செவ்வாய், 9 அக்டோபர், 2012

சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் -ஒரு பார்வை!

நேருவுடன் கிருஷ்ண மேனன்
ஊழல்கள் கொழிக்கும் நாடாக இன்று இந்தியா திகழ்கிறது. ஆனால் இந்தியாவில் ஊழல்கள் வெளிவரும் வேகத்திலேயே அதன் பரபரப்பும் உடனே அடங்கிவிடுகிறது. ஒரு ஊழல் அல்லது இரண்டு ஊழல என்றால் நினைவில் வைத்துக்கொள்ளலாம். நாளுக்கு ஒரு  ஊழல், 1.86 லட்சம் கோடி, 3 லட்சம் கோடி ஊழல் என்றால் இந்திய குடிமகனால் அனைத்தையும் எப்படி நினைவில் வைத்துகொள்ளமுடியும்.ஆனாலும் எந்த நேர்விலும்  முதல் தடவை என்பதற்கு ஒரு மதிப்பு உண்டு. உதாரணமாக கல்லூரியில் முதல் நாள், முதல் காதல், முதலிரவு, etc என்பது போல. அதுபோல சுதந்திர இந்தியாவின் ஊழல் வரலாற்றில் முதல் ஊழல் எது என்று அறிய நமக்கெல்லாம் ஒரு ஆவல் இருக்கும். அந்த பெருமையை  1948 ல் நடந்த  ராணுவ ஜீப் ஊழல் தட்டிச்செல்கிறது.

அப்போது பிரிட்டனின் இந்திய ஹைகமிஷனராக பணிபுரிந்த  V.K. கிருஷ்ண மேனன் விதிமுறைகளை மீறி ராணுவத்திற்கு ஜீப் வாங்கும் எண்பது லட்ச ரூபாய்க்கான ஒப்பந்தத்தில் வெளிநாட்டு நிறுவனத்துடன் கையேழுத்திட்டார்.  அப்போது இந்திய ராணுவத்திற்கு 4603 ஜீப்கள் தேவைப்பட்டது. எண்பது லட்ச ரூபாய்க்கு 1500 ஜீப்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்திற்கு பின் ஒன்பது மாதங்களாகியும் ஜீப்கள் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனம் ஜீப்களை ஒப்படைக்கும் முன்பே மொத்த பணத்தின் பெரும் பகுதி அந்த  நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. 1949 ல் 155 ஜீப்கள் மட்டும் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. அப்போதைய பிரதமர் அவற்றினை இந்திய ராணுவம் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தித்தினார்.

இந்த ஊழலைப் பற்றி விசாரிக்க நேரு அரசினால் அனந்தசயனம் ஐயங்கார் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த விசாரனை கமிஷன் தனது விசாரணை அறிக்கையில் நீதிமன்ற விசாரணைக்கு சிபாரிசு செய்தது. எதிர்கட்சிகளும் நீதிமன்ற விசாரணையை கோரினர். ஆனால் நேரு நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த் பல்லாப் பந்த்  செப்டம்பர் 30, 1955 ல் ஒரு அறிக்கையினை வெளியிட்டார். அதன்படி ஜீப் ஊழல் வழக்கு முடிக்கப்படுவதாகவும், எதிர்கட்சிகள் திருப்தி அடையாவிட்டால்  இப்பிரச்சினையை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். 

இச்சம்பவத்தில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் V.K. கிருஷ்ண மேனன் பிப்ரவரி  3,1956  அன்று நேருவின் அமைச்சரவையில் இலாகா இல்லாத அமைச்சராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். பின்னாளில் நேருவின் நம்பிக்கைக்கு உரிய நண்பராக  V.K. கிருஷ்ண மேனன் உருவானார். இதில் வேதனையான விஷயம், பின்னாளில் இதே V.K. கிருஷ்ண மேனனை பாதுகாப்பு துறை அமைச்சராகவும் நேரு நியமித்தார்.

மேற்கண்ட சம்பவத்திலிருந்து நமக்கு ஒரு படிப்பினை கிடைக்கிறது. ஊழல் என்பது காங்கிரசின் இரத்தத்தில் ஊறியது. ஊழல் செய்தவர்களுக்கு மேலும் பதவிகளை கொடுத்து உற்சாகப்படுத்தும் கட்சி காங்கிரஸ். மக்களின் எண்ணங்களுக்கு சற்றும் மரியாதை அளிக்காத கட்சி காங்கிரஸ். 1948 – ல் தொடங்கிய காங்கிரசின் இந்த ஊழல் ஸ்டைல்   2012 – லும் மாறவில்லை. 2G ஊழலில் சிக்கிய ராஜா, கனிமொழி, காமன்வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடி ஆகியோரை Parliamentary Standing Committee உறுப்பினர்களாக தற்போது நியமித்துள்ள  மன்மோகன் அரசின் நடவடிக்கையை இதற்கு உதாரணமாக கூறலாம். வரலாறு எவ்வளவு முக்கியம் என்று இப்போது நமக்கு புரிகிறது.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

3 கருத்துகள்:

  1. காங்கிரஸை கடுமையாக விமர்சிக்கும் தாங்கள் PJP யைப் பற்றி வாயே திறப்பதில்லையே. ஏன்? விமர்சகன் என்றால் இருதரப்பையும் அல்லவா விமர்சிக்க வேண்டும்? பிஜேபி ஆளும் மாநிலங்களில் தவறேதும் நடக்கவில்லையா? ஊழலேதும் நடைபெறவில்லையா? அதைப் பற்றி பேச மாட்டேன்கிறீர்களே.

    பதிலளிநீக்கு
  2. துரை சார்! இப்பொழுது ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் தலைமையிலான அரசுதான்! சுதந்திரத்திற்கு பின் இந்தியாவை பெரும்பாலும் ஆண்டது காங்கிரஸ் கட்சிதான். பிஜேபி ஆளும் மாநிலங்களில் தவறுகள் நடந்தாலும் அதை தட்டி கேட்கும் பொறுப்பும், உரிமையும் மத்திய அரசிற்கு உண்டு. (சிபிஐ மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தானே உள்ளது!) ஏன்! மாநில அரசை கலைக்கும் அதிகாரம் கூட மத்திய அரசிற்கு உண்டு. எனவே அனைத்திற்கும் மத்திய அரசே பொறுப்பு ஏற்கவேண்டும். பிஜேபி மத்தியில் ஆட்சிக்கு வந்து ஊழல் செய்தாலும் அதை பற்றி விமர்சனம் செய்யப் போவது உறுதிதான். அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் வேண்டாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? சந்தோஷம். ஆனால் ஒன்று. பிஜேபி வந்தால் கண்டிப்பாக உங்களது தளம் உற்று கவனிக்கப்படும்.

      நீக்கு