KP என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன்
விடுதலைபுலிகள் இயக்கத்தின் கடைசி தலைவர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்தியாவால் தேடப்பட்டு வரும் 58 வயது நபர். விடுதலைபுலிகளின் ஆயுத கொள்முதலில்
முக்கிய பங்காற்றியவர் பத்மநாதன். விடுதலைப்
புலிகளின் தலைவரான பிரபாகரனின் மரணத்திற்கு பின் தன்னை தானே
விடுதலைபுலிகளின் தலைவராக அறிவித்துக்கொண்டார். போருக்கு பின் சில மாதங்கள்
கழித்து மலேசியாவில் அவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.
இலங்கை
ராணுவ காவலில் இருந்து தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய
இலங்கை பாதுகாப்பு துறை மீடியா சென்டரின் தலைவர் லக்ஷ்மன் ஹலுகல்ல (Lakshman
Hulugalle) பத்மநாபன் இனி ராணுவ
கட்டுப்பாட்டில் இல்லை என்றும், அவர் இனி தன்னுடைய NGO அமைப்பின் மூலம் மக்களுக்கான
நலத் திட்ட பணிகளை சுதந்திரமாக செய்யலாம் என்றும் அறிவித்தார்.
லக்ஷ்மன்
மேலும் தெரிவிக்கையில் பத்மநாதன் தற்போது அரசு சாரா அமைப்பு ஒன்றினை நடத்தி
வருவதாகவும், அதன்மூலம் அவர் மக்கள் நலப்பணி திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும்,
அவர் தன நடவடிக்கைகளை சுதந்திரமாக மேற்கொள்ளலாம் என்று கூறினார்.
போரினால்
பாதிக்கப்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட
பணிகளை மேற்கொள்ள அவருக்கு முழு உரிமை உண்டு என தெரிவித்த லக்ஷ்மன் அவருடைய NGO அமைப்பு வருங்காலத்தில் அத்தகைய பணிகளில்
ஈடுபடும் என்றும் தெரிவித்தார்.
ராஜீவ்
காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் குற்றவாளியான பத்மநாதனுக்கு எதிராக இந்தியாவின்
முயற்சியால் இன்டர்போல் ஏற்கனவே கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து
நிருபர்கள் கேட்டபோது இப்பொழுது பத்மநாதன் எந்தவிதமான காவலிலும் இல்லை என்று
லக்ஷ்மன் தெரிவித்தார். மேலும் பத்மநாதன் மீது நீதிமன்றத்தில் எந்த வழக்குகளும்
இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பத்மநாதன்
விடுதலை செய்யப்பட்டது இந்தியாவிற்கு உடன்பாடான செயல்தானா?. இந்தியாவின் ஏற்புடன்
அவர் விடுதலை செய்யப்பட்டிருந்தால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இந்தியாவின் நிலை
என்ன?. இலங்கையின் இச்செயல் இந்தியாவுக்கு
ஏற்பு இல்லை என்றால் பத்மநாதனை ஒப்படைக்கும்படி இந்தியா இலங்கையை வற்புறுத்துமா?.
இன்டர்போல் மூலம் வெளியிடப்பட்ட கைது வாரன்ட்டின் நிலை என்ன?. இன்னும் சில நாட்கள்
பொறுத்திருந்தால் பல அரசியல் பேரங்களின்
உண்மைகள் வெளிவரத்தொடங்கும். அதுவரை பொறுத்திருப்போம்.
Tweet | |||||
நீங்க ரா-ல எதும் வேலை பார்க்குறீங்களா? இல்ல. இப்படி தோண்டி துருவி எழுதறதப் பார்த்து சந்தேகம் வந்துட்டுது. நச் பதிவு. கேள்விகளுக்கு விடை கிடைக்குமா? பார்க்கலாம்.
பதிலளிநீக்குகண்டிப்பாக விடை கிடைக்கும், அதில் சந்தேகமே வேண்டாம். தங்கள் கருத்துரைக்கு நன்றி!
பதிலளிநீக்குEna thuroki mathiri theriuthu
பதிலளிநீக்கு