காமம்
காதலின் நீட்சியல்ல!
காமம்
காதலின்
உருவ வழிபாடு
உயிர் வடிவம்
உடலும் உயிரான அற்புதம்
சமத்துவ மதம்
ஆழ்நிலை தியானம்
உள்ளங்களின் சமாதி நிலை
இளமை நதியில்
பொங்கி வரும்
காம வெள்ளத்தில்
மூழ்கி முத்தெடுப்போம்
உயிரை உருவாக்கும்
அர்த்தனாரீஸ்வரராகி
கடவுளாவோம்
காமமில்லா காதல்
காதலில்லா காமம்
உயிரில்லா சடம்
காமத்தை
குற்றவாளியாக்கி
காதலை
சிறையிலடைக்காதீர்!
காமம் குற்றமல்ல.
ஆகவே...
வாருங்கள் உலகத்தாரே!
காமத்தைக்
கொண்டாடி
காதலை
கரை சேர்ப்போம்.
Tweet | |||||
//காமமில்லா காதல்
பதிலளிநீக்குகாதலில்லா காமம்
உயிரில்லா சடம்///......அருமை...
காதலின் நீட்சிதான் காமம் சார். சந்தேகமில்லை. காதலில் காமம் கலந்திருக்கும். ஆனால் சமயம் வரும் வரை காத்திருக்க வேண்டும். கழுத்தில் தாலி ஏறும்போதே காமத்திற்கு லைசன்ஸ் கிடைக்கிறது. காமம் மட்டும் இருந்தால் அதற்குப் பேர் காதல் அல்ல. விபச்சாரம். மோகம் தீர்ப்பது மட்டுமே திருமணத்தின் நோக்கமல்ல. அது இரு இதயங்களின் ஆயுள் சிறை. அங்கு அன்புதான் சிறைக் கம்பிகள். ஆயுள் முழுதும் தீர்ந்தாலும் அன்பு குறைவதில்லை. ஆகவே காதலின் நீட்சியே காமம் என்பதே சரி. கவிதை நன்றாக எழுத வருகிறது உங்களுக்கு. தொடருங்கள்!
பதிலளிநீக்குதுரை டேனியல் சார்,
பதிலளிநீக்குதாலி என்ற கட்டுப்பாடு நமக்கு நாமே போட்டு கொண்டது. சங்க காலத்தில் திருமனத்திற்கு முன்பே கலவி கொள்ளும் கந்தர்வ திருமண முறை இருந்துள்ளது உங்களுக்கு தெரியும். மேலும் சங்க இலக்கியங்களிலும், திருக்குறளிலும் காதல், காமம் என்ற இரு சொற்களும் ஒரே பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.காதலும் காமமும் வேறு என்ற வேறுபாடு எப்போது தோன்றியது? நீங்களாவது சொல்லுங்களேன் சார்.காதலில்லா காமம் பிணம போன்றது என்று நானும் கவிதையில் சொல்லி உள்ளேன்.