலாக உள்ளது.
பதிலளிநீக்குஇக்கட்டுரை குறித்து கருத்துரைகள் தந்த அனைவருக்கும் நன்றி!