பாகிஸ்தானை
சேர்ந்த 14 வயது சிறுமி மலாலா யூசுப்சாய் என்பவரை சுட்டு கொல்ல முயற்சி
செய்த செயலை தலிபான் தீவிரவாதிகள் நியாயப்படுத்தி
உள்ளனர். தலிபான் அமைப்பினை தாக்கி பேசியதாலும், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை ஆதரித்து பேசியதாலும் அச்சிறுமியை கொலை செய்ய முடிவு செய்ததாக தலிபான் தெரிவித்துள்ளது. பெண் குழந்தைகளின் கல்வி குறித்த முக்கியத்துவத்தையும், தலிபான்களின் கொடுமைகளையும் தொடர்ந்து தனது ப்ளாக்கில் யூசுப்சாய் எழுதிவந்தார். அக்டோபர் 12,2012 அன்று பள்ளிக்கு சென்று திரும்பும்போது தலிபான் தீவிரவாதியால் தலையிலும், கழுத்திலும் யூசுப்சாய் சுடப்பட்டார். பாகிஸ்தான் மருத்துவர்கள் அவரின் கழுத்தில் இருந்த புல்லட்டை நீக்கிவிட்டாலும், தொடர் சிகிச்சைக்காக அவர் தற்போது அவர் பிரிட்டன கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

சேர்ந்த தலிபான் அமைப்பு யூசுப்சாயை
மேற்கு நாடுகளின் உளவாளி என்று குற்றம்சாட்டியுள்ளது. தலிபான் அமைப்பு தனது
அறிக்கையில் யூசுப்சாய் தனது செயலுக்கான பரிசினை பெற்றுள்ளார் என்றும்,
எதிரிகளுக்கு உளவு வேலை செய்யும் எவரையும்
கொல்ல இஸ்லாம் உத்தரவிடுகிறது என்றும் தெரிவித்துள்ளது. யூசுப்சாய் தொடர்ந்து
தலிபான் அமைப்பின் மதிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், புனித
போராளிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்ததாகவும், இஸ்லாமுக்கும், இஸ்லாமிய
படைகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யும் எவரும் கொல்லப்படவேண்டும் என்று குர்ரான்
கூறுவதாகவும் தெரிவித்தனர். தலிபான் அமைப்பிற்கு எதிராக பேசியதால் அவரை கொல்ல
முயற்சி செய்யவில்லை என்றும், அந்நியயர்களுடன்
வெட்கமின்றி பழகியதாலும், ஒபாமாவை ஆதரித்து பேசியதாலுமே கொல்ல முடிவு
செய்ததாக தலிபான் தெரிவித்துள்ளது. இஸ்லாமுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் ஒரு
குழந்தை கூட கொல்லப்படவேண்டும் என்று ஷரியத் சட்டம் கூறுவதாக தலிபான்
தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்திற்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் முழுக்க ஆங்காங்கே போராட்டங்களும்,
மெழுகுவர்த்தி ஏற்றும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. ஆனாலும் அநேக பாகிஸ்தான் அரசு அதிகாரிகள்
இத்தாக்குதல் சம்பவத்திற்கு காரணமான தாலிபானை வெளிப்படையாக விமர்சிக்க
தயங்குகின்றனர். தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க பாகிஸ்தான்
அரசு தயங்குவதே இதற்கு காரணம்.
இதுபோன்ற
சம்பவங்களை மதத்தினால் நியாயப்படுத்தும் தலிபானின் முயற்சியை எவரும்
ஆதரிக்கக்கூடாது என்பதே நடுநிலையாளர்களின் கருத்து. இதுபோன்ற செயலை கண்டுகொள்ளாமல்
இருப்பது கூட தலிபானின் குற்ற செயலுக்கு துணை போவதற்கு சமம்தான். எனவே
அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறோம் என்று காரணம் கூறி தலிபானை நியாயப்படுத்தும் எவரும் அறியாமையினால்
அல்ல , தெரிந்தே தவறு இழைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
Tweet | |||||
//இதுபோன்ற செயலை கண்டுகொள்ளாமல் இருப்பது கூட தலிபானின் குற்ற செயலுக்கு துணை போவதற்கு சமம்தான்//
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள்.
உங்க பதிவுக்கு பின்னோட்டமிட பின்னோட்ட பெட்டி தோன்ற சிரமபடுகிறது. சரி செய்யுங்கள்.
தங்களின் கருத்துரைக்கு நன்றி! பின்னோட்ட பெட்டி பிரச்சினையை சரி செய்ய முயற்சி செய்கிறேன் சார்!
நீக்குஅமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறோம் என்று காரணம் கூறி தலிபானை நியாயப்படுத்தும் எவரும் அறியாமையினால் அல்ல , தெரிந்தே தவறு இழைக்கிறார்கள் என்பதுதான் உண்மை.////
பதிலளிநீக்குஉண்மைதான்.
தங்களின் கருத்துக்கு நன்றி!
நீக்குவர வர வஹாபி ஆத்ரவாளர் தாலிபான் ஆவார். சுவனப்பிரியன் கவனத்துடன் இருக்கோணும்
பதிலளிநீக்குஅன்புடன்,
டோண்டு ராகவன்
நான் அவனில்லை!
பதிலளிநீக்கு