உலகப்பிரசித்தி பெற்ற சீனாவை சேர்ந்த Hurun நிறுவனம் இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியலை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. செப்டம்பர்,22 ,2012
அன்றைய சொத்து மதிப்பினை
அடிப்படையாக கொண்டு இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. (அதாவது செப்டம்பர்,22 ,2012
அன்று அமெரிக்கன் டாலருக்கெதிரான இந்திய
ரூபாயின் மதிப்பு ரூ.54/- எனபது
அடிப்படை அளவீடாகும்) அவற்றுள் முதல் 10 இடங்களை பிடித்த
பணக்காரர்கள் பட்டியல் இதோ!
1) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சேர்மன் முகேஷ்
அம்பானி $19.3 பில்லியன்
சொத்துக்களோடு முதலிடத்தை பிடித்துள்ளார்.
2) இரண்டாவது இடத்தை ஸ்டீல் நிறுவன தொழிலதிபர் L
N மிட்டல் வகிக்கிறார். இவரின் சொத்து மதிப்பு $16.9
பில்லியன்.
3) விப்ரோ நிறுவன தலைவர் அசிம் ப்ரேம்ஜி (USD 12.3 பில்லியன்)
4)சன்
பார்மாசுடிகல்ஸ் (Sun Pharmaceuticals) நிறுவன தலைவர் திலிப் சங்கவி (USD 8.5 பில்லியன்)
5) Shapoorji
Pallonji & Co நிறுவன தலைவர் பலோன்ஜி
மிஸ்ட்ரி (USD 7.9 பில்லியன்)
6) எஸ்ஸார் எனர்ஜி நிறுவன தலைவர் ஷாஷி மற்றும்
ரவி ரூயா (USD 7.2 பில்லியன்)
7) கோத்ரேஜ் நிறுவன அதிபர் ஆதி கோத்ரேஜ் (
USD 6.9 பில்லியன்).
8) DLF நிறுவன அதிபர் குஷால் பால் சிங் (USD 6.3 பில்லியன்),
9)கிராசிம் இண்டஸ்ட்ரீஸ் (Grasim
Industries) அதிபர் குமார மங்களம் பிர்லா(USD
5.8 பில்லியன்),
10)பத்தாவது இடத்தை இருவர் வகிக்கின்றனர். HCL
நிறுவன அதிபர் ஷிவ் நாடார் மற்றும் பாரதி
ஏர்டெல் நிறுவன அதிபர் சுனில் மிட்டல். இருவரின் சொத்து மதிப்பும் தலா $ 5.7 பில்லியன் ஆகும்
டாப் 100 பணக்காரர்கள் பட்டியலில் ஆண்களே பெரும்பான்மையாக இடம்பிடித்துள்ளனர்.
பெண்கள் வெறும் 5% மட்டுமே இடம்பிடித்துள்ளனர். அதாவது வெறும் 5 பெண்களே இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். அவர்களுள் சாவித்திரி
ஜிண்டால் $
5.6 பில்லியன் சொத்து மதிப்புகளோடு
முதலிடத்தை வகிக்கிறார். இரண்டாம் இடத்தை பென்னட் கோல்மன் நிறுவன அதிபர் இந்து
ஜெயின் $1.7 பில்லியன்
சொத்து மதிப்புகளோடு வகிக்கிறார். மூன்றாம் இடத்தை தெர்மாக்ஸ் நிறுவன தலைவர் அனு
ஆகா $690 மில்லியன் சொத்துக்களோடு வகிக்கிறார். பயோகான்
நிறுவன தலைவர் கிரண் மசும்தார் ஷா ($600 மில்லியன்) நான்காம் இடத்தையும், ஹிந்துஸ்தான்
டைம்ஸ் நிறுவன அதிபர் ஷோபனா பார்தியா($490 மில்லியன்) ஐந்தாம் இடத்தையும் பெறுகின்றனர்.
2012 –ஆம் ஆண்டில் சொத்து மதிப்பு இறங்குமுகத்தில் உள்ளவர்கள் பட்டியலில் முகேஷ்
அம்பானி, L N மிட்டல், ஷாஷி ரூயா
மற்றும் ரவி ரூயா, குமாரமங்கலம் பிர்லாவின் நிறுவனம் ஹின்டால்கோ மற்றும் சுனில்
மிட்டல் ஆகியோர் உள்ளனர்.
2012 –ஆம் ஆண்டில் சொத்து மதிப்பு ஏறுமுகத்தில் உள்ளவர்கள் பட்டியலில் அசிம் பிரேம்ஜி, திலிப் சிங்வி, பலோன்ஜி
மிஸ்ட்ரி மற்றும் ஷிவ் நாடார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஹுருன்
இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்களுள் 62% பேர் சுயமாக வளர்ச்சியடைந்து (வாரிசு அடிப்படையில்
இல்லாமல்) பட்டியலில் இடம்பிடித்துள்ளார்கள் எனபது குறிப்பிடத்தக்கது. சுயமாக வளர்ச்சியடைந்த
தொழிலதிபர்களுள் ஒரே ஒரு பெண் தொழிலதிபர்
கிரண் மசும்தார் ஷா மட்டுமே இடம்பிடித்துள்ளார்.
டாப் 100
பணக்காரர்களில் 36 பேர் மும்பை
நகரை சேர்ந்தவர்கள். 22 பேர்
டெல்லியை சேர்ந்தவர்கள் மற்றும் 15 பேர் பெங்களூர் நகரை சேர்ந்தவர்கள். 5 பேர் வெளிநாடு வாழ்
இந்தியர்கள். அவர்களில் ஸ்டீல் தொழிலதிபர் L N மிட்டல் முதன்மையானவராக திகழ்கிறார். பட்டியலில் மிக
வயது குறைந்தவராக ஷிவிந்தர் மோகன்சிங் (37 வயது) இருக்கிறார். அதிக வயதானவராக கேசுப் மஹிந்திரா (89 வயது) இருக்கிறார். டாப்
100 பட்டியலின் சராசரி
வயது 62.
டாப் 10 பட்டியலின் சராசரி வயது 65.
எனவே
இதிலிருந்து நமக்கு உணர்த்தப்படும் நீதி என்னவென்றால் இந்தியா பணக்கார
நாடாகிவிட்டது என்பதாகும்!.
Tweet | |||||
ஆம். இந்தியா பணக்கார நாடாகிவிட்டது. இந்தியர்கள்தான் ஏழைகளாகவே இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குஆப்ரேஷேன் சக்சஸ்! பேஷன்ட் டெத்! கதைதான்.
நீக்குஎன் பெயர் எத்தனாவதில் இருக்கிறது?
பதிலளிநீக்குகண்டிப்பாக 700 கோடியில் ஒரு இடமுண்டு சார்!
நீக்கு