திங்கள், 15 அக்டோபர், 2012

இளவரசர் ஹாரிக்கு ஆதரவாக இங்கிலாந்து மக்களின் நிர்வாண சல்யூட் இயக்கம்!(18+)




லாஸ் வேகாஸில் எடுக்கப்பட்ட இளவரசர் ஹாரியின் நிர்வாண புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வெளியான சம்பவம்  இங்கிலாந்து அரச குடும்பத்திற்கும், ஹாரிக்கும் பெரும் தர்மசங்கடத்தை கொடுத்தன. ஆனாலும் இளவரசர் ஹாரிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இங்கிலாந்து ராணுவத்தினரும், பொதுமக்களும் நிர்வாணமாக ஹாரிக்கு சல்யூட் செய்வது போல்  தமது படங்களை முகநூலில் வெளியிட்டு வருகின்றனர். இந்த முகநூல் ஆதரவு இயக்கத்திற்கு Support Prince Harry With A Naked Salute!’ என்றும் பெயரிட்டுள்ளனர். இந்த ஆதரவு இயக்கத்தில் இதுவரை 33,000 க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் மக்கள் இணைந்து தமது நிர்வாண படங்களை முகநூலில் வெளியிட்டுள்ளனர். இதில் ஆப்கானிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் ராணுவத்தினரும் தமது நிர்வாண படங்களை வெளியிட்டுள்ளனர். ராணுவத்தினர் நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளதற்கு பிரிட்டிஷ் ராணுவம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? எனபது தெரியவில்லை

தற்போது ஹாரிக்கு ஆதரவாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவத்தினரும் நிர்வாணமாக தமது படங்களை முகநூலில்  வெளியிட்டு வருகின்றனர். தற்போது ஹாரிக்கு ஆதரவாக www.Salute4Harry.co.uk என்ற இணையதளமும் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரரான ஜோர்டான் வைலி மற்றும் அவரது நண்பர் லீ கிர்க்டன் ஆகியோரால் இத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. ஹாரிக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பும் எவரும் இத்தளத்திற்கு சென்று தமது நிர்வாண படத்தை பதிவேற்றம் செய்துகொள்ளலாம்(!).

வேகாஸில் உள்ள என்கார் வின் ஹோட்டலில் நிர்வாணமாக இரண்டு இளம் பெண்களுடன் பில்லியர்ட்ஸ் விளையாடுவதை போல் வெளியான இளவரசர் ஹாரியின் படங்கள் குறித்து வைலி தெரிவிக்கையில் இச்செயலுக்காக ஹாரி விமர்சிக்கப்படுவது மிகவும் கொடுமையானது ஆகும் என்றும் ஏனென்றால்  ஹாரியும் ஒரு இளைஞர்தான் என்றார். மேலும் முகநூலில் வெளியான இப்படங்கள் ஹாரியை சந்தோஷப்படுத்தும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.


























More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

1 கருத்து:

  1. நம்ம ஆட்களுக்கு போடுறத காட்டிலும் அவுக்குறதுதான் ரொம்ப பிடிக்கும்போல. இதுதான் முதலாம் நிர்வாணப் போர்.

    பதிலளிநீக்கு