திங்கள், 3 டிசம்பர், 2012

இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்தது யார்!?



இந்திய விடுதலை போராட்டத்தில் நேதாஜியின் பங்கினையும், இந்திய தேசிய ராணுவத்தின் (Indian National Army or INA) தியாகத்தையும் யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. சுதந்திரத்திற்கு பிந்தைய இந்திய அரசாங்கங்களினால் இந்திய தேசிய ராணுவத்தின் சாதனைகள் இருட்டடிப்பு செய்யப்பட்டாலும், மக்கள் மத்தியில் நேதாஜிக்கும், இந்திய தேசிய ராணுவத்திற்கும்  உள்ள மதிப்பினை குறைக்க முடியவில்லை. இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து சுதந்திரத்திற்கு போராடிய இந்தியர வீரர்களை சுதந்திரத்திற்கு பின் கௌரவிக்க எந்த இந்திய அரசும் முன்வரவில்லை எனபது வருத்தத்திற்குரிய விஷயமாகும். அவர்களை கௌரவிக்காவிட்டாலும் பரவாயில்லை. அவர்களை அவமதிக்காமல் இருந்தாலே அது பெரிய புண்ணியமாக இருந்திருக்கும். ஆனால் சுதந்த்திரத்திற்கு பிந்தைய காங்கிரஸ் அரசு அவர்களை எந்த அளவு அவமதித்தது என்பதை நாம் சற்று திரும்பி பார்த்தோமானால் இந்தியாவில் தியாகத்திற்கு மதிப்பு என்ன என்பது நமக்கு புரியும்.

1) 1948 ல் இந்திய தேசிய ராணுவ வீரர்களை இந்திய ராணுவத்தில் சேர்க்க நேரு எதிர்ப்பு தெரிவித்தார். 1942 இரண்டாம் உலகப்போருக்குப் பின் அவர்கள் ராணுவப்பணியில் இல்லாததால் பணி முறிவு  (break in the service) ஏற்பட்டுவிட்டது என்றும் அதனால் அவர்களை ராணுவத்தில் சேர்க்க முடியாது என்றும் நேரு காரணம் கூறினார். மேலும் ராணுவத்தில் எந்த பதவி, சீனியாரிட்டியில் அவர்களை இணைப்பது என்பதில் உடன்பாடு ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.  எந்த பதவியையும், பலனையும் எதிர்பார்க்காமல் குடும்ப உறவுகளை மறந்து ராணுவத்தில் சேர்ந்த தியாகிகளுக்கு இந்திய அரசு செய்த நன்றிக்கடனை பார்த்தீர்களா?. நியாயமாகப் பார்த்தால் நாம் அவர்களை கோவில் கட்டி கும்பிடவேண்டும். ஆனால் இந்திய அரசு அற்ப விதிகளை காரணம் காட்டி அவர்களை ராணுவத்தில் சேர்க்காமல் அவமானப்படுத்தியது. ஆனாலும் INA வீரர்களை இந்திய ராணுவத்தில் சேர்ப்பதற்கு இந்திய ராணுவத்திலும், நேருவின் அமைச்சரவையிலும், பொதுமக்களின் மத்தியிலும் பலத்த ஆதரவு நிலவியதை அப்போதைய ஆவணங்களின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது. நேருவின் அமைச்சரவையில் அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த சர்தார் பல்தேவ் சிங்  தான் எழுதியுள்ள குறிப்புரையில், 1948-ல்  INA வீரர்களை இந்திய ராணுவத்தில் சேர்க்காதது குறித்து இந்திய ராணுவத்தில் அதிருப்தி நிலவுவதாக  குறிப்பிட்டுள்ளார். ஆனால் நேருவுக்கு மட்டும் INA-வுடன் என்ன பிரச்சினையோ!?

2) INA வீரர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களுக்கான பென்ஷன் வழங்கப்படும் என்று முதலில் உறுதி அளித்த  நேரு பின்னர் அந்த உறுதியை காப்பாற்றவில்லை. 1972 க்கு பின்னரே INA வீரர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

3)  பெரும்பாலான மக்கள், குறிப்பாக முன்னாள் INA வீரர்கள் தாங்கள் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசினால் ஓரங்கட்டப்படுவதாகவே நம்பினர். சுதந்திரப்போராட்டத்தில் INA வின் பங்கினை நேரு, மௌன்ட்பேட்டன் மற்றும் சுதந்திரத்திற்கு பிந்தைய காங்கிரஸ் அரசுகள் அங்கீகரிக்கவில்லை என்றே அவர்கள் நம்பினர்.

4) இக்காலக்கட்டத்தில் பல அதிரடி செய்திகளும்  பத்திரிக்கைகளில் வலம் வந்தன. அவற்றுள் உறுதி செய்யப்படாத மிக முக்கியமான செய்தி ஒன்றும் உண்டு. சுதந்திரத்திற்கு பின் நேதாஜி இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டால் அவரை கைது செய்து போர் குற்றவாளியாக கருதி இந்திய அரசானது  பிரிட்டிஷ் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன என்பதே அச்செய்தியாகும்.

5) நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் பெருமளவில் இந்திய தேசிய ராணுவத்தில் பங்கேற்றனர். குறிப்பாக பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்ட  இந்தியர்கள் பெருமளவில் INA வீரர்களாக இருந்தனர். இரண்டாம் உலகப்போர் முடிவடைந்ததுதும் அவர்கள் இந்திய அரசால் இந்திய குடிமகன்களாக அங்கீகரிக்கப்படவில்லை. அவர்கள் நாடு கடத்தப்பட்ட்ட பர்மா அரசாலும் பர்மீயக் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவர்கள் கடைசிவரை சொந்த நாடு இல்லாத அனாதைகளாகவே இறந்து போனது மிகப்பெரிய கொடுமை.

இந்திய சுதந்திர போராட்டத்தில் பல்வேறு விதமான சித்தாந்தத்தை உடைய அமைப்புகள் பங்கேற்றன. அவர்களுடைய சித்தாந்தங்கள் எதுவாக இருந்தாலும், அனைவருடைய இலக்கும் இந்தியாவின் சுதந்திரமாக மட்டுமே இருந்தது. சுதந்திரத்திற்கு பின், சுதந்திரப்போராட்டத்தில் பங்கேற்ற அனைவருடைய   தியாகமும் சரிசமமாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் சிறுசிறு மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் மறக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் தொடக்கம் முதலே இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத மற்ற அமைப்புகளின் தியாகங்கள் மறைக்கப்பட்டுவிட்டன என்பதே உண்மை. இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார்? என்ற கேள்விக்கு மகாத்மா காந்தியடிகள் என்ற பதிலுடன் இந்திய சுதந்திர போராட்ட வரலாறு பள்ளி புத்தகங்களில் முடிந்துவிடுவது மிகவும் வேதனையான விஷயம்!
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

4 கருத்துகள்:

  1. காங்கிரஸ் அல்லாத ஏனையோர் மதிப்பு மறைக்கப்பட்டு விட்டதே உண்மைதான். :)

    பதிலளிநீக்கு
  2. மோகன் தாஸ் கரம் சந் காந்தி நேதாஜியை ஓரம் கட்டினார். காரணம் அவர் தீவிர வாதியாம். அயல் நாட்டில் படித்த செல்வந்தர் ஆங்கிலேயர்களின் அடி வருடிய நேருவும் காந்திய பின்பற்றினார். பின்னர் எங்கிருந்து இந்திய தேசிய ராணுவத்துக்கு மரியாதையை கிடைத்தது? மக்களிடமிருந்து மட்டமே!
    விடுதலை பெற்றபின்னர் காந்தி மிகக்குழம்பிபோன்னார். அப்போது அவர் சொன்னதுதான் அகில இந்திய காங்கிரஸ் கட்சியினை கலைத்துவிடலாம் என்று. ஏனெனில் அந்நாளிலேயே இவர்களின் பதவி பித்தும், அதிகார ஆசையும் காந்தியை வெகுவாக கவலை கொள்ள செய்தது.
    நேதாஜியின் ராணுவத்தில் அதிக அளவில் பங்கு கொண்டவர்கள் நம் தமிழர்கள். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் போன்ற சுய நலம் அற்ற தலைவர்கள் நேதாஜிக்கு தளபதியாக விளங்கினர். இதே காங்கிரஸ் மகா பாவிகள் தான் தேவரையும் பழி வாங்கினார்கள் என்று வரலாறு சொலும்.
    வேண்டாம் நினைத்தால் வயிறு காந்துகிறது.
    காங்கிரஸ் ஒழிந்தால் மட்டுமே இந்தியா உருப்படும்.அது ஒழிக்கப்ட வேண்டிய நச்சுக்காடு.

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் காந்தி போலி ஜனநாயகம் பேசும் ஒரு சர்வதிகாரி.நாட்டின் பிரிவினைக்கு முன்னும்,பின்னும் பல்லாயிரக்கணக்கான ஹிந்துக்க்ள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தார்.பிரிவினயின் போது பாரதத்தில் உள்ள முஸ்லீகளை பாக்கிஸ்தானுக்கும்,பாக்கிஸ்தானில் உள்ள ஹிந்துக்களை பாரதத்திற்கும் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்ற்போது சர்வாதிகாரத்தனமாக மறுத்தார். அதன் விளைவுகள் பிரிவினையின்போது பாக்கிஸ்தானில் 3 கோடி இருந்த ஹிந்துக்கள் இன்று 1 லட்சத்திற்கும் குறைவாக உள்ளனர்.ஆனால் பாரதத்தில் 8.04 சதவிகிதமாக இருந்த முஸ்லீம்பாரதத்தில்கள் இன்று 14 சதவிகிதம்.இது அனைத்திற்கும் காரணம் காந்தி....நேரு ஒரு சுயநலவாதி இன்று காஷ்மீரில் இவ்வளவு மோசமான நிலை ஏற்படுவதற்கு இவர்தான் காரணம்.சீன ஆக்கிரமிப்பிற்கு மூல காரணமே இவர்தான்.... இருவரும் தங்களைப்பற்றித்தான் மற்றவர்கள் பேசவேண்டும் என்று நினைப்பவர்கள்.

    பதிலளிநீக்கு
  4. இன்றைக்கும் இராணுவ வீரர்கள் செய்யும் தியாகம் வேறு யாரும் செய்துவிட முடியாது. ஆனால், பனி ஓய்வுக்குப் பின்னர் அவர்களுக்கு வாட்ச்மேன் வேலைதான் கிடைக்கும். சூதாட்டத்தில் ஈடுபட்டு, கோலாக்கள் விளம்பரத்தில் நடித்து, பெண்களைப் பொறுக்கித் திரியும் கிரிக்கெட் ஆட்டக்காரன் நூற்றுக்கனக்கான் கோடி சொத்து சேர்த்திருப்பான். அரசியல்வியாதி அத்தனை பேருக்கும் ஆயிரக்க்கனக்கான் கோடி சொத்து வெளிநாட்டு வங்கிகளில். ஆனால், நாட்டுக்காக உயிரைக் கொடுத்த வீரன் குடும்பம் தெருவில் நிற்கும். இதுதான் உலகம்.

    நேதாஜி என்ன ஆனார் என்று யாருக்குமே தெரியாமல் போனது வியப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு