சனி, 3 நவம்பர், 2012

டாப் 10 தமிழ் நடிகர்களின் லேட்டஸ்ட் சம்பள விவரம்!


ஆண்களிடம் சம்பளத்தையும், பெண்களிடம் வயதையும் கேட்க கூடாது என்று சொல்வார்கள். ஆனால் இந்த இரண்டையும் அறிந்து கொள்வதில் தான் நம்மில் பலருக்கு ஆர்வம அதிகம்.  அதிலும்  தமிழ்   நடிகர்களின் சம்பளத்தை அறிந்து  கொள்வதில்   நமக்கு   மிகுந்த  ஆர்வம  உண்டு. ஏனென்றால் அதன்  மூலம்  மட்டுமே  நாம்  நடிகர்களின்    மார்க்கெட் நிலவரத்தை அறிந்துகொள்ள முடியும். தமிழ் சினிமாவின் பட்ஜெட் இன்று எங்கேயோ போய்விட்டது. அதிலும் தமிழ் சினிமா நடிகர்களின்  சம்பளம் கற்பனைக்கும்  எட்டாத  அளவில்  உள்ளது.  படம் வெற்றி அடைந்தால் சம்பளத்தை கூட்டும் நடிகர்கள், படம் தோல்வி அடைந்தால் சம்பளத்தை குறைப்பதில்லை. தமிழ் நடிகர்களின் சம்பளம்  ரகசியமாக  இருந்தாலும் தோராயமாக நாம்  அவற்றை  கணக்கிட முடியும்.    ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில்  மட்டுமல்ல  இந்திய  நடிகர்களிலேயே  அதிக    சம்பளம் வாங்கும்    நடிகராக   உள்ளார்.    அதுமட்டுமல்ல   ஆசியாவிலேயே இரண்டாவது  அதிக  சம்பளம்  வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் உள்ளார். எனவே  முதலாம் இடத்திற்கு இங்கு போட்டி இல்லை. ஆனால் அடுத்த ஒன்பது இடங்களுக்கு மிகுந்த போட்டி உள்ளது. எனவே   இந்த ஒன்பது இடங்கள்  அடிக்கடி  மாறக்கூடியது.   ஒரு நடிகரின் ஒரு படம் வெற்றி அடைந்தால்  சம்பளம்  கூடுவதும்,   தோல்வி  அடைந்தால்   சம்பளம் குறைவதும் ரேங்க் பட்டியலை மாற்றிவிடக்கூடும்.   இது  இப்போதைய நிலவரம்தான். அடுத்து வெளிவரக்கூடிய படங்களின் வெற்றி தோல்விகள்  இந்த தரப்பட்டியலை மாற்றலாம்.


இடம்
நடிகர்
புகைப்படம்
சம்பளம் (கோடியில்)
குறிப்பு
1
ரஜினிகாந்த்
 
    35 – 40
எந்திரன் படத்திற்கு 
சம்பளம் உட்பட 
 லாபத்தில் பங்கு 
என ரஜினி பெற்றது 
ரூ. 54  கோடி 
என்கிறது சினிமா
வட்டாரம்.
2
சூர்யா
 
           24
மாற்றான் படத்திற்கு 
சூர்யா பெற்ற 
சம்பளம்
24 கோடியாம்.
3
விஜய்
 
           20
யோகன் படத்திற்கு விஜய்க்கு பேசப்பட்ட சம்பளம் 20 கோடி.
4
கமல்ஹாசன்
19.5
கமல்ஹாசன் சம்பள
விவரம் தெளிவாக
தெரியவில்லை. விஸ்வரூபம் 
படத்திற்கு
கமலின் சம்பளம்
19.5 கோடி என்கிறது
சினிமா வட்டாரம்.
ஆனாலும் மற்றொரு
தரப்போ ரூ.45 கோடி
என்கிறது.
5
அஜித்
 
       14 – 16
பில்லா 2 படத்திற்கு 
அஜித் பெற்ற சம்பளம்  
14 முதல்  16 கோடி 
வரை இருக்கலாம்
என்கிறது சினிமா
வட்டாரம்.
6
விக்ரம் 
           10
சமீபத்திய சில 
படங்கள் தோல்வி
அடைந்ததால் 
விக்ரமின் சம்பளம்
 ரூ. 10 கோடிதான்.
7
கார்த்தி
 
         6 – 8
கார்த்தி நடிக்கும்
புது படத்திற்கு 6 
முதல் 8 கோடி 
வரை சம்பளம் 
பேசப்பட்டுள்ளதாக தகவல்.
8
தனுஷ்
 
           5
தனுஷின் 3 எதிர்பார்த்த அளவு வெற்றி அடையாததால் அவருடைய சம்பளம்  4.5 முதல்  5 கோடி வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
9
சிம்பு
 
           4
சிம்புவின் சமீபத்திய படங்கள் வெற்றியடையாவிட்டாலும் அவரின் சம்பளம் 3 முதல்  4 கோடியாக உள்ளது.
10
விஷால்
 
           2
விஷாலின் சம்பளம் இரண்டு கோடியாக உள்ளது.
More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

2 கருத்துகள்: