சனி, 10 மார்ச், 2012

பெரு வெடிப்பு நடக்கும், நம்பிக்கை இழக்காதே!

என்
சகோதரிகள் சீரழிக்கப்பட்டனர்
முலைகள் அறுக்கப்பட்டன
முலைக்காம்புகள் முற்களால் கிழிக்கப்பட்டன
உயிருடன் எரிக்கப்பட்டனர்
கைகள் கட்டப்பட்டு துப்பாக்கியால் சுடப்பட்டனர்
குழந்தைகளும் தப்பவில்லை
வீடுகள் தரைமட்டமானது
திறந்தவெளி சிறையில் கைதிகளாய்
பிள்ளை  இழந்து
தந்தை இழந்து
தாய் இழந்து
சொந்தம் இழந்து
ஆதரவை இழந்து
தலைவனை இழந்து
நாட்டினை இழந்து
அழுவதற்கு கண்ணீரும் இழந்து
மௌனமாய் தமிழ் ஈழம்

மகன் கேட்டான்
அப்பா! நாம் தோற்றுவிட்டோமா?

மகனே!
உயிரை இழந்தோம்
உணர்வை இழக்கவில்லை
இடத்தை இழந்தோம்
இனமானம் இழக்கவில்லை
உடல்களை புதைத்தோம்
லட்சியங்களை புதைக்கவில்லை
லட்சிய புருஷர்கள் சாகலாம்
லட்சியங்கள் சாகாத வரை
தோல்விகள் நமக்கில்லை

ஒவ்வொரு தமிழனும் எரிமலை
இதயத்தில் நெருப்பு குழம்புகளாய்
சுதந்திர வேட்கை
மௌனத்தை தோல்வி என எண்ணாதே!
பெரு வெடிப்பு நடக்கும்
நம்பிக்கை இழக்காதே!

             -கேள்வி பதில் தொடரும்...











More than a Blog Aggregator

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

5 கருத்துகள்:

  1. நிச்சயம் பெருவெடிப்பு நடக்கும். விடிவும் கிடைக்கும். காலம் வரும் வரை காத்திருப்போம்.

    நல்லாருக்கு சார். தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  2. பசிக்கு தன் தாயின் மார் தேடி
    துண்டாய் கிடக்கும் தாயின் முலை பருகும்
    சூதறியா மழலையின் கண்களிலும்
    மரண பயம் கண்டோம்....

    சேற்றில் புரண்டோம்....
    சோறின்றி தவித்தோம்...
    எத்தனை இடர் கண்டும்
    இன்னமும் கண்களில்
    அதே பழைய விடுதலை வேட்கை!

    நிச்சயம் மீண்டும் எங்கள்
    கிழக்கு விடியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் கிஷோகர் அவர்களே

      என் கவிதைக்கு பதிலாக அமைந்தது உங்கள் அழகு கவிதை. நன்றி!

      நீக்கு
  3. விஜி கவிதை அருமை மட்டுமில்லை எமக்கு உத்வேகமும் அளிக்கின்றது

    பதிலளிநீக்கு
  4. நண்பர் revathasan அவர்களுக்கு,

    தங்களின் ஊக்கத்திற்கு நன்றி!

    பதிலளிநீக்கு