மிக
அதிகமாக யு டியுப்பில் பார்க்கப்பட்ட வீடியோவாக தென் கொரிய பாப் பாடகர் சை(Psy)-யின்
“Gangnam Style” பாடல் சாதனை படைத்திருக்கிறது. ஜஸ்டின் பீபரின் “Baby” பாடல் படைத்த சாதனையை கடந்த ஞாயிற்றுக்கிழமை
அன்று முறியடித்து உலகில் அதிகம் தடவை பார்க்கப்பட்ட வீடியோவாக சையின் பாடல் சாதனை
படைத்திருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க சாதனை என்னவென்றால் ஆங்கிலம் இல்லாத
வேற்று மொழி வீடியோ ஒன்று யு டியுப்பில் உலக சாதனை படைத்துள்ளது ஆகும். விரைவில்
ஒரு பில்லியன் தடவை யு டியுப்பில்
பார்க்கப்பட்ட முதல் வீடியோவாக இப்பாடல் சாதனை
படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை “Gangnam Style” பாடல்
யு டியுப்பில் 827 மில்லியன் தடவை
கண்டுகளிக்கப்பட்டுள்ளது. இதுவரை யு டியுப்பில் எந்த வீடியோவும் 1 பில்லியன் தடவை பார்க்கப்படவில்லை எனபது
குறிப்பிடத்தக்கது. “Gangnam
Style” பாடல் இந்த வருடத்திற்குள் அந்த சாதனையை
படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜஸ்டின் பீபரின் “Baby” பாடல் 805 மில்லியன் தடவை பார்க்கப்பட்டுள்ளது.
சை யின் “Gangnam
Style.” பாடல் வீடியோ யு டியுப்பில்
ஒவ்வொரு நாளும் 7 மில்லியன் முதல்
10 மில்லியன் தடவை கண்டுகளிக்கப்படுகிறது. சென்ற சனிக்கிழமை மட்டும் 11 மில்லியன் தடவை இந்த வீடியோ யு டியுப்பில் ரசிக்கப்பட்டது.
யு டியுப்பில் அதிகம் ரசிக்கப்பட்ட டாப் 10 வீடியோக்கள் (All time) As on 26-11-2012
1) Psy (“Gangnam
Style”, 827 million)
2) Justin
Bieber (“Baby” 805 million)
3) Jennifer Lopez/Pitbull (“On the Floor,” 625
million)
4) Eminem/Rihanna (“Love the Way You Lie,” 517
million)
5) LMFAO (“Party Rock Anthem,” 503 million)
6) Shakira’s World Cup theme (“Waka Waka,” 501
million)
7) “Charlie” clip (498 million)
8) Lady Gaga (“Bad Romance,” 498 million)
9) Brazilian singer Michel Telo (“Ai Se Eu Te
Pego,” 462 million)
10) Don Omar (“Danza Kuduro,” 407 million).
http://writervijayakumar.blogspot.com/2012/11/gangnam-style-dont-miss-it.html
Tweet | |||||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக