செவ்வாய், 15 ஜூலை, 2014

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் டாப் 10 கார்கள் -லேட்டஸ்ட் நிலவரம்!

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியாவில் அதிக அளவில் விற்பனையான டாப் 10 கார்களின் வரிசை பட்டியலை Society of Indian Automobile Manufacturers (SIAM) என்ற  அமைப்பு தற்போது வெளியிட்டுள்ளது. நம் வீட்டு கார் அப்பட்டியலில் இடம் பெற்றிருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்களும், புதிய கார் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களும், சும்மா தெரிந்து கொள்ளலாம்  என்ற ஆர்வத்தில் உள்ளவர்களும்   மேலே தொடர்ந்து படிக்கலாம்.  இது தரத்திற்கான பட்டியல் இல்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
Maruti Alto
Rank: 1


மே மாதத்தில் வெறும் 17,311  கார்களே விற்றிருந்த நிலையில், ஜூன் மாதத்தில் இதன் விற்பனை கிடு கிடுவென அதிகரித்து மொத்தம் 30,499 கார்கள் விற்றுள்ளன. இது கிட்டத்தட்ட சென்ற மாதத்தை விட 76 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் மாருதி அல்டோ ஜூன் மாத பட்டியலில் முதலிடத்தை அடைந்துள்ளது.

Maruti Wagon R
Rank: 2
Maruti Wagon R  மே மாத பட்டியலில் தனக்கு முன் இருந்த Maruti Swift Dzire மற்றும் Maruti Swift  ஆகிய கார்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ஜூன் மாத பட்டியலில் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது., ஜூன் மாதத்தில் விற்ற கார்களின் எண்ணிக்கை 17,119 ஆக இருந்தது. மே மாதத்தில் விற்ற கார்களின் எண்ணிக்கை 11,757.

Maruti Swift Dzire
Rank: 3
இந்தியாவின் மிகப்பிரபலமான காரான Maruti Swift Dzire மே மாத பட்டியலில் 18,953 கார்கள் விற்று முதலிடத்தில் இருந்தது. ஆனால் ஜூன் மாதத்தில் விற்பனையில் சரிந்து வெறும் 15,990 கார்களே விற்று பட்டியலில் மூன்றாம் இடத்தை அடைந்துள்ளது.  



Maruti Swift
Rank: 4
மே மாதத்தில் 17,936 கார்கள் விற்று இரண்டாம் இடத்தை பெற்றிருந்த Maruti Swift, ஜூன் மாதத்தில் வெறும் 13,632 கார்களே விற்று பட்டியலில் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட 24 சதவீத விற்பனை சரிவாகும்.



Mahindra Bolero
Rank: 5
Mahindra Bolero கார்களின் விற்பனை ஒவ்வொரு மாதமும் சரிந்த நிலையிலேயே உள்ளது. ஆயினும் விற்பனையில் இந்த மாதம் Hyundai Grand i10 ஐ விட முன்னணியில் உள்ளது. மே மாதத்தில் 8,846 கார்கள் விற்றிருந்த நிலையில், ஜூன் மாதத்தில் வெறும் 7,909 கார்களே விற்றுள்ளன.

Hyundai Grand i10
Rank: 6
Hyundai Grand i10 காரானது மிகக்குறுகிய காலத்தில் 1,00,000 க்கும் அதிகமாக விற்பனையான கார் என்ற பெருமை உடையது. மே மாத விற்பனை 9,317  கார்கள். ஜூன் மாதத்தில் விற்பனை சரிந்து விற்ற கார்களின் எண்ணிக்கை 7,901 ஆக இருந்தது. எட்டு கார்கள் மட்டுமே Mahindra Bolero ஐ விட குறைவாக விற்று ஆறாம் இடத்தை                                                அடைந்துள்ளது.
Honda City
Rank: 7
மே மாத பட்டியலில் 7,216 கார்கள் விற்று எட்டாம் இடத்தில் இருந்த Honda City,  ஜூன் மாதம்  7,715  கார்கள் விற்று ஏழாம் இடத்திற்கு முன்னேறி உள்ளது.




Honda Amaze
Rank: 8
Honda Amaze மே மாதத்தில் 4,750 கார்கள் விற்று பட்டியலில் 14 வது இடத்தில் இருந்தது. ஆனால் ஜூன் மாதத்தில் இதன் விற்பனை கிடு கிடுவென உயர்ந்து  7,073 கார்கள் விற்றுள்ளன. இதன் மூலம் டாப் 10 பட்டியலில் முதன் முறையாக இடம் பிடித்து எட்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.



Hyundai Xcent
Rank: 9
Hyundai Xcent  கார் மே மாத பட்டியலில் 7,792  கார்கள் விற்று ஏழாம் இடத்தை பெற்றிருந்தது. ஆனால் ஜூன் மாதத்தில் இதன் விற்பனை  7,069 கார்களாக சரிந்து பட்டியலில் ஒன்பதாம் இடத்தைப் பெற்றுள்ளது.




Hyundai Eon
Rank: 10

பட்டியலில் பத்தாம் இடத்தைப் பெற்றிருப்பது Hyundai Eonமே மாதத்தில்  6,300  கார்கள் விற்று ஒன்பதாம் இடத்தில் இருந்தது. ஜூன் மாதத்தில் பத்தாம் இடத்தைப் பெற்றாலும், காரின் விற்பனையானது அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் 6,579 கார்கள் விற்பனையாகியுள்ளன. 
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்:

  1. I think first time Honda's two cars in top 10 after long time.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். சென்ற ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியான பட்டியலில் ஹோண்டா கார்கள் ஒன்று கூட டாப் 10 ல் இடம் பெறவில்லை. சென்ற ஆண்டு பட்டியல் காண http://writervijayakumar.blogspot.com/2013/07/10.html

      நீக்கு