புதன், 16 ஜூலை, 2014

ஈராக்கிலிருந்து இந்திய பணயக்கைதிகளை மீட்ட மோடி அரசின் ரகசிய திட்டம்!

ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிக் கொண்ட இந்திய பணயக்கைதிகளை மீட்க இந்திய அரசு  மேற்கொண்ட  இரகசிய திட்டம் தற்போது வெளியாகியுள்ளது. ஈராக்கில் Islamic State of Iraq and Syria (ISIS) தீவிரவாதிகளிடம் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான இந்திய பணயக்கைதிகளை மீட்டதில் முக்கிய பங்கு வகித்தவர் தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல் ஆவார்.
இந்திய வெளியுறவுத்துறை  ISIS தீவிரவாதிகளை இது சம்பந்தமாக நேரடியாக தொடர்பு கொள்ள முயன்றபோது அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே பணயக்கைதிகளை மீட்கும் முயற்சியில் அஜித் தோவல் ஈடுபடுத்தப்பட்டர். அஜித் தோவல் ஏற்கனவே Intelligence Bureau அமைப்பில் இயக்குனராக பணிபுரிந்தவர.
அஜித் தொவல், Intelligence Bureau வின் தற்போதைய இயக்குனர் ஆசிப் இப்ராஹீம் மற்றும் ரா உளவுப்பிரிவின் தலைவர் அலோக் ஜோஷி ஆகியோர் ஜூன் 23 முதல் 25 ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஒருநாள் ஈராக் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் முதற்கட்டமாக ISIS தீவிரவாத அமைப்பு குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் மின்னல் வேகத்தில் புலனாய்வு தகவல்களை சேகரித்தனர். மேற்கண்ட புலனாய்வின் அடிப்படையில் இந்திய பிணயக் கைதிகளின் உயிர்களுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பதை முதலில் உறுதி செய்து கொண்டனர்.
தீவிரவாதிகள் பிணயக்கைதிகளை விடுவிக்கவும் விரும்பவில்லை. ஆனால் அதே சமயத்தில் இந்த விஷயத்தில் இந்தியா போன்ற வெளிநாடுகளை அவர்கள் பகைத்துக்கொள்ளவும் விரும்பவில்லை. அஜீத் தோவல் தன்னுடைய ரகசிய தொடர்புகளை பயன்படுத்தி ISIS தீவிரவாத அமைப்புடன் தொடர்பு கொள்ள முயன்றார். தொடக்கத்தில் ISIS தீவிரவாத அமைப்பின் நோக்கம் என்னவென்று theriதெரியாமலிருந்தது.  ஆனால்  ISIS அமைப்பு இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு எடுக்காது என்பது உறுதியானதால், இப்பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய  மூன்றாம் தரப்பினை ஏற்பாடு செய்வதற்கு அஜித் தோவல் முயற்சிகளை ஆரம்பித்தார்.
இந்த விஷயத்தில் ஈராக் அரசின் உதவிகளை கேட்பது என்பது எந்த பலனையும் தராது என்பதை அஜித் தோவல் குழுவினர் அறிந்திருந்தனர். ஏனெனில் சன்னி தீவிரவாத குழுவான ISIS  வின் முக்கிய எதிரியே ஷியா முஸ்லிம்கள் தலைமையில் செயல்படும் ஈராக் அரசாங்கம்தான். எனவே சவுதி அரேபியா மற்றும் சிரியா நாடுகளில் செயல்பட்டு வரும் ISIS அமைப்பின் ஆதரவு குழுக்களை நாட இந்தியக் குழு முடிவு செய்தது. அஜித் தோவல் சிரியாவிற்கு சென்று ISIS  அமைப்பின் ஆதரவு குழுக்களுடன் தொடர்பு ஏற்படுத்த முயன்று கொண்டிருந்தபோது, Intelligence Bureau இயக்குனர் ஆசிப் இப்ராகிம் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை சவூதி அரேபிய நாட்டில் உள்ள ISIS  அமைப்பின் ஆதரவு குழுக்களுடன் தொடர்பு கொள்ள முயன்றது. இம்முயற்சிகளுக்குப்பின் ஒரு வாரத்திற்கு பின்பே ISIS அமைப்புடன் பேச்சு வார்த்தை தொடங்கியது.   
இப்பேச்சு வார்த்தையின் முடிவில், இந்திய பணயக்கைதிகளை பகுதி, பகுதியாக விடுவிக்க ISIS  அமைப்பு சம்மதித்தது. இந்திய பிணைய கைதிகளை விடுவிப்பதற்காக பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மோடி அரசினால் தேசிய பாதுகாப்பு செயலராக நியமிக்கப்பட்ட அஜித் தோவலின் முதல் ராஜதந்திர வெற்றி இதுவாகும். இதன் மூலம் மோடி அரசிற்கு நல்லதொரு தொடக்கத்தையும் அவர் அளித்துள்ளார். மேலும் மோடி அரசு பத்திரிக்கைகளுக்கு அரசின்  செயல்பாடுகள் குறித்த எந்த வித செய்திகளையும் தருவதில்லை எனவும் குற்றச்சாட்டு உண்டு. இந்த பணயக்கைதிகள் மீட்பு விஷயத்திலும் அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பது பற்றி மோடி அரசு கடைசி வரை வாயை திறக்கவில்லை. அரசின் இத்தகைய ரகசியம் காக்கும் நடவடிக்கையும் இவ்விஷயத்தில் பயன் அளிக்கக் கூடியதாகவே இருந்தது. ஏனெனில் 2008 ஆம் ஆண்டு மும்பை தாஜ் ஹோட்டல் தாக்குதலின் போது பத்திரிக்கை மற்றும் மற்றைய மீடியாக்களின் செயல்பாடுகள் தீவிரவாதிகளுக்கு பல்வேறு வகையில் உதவியதை நாம் காண முடிந்தது. மேலும் 1999 ஆம் ஆண்டு காந்தஹார் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானக் கடத்தலின் போதும் பத்திரிக்கை செய்திகள் அரசின் மீது மிகப்பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியதும், அதனால் அரசு முழுத்திறமையுடன் செயல்பட முடியாமல் போனதும் வரலாற்று உண்மைகள். எனவே இந்த முறை முந்தைய வரலாற்று பிழைகளை சரிசெய்து சிறப்பாக செயல்பட்டு வெற்றி கண்ட மோடி மற்றும் அவரது சகாக்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும்.   
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

9 கருத்துகள்:

  1. தாஜ் ஹோட்டல் தாக்குதல், விமானக் கடத்தலின் போதெல்லாம் பத்திரிக்கை செய்திகள் பயங்கரவாதிகளுக்கே உதவின என்பது உண்மை

    பதிலளிநீக்கு
  2. அருமை.. தெளிவான பதிவு.. பகிர்வினிற்கு நன்றி..

    Happy Friendship Day 2014 Images

    பதிலளிநீக்கு
  3. I have heard form many people that they were looking for methods to hack brave frontier game as this game is
    most played game in online community. But don't loose your hope and you can get unlimited amount of resource used in this game.

    பதிலளிநீக்கு
  4. Nice blog. I am indian and i get happy whenever i meet any indain on internet.
    code amazon free

    பதிலளிநீக்கு
  5. You will find a lot of approaches after visiting your post.I like your style of writing ...
    free itunes music codes

    பதிலளிநீக்கு