பாகிஸ்தான் மட்டுமல்ல. உலகம் முழுவதும் இன்று பரபரப்பாக
பேசப்படும் காதல் கதை ஹினா ரப்பானி கர் மற்றும் பிலவால் புட்டோ சர்தாரி ஜோடியினதுதான். ஹினா பாகிஸ்தானின்
வெளியுறவு துறை அமைச்சர். 34
வயது. திருமணமானவர். இரண்டு குழந்தைகளுக்கு தாய். கணவர் மிக பெரிய கோடீஸ்வரர். பிலவால் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி - பெனாசிர் புட்டோ
ஆகியோரின் 24 வயது வாரிசு. பாகிஸ்தானின் செல்வாக்கு மிக்க
குடும்பத்தை சார்ந்தவர். கடந்த வாரம் பங்களாதேஷ் வார பத்திரிக்கை Blitz, ஹினா, பிலவால் இருவரும் ஒருவரை ஒருவர்
காதலிப்பதாகவும் , இருவரும் திருமணம் செய்ய விரும்புவதாகவும், இருவரும்
தொலைபேசியில் அடிக்கடி பேசிக்கொள்வதாகவும், வாழ்த்து அட்டைகளை
பரிமாறிக்கொள்வதாகவும் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டது.
Bilawal and Hina |
சர்தாரி இருவரின் காதலுக்கும் கடும் எதிர்ப்பை
தெரிவித்ததாகவும், இருவரின் தொலைபேசி உரையாடல்கள் பற்றிய விவரங்களை உளவு
நிறுவனங்களிடம் கேட்டுள்ளதாகவும் அப்பத்திரிகை மேலும் தெரிவித்தது. ஹினாவும் அவரது கணவரும்
பத்திரிக்கை செய்தியை மறுத்தனர். மேற்கண்ட
செய்தி பொய்யானவை என்றும், குப்பை என்றும் வர்ணித்தனர்.
இதற்கிடையே தி டெய்லி டெலிகிராப் பத்திரிக்கை Blitz பத்திரிக்கை செய்தியின் பின்னணியில்
பாகிஸ்தானின் உளவு அமைப்பான Inter-Services Intelligence (ISI) - யின்
சதித்திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பெயர்
வெளியிட விரும்பாத முக்கிய தலைவர்களின் கருத்தினை அடிப்படையாக கொண்டு மேற்கண்ட தகவல்களை
டெலிகிராப் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் விசாரணைக்கு கொண்டு
செல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் காணாமல்
போனது பற்றி விசாரிக்க ஐ.நா விசாரணை
குழுவிற்கு ஹினா ஒப்புதல் அளித்ததாகவும், அதனால் ISI ஹினா மீது
கடும் கோபம கொண்டுள்ளதாகவும், எனவே ஹினாவின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும்
வகையில் இத்தகைய வதந்தியை ISI
பரப்பி உள்ளதாகவும் டெலிகிராப் மேலும் தெரிவித்துள்ளது. United Nations’
Working Group on Enforced and Involuntary Disappearances குழு தனது விசாரணையில் பாகிஸ்தான் ராணுவத்தின் சில
அதிகாரிகளையும், சில ISI
அதிகாரிகளையும் அவர்களுடைய சட்ட விரோத செயல்களுக்காக தண்டிக்க அரசுக்கு சிபாரிசு
செய்யும் என ISI எதிர்பார்க்கிறது
என்றும், அதனால் ஹினாவின் இந்த முடிவு குறித்து கடும் அதிருப்தி கொண்டுள்ளதாகவும்
மேலும் ஒரு C பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (PPP) உறுப்பினர்
டெலிகிராப் பதிரிக்கையிடம் தெரிவித்தார். ஆனால் மேற்கண்ட குற்றச்சாட்டுகளுக்கு
இதுவரை பாகிஸ்தான் அரசு பதில் அளிக்கவில்லை.
ஹினாவுக்கும், ISI – கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக வெளிவந்த
செய்தியை பாகிஸ்தான் ராணுவம் மறுத்துள்ளது. Inter-Services Public
Relations (ISPR) வெளியிட்ட அறிக்கையில் ISI மீதான டெலிகிராப் பத்திரிக்கையின்
குற்றச்சாட்டு தவறானது; அடிப்படையற்றது என்று தெரிவித்துள்ளது. நாட்டில்
குழப்பத்தை ஏற்படுத்தி நாட்டை பலவீனப்படுத்த விரும்பும் அன்னிய சக்திகளால் இத்தகைய
வதந்திகள் பரப்பப்படுகின்றன என்றும், செய்திகளை வெளியிடும் முன் டெலிக்ராப்
பத்திரிக்கை செய்தியின் உண்மைத் தன்மை குறித்து உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்
என்றும், பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்றும், ஆதாரமில்லாமல் செய்திகளை
வெளியிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு உட்பட நேரிடும் என்றும் ISPR தெரிவித்துள்ளது.
இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது ஹினா – பிலவால் காதல் பற்றியது
அல்ல. அச்செய்தி உண்மையாகவும் இருக்கலாம். வதந்தியாகவும் இருக்கலாம். உண்மையாக
இருந்தாலும் அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அவர்களின் நாட்டு சட்ட விதிகளின்படி
அவர்கள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுக்க உரிமை உண்டு. இச்செய்தியை நான் இங்கு
பதிவு செய்ய ஒரு முக்கிய காரணம் உண்டு.
தனி மனிதனாகட்டும், அல்லது அலுவலகமாகட்டும், அல்லது குடும்பமாகட்டும், அல்லது
தேசமாகட்டும் ஒரு பெண்ணை பழிவாங்க வேண்டுமானால் நாம் எடுக்கும் ஆயுதம் அவளின்
ஒழுக்க நடத்தையை பற்றி வதந்தியை கிளப்புவதாகவே இருக்கிறது.
Tweet | |||||
இவ்வித கருக்களை எவ்விதம் பெறுகிறீர்கள் எனத் தெரியவில்லை? வியப்பிற்குரிய விஷயங்களை அருமையாக தொடர்ந்து பதிவு செய்து வருகிறீர்கள். எல்லா நாட்டிலும் எல்லா சமூகத்திலும் எல்லா குழுக்களிடையேயும் பாவப்பட்ட ஜென்மங்கள்தான் இந்த பெண்கள் போல. இந்நிலை மாற எல்லா ஊரிலும் ஒரு பாரதி பிறக்கவேண்டும் போல.
பதிலளிநீக்குதங்களின் வழிகாட்டுதலுக்கும், கருத்துரைக்கும் நன்றி சார்! மீண்டும் பதிவுலகிற்கு முழுவீச்சுடன் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!
நீக்குDo u know who is murugesan?
பதிலளிநீக்குஎன்னுடைய நண்பர்களில் முருகேசன் என்னும் பெயர் கொண்டவர்கள் சிலர் உண்டு. ஆனால் நீங்கள் குறிப்பிடும் நபர் அவர்களில் ஒருவரா? என்பதை என்னால் கூற இயலவில்லை.
நீக்கு